வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கரு.பழனியப்பன் இயக்கிய 5 படங்கள்.. வித்தியாசமான கதைக்களத்தில் முட்டிமோதி திசை மாறிய பாதை

காரைக்குடியில் பிறந்து வளர்ந்த கரு பழனியப்பன் தமிழ் இலக்கியங்கள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். இவர் இயக்குனர் பார்த்திபன் அவர்களிடமும் பின்பு இயக்குனர் எழில் அவர்களிடமும் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் தமிழ் மீது கொண்ட தீராத காதலினால் தனது படங்களில் தமிழ் இலக்கியங்களில் இருக்கும் பல நுண்ணிய விஷயங்களை தனது எழுத்தாற்றல் மூலம் உயிர் கொடுத்தவர். அப்படி அவர் தமிழ் சினிமாவிற்கு அர்ப்பணித்த அதாவது தனது இயக்கத்தில் வெளியான ஐந்து படங்களின் வரிசைகளை பார்க்கலாம்.

பார்த்திபன் கனவு – 2003: இவர் இயக்கிய முதல் படமான 2003-இல் வெளிவந்த “பார்த்திபன் கனவு” திரைப்படம் இவரின் முழு திறமையையும் வெளிக்கொண்டு வந்தது. கணினி உலகில் வாழும் கதாநாயகன் ஸ்ரீகாந்த் ஒரு பயணத்தின் போது சாலையில் பார்க்கும் கதாநாயகி சினேகாவின் மீது காதல் கொள்கிறார்ர். இந்நிலையில் தனது குடும்பத்தினர் மூலம் பெண் பார்க்கும் படலம் நடைபெறும் இடத்திற்கு செல்கிறார் வேண்டாவெறுப்பாக.

அங்கு தான் சாலையில் பார்த்த அதே பெண் தனக்கு மனைவியாக வரப் போவதை எண்ணி மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்கிறார். திருமணத்திற்குப் பிறகு விசாரிக்கும்போது தான் சாலையில் பார்த்த பெண்ணும் தனக்கு மனைவியாக வந்த பெண்ணும் இருவேறு பெண்கள் என்று தெரிகிறது. இந்நிலையில் தான் காதலித்த பெண்ணை கரம் பிடித்தாரா இல்லை தன்னை நம்பி வந்த பெண்ணை காதலிக்க தொடங்கினாரா என்பதே பார்த்திபன் கனவு. முதல் படத்திலேயே தனது ஆகச்சிறந்த இலக்கிய நடையை திரைக்கதை மூலம் வெளிக்கொண்டு வந்தவர்.

Also Read: சினேகா-பிரசன்னா விவாகரத்தா.? உண்மையைப் புட்டுப் புட்டு வைக்கும் பயில்வான்

சிவப்பதிகாரம் – 2006: முதல் படத்தில் கிடைத்த பெரும் வெற்றியை தக்க வைத்துக் கொள்ள நீண்ட போராட்டத்திற்கு பிறகு எடுக்கப்பட்ட திரைப்படம் “சிவப்பதிகாரம்”. ரகுவரன் ஒரு ஓய்வுபெற்ற மாவட்ட ஆட்சியர் தனது ஓய்வு காலத்தில் தனது சொந்த ஊரில் வாழ விரும்புகிறார். அங்கு அவர் நாட்டுப்புற இசையில் சில ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார். அதற்குத் துணையாக தனது மாணவனான விஷாலை தனக்கு துணையாக தன்னுடன் தங்க வைக்கிறார்.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில் முக்கிய இடங்களில் தேர்தல் வேட்பாளர்களின் அரசியல் கொலைகள் அரங்கேற்றப்படுகிறது. எதனால், யாரால் என்பதை மிகக் கூர்மையான வசனங்களுடன் ஆழமான திரைக்கதையுடன் இயக்கி இருப்பார் இயக்குநர் கரு பழனியப்பன். முதல் படத்தில் பெற்ற மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆதரவை இப்படம் பெறவில்லை என்பதே நிதர்சனம்.

பிரிவோம் சந்திப்போம் – 2008: காரைக்குடியில் மின்சார பணியின் பொறியாளராக பணியாற்றி வரும் சேரன் அவர்களுக்கு திருமணம் நிச்சயம் நிச்சயிக்கப்படுகிறது. கூட்டுக் குடும்பத்தில் வாழும் சேரனுக்கும் தனி குடும்பத்தில் வாழும் சினேகாவின் பயணமே இக்கதை. தாய் தந்தையுடன் ஒற்றைப் பெண்ணாக இருக்கும் கதாநாயகி சினேகா தனது திருமணத்திற்குப் பிறகு கூட்டு குடும்பத்தில் எந்த அளவு அனைத்து உறவுகளையும் அனுசரித்து செல்கிறார் என்பதே திரைக்கதை. 2006ல் வெளியான தனது படமான சிவப்பதிகாரம் படத்திற்குப் பிறகு இரண்டு வருட இடைவேளைக்கு பிறகு இயக்கிய திரைப்படம் பிரிவோம் சந்திப்போம். இயக்குனர் சேரன் மற்றும் நடிகை சினேகாவின் நடிப்பில் இந்த கருத்தியல் அனைத்து குடும்பங்களிலும் ஒரு வலியை ஏற்படுத்தியது என்பதையும் மறுக்க முடியாது.

