ஞாயிற்றுக்கிழமை, நவம்பர் 17, 2024

ஒளிப்பதிவு மூலம் அசத்திய இளவரசு.. ரசிகர்களை பிரமிக்கச் செய்த 5 படங்கள்

தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் இளவரசு. இவர் 13 படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருந்தார். இதில் ஒரு படத்திற்காக தமிழக அரசு விருதையும் இளவரசு பெற்றுள்ளார். மேலும் சில படங்களில் டப்பிங் ஆர்டிஸ்டாக வேலை பார்த்துள்ளார். இளவரசு ஒளிப்பதிவு செய்த சிறந்த ஐந்து படங்களை பார்க்கலாம்.

கருத்தம்மா : பாரதிராஜா இயக்கத்தில் 1994 ஆம் ஆண்டு ராஜா, ராஜஸ்ரீ, சரண்யா, பொன்வண்ணன், வடிவுக்கரசி, வடிவேலு மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் கருத்தம்மா. இப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் இசை அமைத்திருந்தார். இப்படத்தில் பொன்வண்ணனுக்கு இளவரசு டப்பிங் பேசியிருந்தார். மேலும் இப்படத்திற்கு ஒளிப்பதிவும் இளவரசி செய்திருந்தார்.

பாஞ்சாலங்குறிச்சி : சீமான் இயக்கத்தில் பிரபு, மதுபாலா, சந்திரசேகர், மகாநதி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் பாஞ்சாலங்குறிச்சி. இப்படத்தில் இளவரசு ஒளிப்பதிவு செய்ததுடன் மகாநதி சங்கர் அவர்களுக்கு இளவரசு தான் டப்பிங் பேசி இருந்தார்.

நினைத்தேன் வந்தாய் : விஜய், ரம்பா, தேவயானி மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் நினைத்தேன் வந்தாய். இப்படத்திற்கும் ஒளிப்பதிவு இளவரசு செய்திருந்தார். இப்படத்தில் கிராமத்து அழகை தத்ரூபமாக காட்டியிருப்பார் இளவரசு.இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

மனம் விரும்புதே உன்னை : பிரபு, மீனா, கரண், ராஜீவ் கிருஷ்ணா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மனம் விரும்புதே உன்னை. இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்ததற்காக இளவரசு தமிழ்நாடு ஸ்டேட் பிலிம் அவார்ட் விருது கிடைத்தது. அவ்வளவு அற்புதமான ஒளிப்பதிவு இப்படத்திற்கு செய்திருந்தார்

ஏழையின் சிரிப்பில் : பிரபுதேவா, ரோஜா, கௌசல்யா, சுபலட்சுமி, நாசர், ரஞ்சித் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஏழையின் சிரிப்பில். இப்படத்திற்கு ஒளிப்பதிவு இளவரசு. மேலும் இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். இப்படத்தில் பேருந்து நிலையம், மக்கள் கூடும் இடங்களை அருமையாக ஒளிப்பதிவு செய்திருந்தார் இளவரசு.

- Advertisement -spot_img

Trending News