தமிழ் சினிமாவை பொறுத்த வரை ரசிகர்களின் மனதில் எப்போதும் இடம்பிடிக்க நடிகர், நடிகைகள் மிகுந்த சிரமப்பட்டு வருகிறார்கள். ஆனால் சில படங்களில் ஒரு சில காட்சிகளில் நடித்த நட்சத்திரங்கள் நம் வாழ்வில் மறக்க முடியாத அளவுக்கு அவர்களது முகம் மிகவும் பரிச்சயமாக இருக்கும். அவ்வாறு ஒரு காட்சியிலேயே பிரபலமான 5 நபர்களை பார்க்கலாம்.
நாட்டாமை :
கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் மிகப்பெரிய ஹிட் கொடுத்த படம் நாட்டாமை. இப்படத்தில் கவுண்டமணி மற்றும் செந்தில் ஆகியோரின் நகைச்சுவை ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்தப் படத்தில் ஒரு சீனில் கவுண்டமணிக்கு பெண் பார்க்கும் செல்லும் போது பெண்ணின் அப்பா எந்த ரியாக்சனும் கொடுக்காமல் மிச்சர் சாப்பிட்டுக் கொண்டு இருப்பார். இந்த காமெடி இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.
ராஜகுமாரன் :
ஆர் பி உதயகுமார் இயக்கத்தில் பிரபு, மீனா, கவுண்டமணி, செந்தில் வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராஜகுமாரன். இப்படத்தில் கவுண்டமணி, செந்தில் இருவரும் வடிவேலின் தங்கச்சியை பெண் பார்க்க வருவார்கள். இந்தக் காட்சியில் கால்ல விழுந்தா மட்டும் என் தங்கச்சி உன்னை கட்டிக்குவானு மனப்பால் குடிக்காதே என்ற வடிவேலு காமெடி அல்டிமேட்.
பாஞ்சாலங்குறிச்சி :
பிரபு, மதுபாலா, வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாஞ்சாலங்குறிச்சி. இப்படத்தில் ஒரு காட்சியில் வடிவேலு கடைக்கு சென்று பிடி வாங்கும்பொழுது ஒருவர் பார்த்துக்கொண்டே இருப்பார். பின்பு அந்த நபர் வடிவேலை அடித்து என்ன குறுகுறுனு பாக்குற எனக் கேட்பார். தற்போதும் இந்த காமெடியை ரசிகர்கள் உபயோகிக்கின்றனர்.
சூரிய வம்சம் :
விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார், ராதிகா, தேவயானி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் சூரியவம்சம். இப்படத்தில் சுந்தரராஜனின் சட்டையை மணிவண்ணன் பிச்சைக்காரருக்கு தானமாக கொடுத்துவிடுவார். இப்படத்தில் பிச்சைக்காரனாக நடித்த அந்த நபரும், மகாபிரபு நீங்க இங்கேயும் வந்துடீங்களா என்ற வசனமும் மக்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானது.
என் புருஷன் குழந்தை மாதிரி :
லிவிங்ஸ்டன், தேவயானி, விந்தியா வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் என் புருஷன் குழந்தை மாதிரி. இப்படத்தில் லிவிங்ஸ்டன் ஐ புகழ்ந்து பேச வடிவேலு ஆல் செட் பண்ணி இருப்பார். அதில் ஒரு சிகப்பு சட்டை அணிந்து இருப்பவர் வருங்கால ஜனாதிபதி முருகேசன் என கோஷம் விடுவார். இந்த காட்சி தற்போதும் பல மீம்ஸ் கிரியேட்டர்ஸ் பயன்படுத்தி வருகிறார்கள்.