Also Read: பெண்களுடன் நட்பு போற்றிய 5 சிறந்த தமிழ் படங்கள்.. வரலாற்றை மாற்றிய சேரன்

மந்திர புன்னகை – 2010: மீண்டும் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு தன்னுடைய கதையை பல நடிகர்களின் செவிகளை கொண்டு சேர்க்கும் அனைவரிடமும் நிராகரிக்கப்பட்டதால், ஆரம்பமான திரைப்படம்மந்திரப்புன்னகை. தானே கதாநாயகனாக நடித்த முடிவெடுத்தார் இயக்குநர் கரு பழனியப்பன். இந்த திரைப்படத்தில் ஒரு கட்டிடக் கலைஞராக மிளிர்ந்திருக்கிறார், அதே நிறுவனத்தில் பணியாற்றும் மீனாட்சியும் பணிபுரிகிறார். கரு.பழனியப்பன் சுபாவத்தால் ஈர்க்கப்படும் மீனாட்சி அவரை ஒருதலையாக காதலிக்கிறார்.

ஒரு கட்டத்தில் கரு பழனியப்பன் மீனாட்சி மேல் காதல் கொள்கிறார். எங்கே நந்தினி தன்னை உண்மையாக காதலிக்கிறாள் என்ற சந்தேகம் கொண்டு ஒரு தருணத்தில் கரு பழனியப்பன் காவல் நிலையம் சென்று தான் மீனாட்சியை கொன்றுவிட்டதாக வாக்குமூலம் கொடுக்கிறார். அவர் உண்மையாகவே அதை செய்தாரா இல்லையா என்பதை மிக ஆழமாக பதிவு செய்திருக்கிறார். கூர்மையான விஷயங்களை தவிர்த்து, பேசக் கூடிய இந்த திரையுலகில், அந்த விஷயங்களை வெளிப்படையாக பேசி ரசிகர்களின் கைதட்டல்களை அள்ளினார். இம்மாதிரியான துணிச்சலான முயற்சிக்கு அவர் வெகுவாக மீடியாக்களின் பாராட்டைப் பெற்றார்.

சதுரங்கம் – 2011: ஒரு நேர்மையான புலனாய்வு பத்திரிக்கையாளர் தான் சந்திக்கும் எதிரிகளால் தன் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை சமாளிக்கும் கதையே சதுரங்கம். ஸ்ரீகாந்த் ஒரு புலனாய்வு பத்திரிகையாளர் அவர் சோனியா அகர்வாலை காதலிக்கிறார் தனது நேர்மையான ஊடக அறத்தினால் பல அரசியல் மட்ட தவறுகளை சமுதாயத்தில் வெளிக் கொண்டு வருகிறார். இதனால் ஒரு கட்டத்தில் தனது காதலி எதிரிகளால் கடத்தப்படுகிறார்.

எந்த ஒரு துப்பும் இன்றி தனது காதலியை மீட்டாரா என்பதே படத்தின் மீதிக்கதை. ஆரம்ப காலகட்டத்தில் ஒரு பத்திரிகையாளராக இருந்த கரு.பழனியப்பன் தனது அனுபவத்தின் ஊடாக உருவாக்கியது இப்படம். மிகவும் தொய்வாக இருந்த ஸ்ரீகாந்தின் மார்க்கெட் இந்த படத்தின் மூலம் அடுத்த கட்டத்திற்கு போகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. சாக்லேட் பாயாக இருந்த நடிகர் ஸ்ரீகாந்தின் பரிணாமத்தை ஆக்சன் ஹீரோவாக மாற்ற முயற்சிக்கப்பட்டது . லாஜிக் விஷயங்களில் சற்று கவனம் செலுத்தியிருந்தால் இப்படம் பேசப்பட்டிருக்கும்.

Also Read: ‘தி பெட்’ டபுள் மீனிங் படம்.. மேடையில் உண்மையை போட்டு உடைத்த ஸ்ரீகாந்த்!

வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை என்றாலும் இன்றும் தனக்கான கருத்தியலை விதைக்க தமிழ் திரையுலகில் நீண்ட முயற்சியுடன் போராடிக் கொண்டிருக்கிறார் இயக்குனர் கரு.பழனியப்பன்.

Trending News