வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

முதல் படத்திலேயே படுதோல்வியை சந்தித்த டாப் 5 நடிகர்கள்.. பயங்கர ப்ளாப்பான தளபதியின் நாளைய தீர்ப்பு

Tamil Actors: சினிமாவில் தற்போது டாப் நடிகர்களாக இருக்கும் 5 பேர், இப்போது வேண்டுமானால் வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கலாம். ஆனால் அவர்கள் தங்கள் சினிமா பயணத்தை துவங்கிய முதல் படத்தில் படு தோல்வியை சந்தித்துள்ளனர். அந்த நடிகர்கள் யார் என்பதை பார்ப்போம்.

அருண் விஜய்: நடிகர் விஜயகுமாரின் மகனாக தமிழ் சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த அருண் விஜய், 1995ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான முறை மாப்பிள்ளை படத்தில் செம ஹேண்ட்ஸம் லுக்கில் கதாநாயகனாக அறிமுகமானார். இதில் ராஜாவாக அருண் விஜய்யும், ரமேஷ் ஆக கவுண்டமணியும் நடித்திருப்பார்கள். இவர்கள் இருவரும் இந்த படத்தில் செய்த அட்ராசிட்டி கொஞ்ச நஞ்சமல்ல. இருப்பினும் அருண் விஜய்யின் முதல் படமான இந்த படம் வசூல் ரீதியாக படு தோல்வியை சந்தித்தது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அவர் அடுத்தடுத்து நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து தன்னை முன்னணி நடிகராக நிலை நிறுத்திக் கொள்வதற்கு, தற்போது வரை போராடிக் கொண்டிருக்கிறார்.

விக்ரம்: ஒவ்வொரு படத்திலும் ஏதாவது வெரைட்டி காட்ட வேண்டும் என வெறித்தனமாக நடித்துக் கொண்டிருக்கும் சியான் விக்ரம், கதாநாயகனாக 1990ல் வெளியான ‘என் காதல் கண்மணி’ என்ற படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இதில் செயின் ஸ்மோக்கர் ஆக இருக்கும் விக்ரம் கதாநாயகி ஹேமாவை துரத்தி துரத்தி காதலிப்பார். இதில் விக்ரம் எப்படி தன்னுடைய புகை பிடிக்கும் பழக்கத்தை விட்டு விட்டு காதலி ஹேமாவை திருமணம் செய்து கொள்வார் என்பது தான் படத்தின் கதை. இந்த படத்தின் கதையில் பெரிதாக எந்த சுவாரசியமும் இல்லாததால் படம் வசூல் ரீதியாக பயங்கர பிளாப் ஆனது. இருப்பினும் அடுத்தடுத்த படங்களில் விக்ரம் மிக கவனமாக கதைகளை தேர்வு செய்து தற்போது டாப் நடிகர்களின் லிஸ்டில் இடம் பெற்றுள்ளார்.

Also Read: ராசி இல்லை என ஓரம் கட்டப்பட்ட விஜய் பட ஹீரோயின்.. மார்க்கெட் சரிந்ததால் எடுத்த அதிரடி முடிவு

விஜய்: தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கும் விஜய், ஆரம்ப காலத்தில் பல தோல்விகளை சந்தித்தவர். இவர் சினிமாவில் என்ட்ரி கொடுத்தபோது பெரிதாக யாரும் பொருட்படுத்தவில்லை. பெரும்பாலும் தன்னுடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகரின் படங்களில் மட்டுமே தொடர்ந்து நடித்துக் கொண்டிருந்தார். அதிலும் இவர் கதாநாயகனாக அறிமுகமான நாளைய தீர்ப்பு படம், போஸ்டர் ஒட்டின காச கூட எடுக்க முடியாத அளவிற்கு பயங்கர பிளாப் ஆனது. இந்த படத்தில் விஜய் நடிப்பது அப்பட்டமாகவே தெரியும். நடிப்பில் பெரிதாக எந்த அனுபவம் இல்லாத விஜய், முதல் படத்தில் தட்டுத்தடுமாறி தான் நடித்தார். ‘இவர் மூஞ்சிக்கு எல்லாம் ஹீரோ ஒரு கேடா’ என பலரும் கேலி கிண்டல் செய்தனர். இருப்பினும் அடுத்தடுத்த படங்களில் தன்னையே மெருகேற்றிய விஜய் தற்போது உச்ச நாயகனாக தமிழ் சினிமாவில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார்.

ஹரிஷ் கல்யாண்: இவர் சிந்து சமவெளி என்ற சர்ச்சைக்குரிய படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி, அதன் பிறகு அரிது அரிது என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்த படத்திற்கு வசூல் ரீதியாக எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. அதன் பின் அடுத்தடுத்த படங்களில் தன்னுடைய நடிப்பின் மூலம் ஓரளவு ரசிகர்களின் மனதைக் கவர்ந்த ஹரிஷ் கல்யாண், இரண்டாம் நிலை கதாநாயகனாக பார்க்கப்படுகிறார். இவர் டாப் நடிகர்களின் லிஸ்டில் இடம்பெறுவதற்கு பல படங்களில் கமிட் ஆகி வெறித்தனமாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் விஜய்யின் படம் கிடைக்கும்.. பகிரங்கமாக பேட்டியளித்த நடிகை

கவின்: சீரியல் நடிகரான கவின் 2017 ஆம் ஆண்டு வெளியான சத்ரியன் படத்தில் துணை நடிகராக நடித்திருப்பார். அதன் பின் 2019 ஆம் ஆண்டு வெளியான ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். இவருக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்தார். இந்தப் படம் வியாபார ரீதியாக வெற்றி பெறாமல் பயங்கர அடி வாங்கியது. இருப்பினும் மனம் தளராத கவின் அடுத்தடுத்து ஒரு சில படங்களில் நடித்தாலும் சமீபத்தில் அவருடைய நடிப்பில் வெளியான டாடா திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது.

இவ்வாறு இந்த ஐந்து நடிகர்களுக்கும் தங்களின் முதல் படம் படு தோல்வி படங்களாக அமைந்தது. அதிலும் தளபதி விஜய்க்கு நாளைய தீர்ப்பு எதிர்பார்த்த அளவு வெற்றி பெறாமல் காலை வாரி விட்டது.

Also Read: பூஜையே போடல அதுக்குள்ள ஆரம்பித்த பஞ்சாயத்து.. 200 கோடியால் விஜய்க்கு கிளம்பிய சிக்கல்

Trending News