திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

2022 ஆம் வருடத்தின் 5 சிறந்த நடிகைகள்.. தொட்டதெல்லாம் துலங்கிய ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் சினிமாவில் கடந்த 2022 ஆம் ஆண்டு ரிலீசான படங்களின் வெற்றிகள் சற்று குறைவு தான். இருந்தாலும் நடிகைகள் தங்களது ரசிகர்களை குஷிப்படுத்துவதில் குறையே வைக்கவில்லை என்று தான் சொல்லவேண்டும். அப்படி 2022 ஆம் ஆண்டில் ரசிகர்களின் மனதை கொள்ளைக் கொண்டு கனவு கன்னியாக வலம் வரும் 5 நடிகைகளை பற்றி பார்க்கலாம்.

ப்ரியா பவானி ஷங்கர்: இந்தாண்டு நடிகை ப்ரியா பவானி ஷங்கர் நடிப்பில் திருச்சிற்றம்பலம்,யானை உள்ளிட்ட படங்கள் வெளியானது. தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இவர் நடித்தாரா என்று கேட்கும் அளவிற்கு இப்படத்தில் இவரது காட்சிகள் இடம் பெற்றிருந்தாலும், பாவாடை தாவணி கட்டிய அழகில் இவர் ரசிகர்களை கிறங்கடித்திருப்பார். அடுத்ததாக இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் வெளியான யானை படம் கலவையான விமர்சங்கள் பெற்றிருந்தாலும், இவரின் நடிப்பு பேசப்பட்டது.

Also Read: இனிமேல் சினிமா எனக்கு கனவாகி விடும்.. கடைசியாக டாப் நடிகருடன் ஜோடி போடும் சமந்தா

சமந்தா : நடிகை சமந்தாவிற்கு 2022 ஆம் ஆண்டு அம்சமான ஆண்டாக அமைந்திருந்தாலும், உடல் நல குறைவால் சற்று அவதிப்பட்டார். நடிகை சமந்தா நடிப்பில் இந்தாண்டு பேன் இந்தியா படமாக வெளியான யசோதா திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது. கர்ப்பமான பெண்ணாக வலம் வரும் சமந்தாவின் சண்டை காட்சிகள் அற்புதமாக இருந்தது. புஷ்பா பட ஐட்டம் சாங்கில் ஆடிய சமந்தா, யசோதா படத்தின் மூலமாக, தான் ஒரு சிறந்த நடிகை என்பதை மீண்டும் நிரூபித்தார்.

ஐஸ்வர்யா ராஜேஷ்: 2022 ஆம் ஆண்டில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் ஜமுனா திரைப்படம் மட்டுமே ரிலீசானது. இத்திரைப்படத்தில் கார் ஓட்டும் காட்சிகள், சண்டைக்காட்சிகள், செண்டிமெண்ட் காட்சிகள் என ஜமுனாவாக பின்னி பெடலெடுத்திருப்பார் ஐஸ்வர்யா ராஜேஷ். நயன்தாரா பாணியில் பெண் கதாபாத்திரங்களை மையமாக வைத்த கதைகளை தேர்ந்தெடுத்து ஐஸ்வர்யா ராஜேஷின் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளது.

Also Read: நயன்தாரா இடத்தை பிடிக்கப் போகும் ஐஸ்வர்யா ராஜேஷ்.. ஒரே வாரத்தில் அடுத்தடுத்து வெளியாகும் 3 படங்கள்

நித்யா மேனன்: நடிகை நித்யாமேனன் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 2022 ஆம் ஆண்டு நடித்த அத்தனை படங்களும் ஹிட்டானது.நித்யாமேனன் தமிழில் தனுஷின் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் ஷோபா கதாபாத்திரத்தில் தனுஷின் தோழியாக நடித்து அசத்தியிருப்பார்.இவரை போல ஒரு பெண் நம் வாழ்க்கையில் இல்லையே என இளைஞர்கள் ஒவ்வொருவரும் ஏங்கிய கதாபாத்திரமாக அமைந்தது.

ப்ரியங்கா மோகன்: 2022 ஆம் ஆண்டில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தான், சிவகார்த்திகேயனின் டான் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்தார். உள்ளம் உருகுதைய்யா பாடலில் ஆடிய இவரின் நடனம் வச்ச கண் வைக்காமல் ரசிகர்கள் பார்த்து ரசித்தார்கள். வளர்ந்து வரும் நடிகைகளில் ப்ரியங்கா மோகன் முதலிடத்தில் உள்ள நிலையில் ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: பொன்னியின் செல்வனுக்கு முந்திக்கொண்ட ரஜினி.. ரணகளமாக வெளியான ஜெயிலர், இந்தியன் 2 பட ரிலீஸ் தேதி

Trending News