மதுரை மேலூரில் பிறந்து வளர்ந்த இயக்குனர் சேரன் பெரும்பாலும் கிராமத்து மக்களுக்கு நெருக்கமான கதைக்களத்தை மையமாகக்கொண்டு உருவாக்குவதில் அதிக கவனம் செலுத்துவார். இவர் தமிழ்சினிமாவில் தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளராகவும் அறியப்பட்ட இயக்குனர் சேரன் இயக்கிய சிறந்த ஐந்து படங்களை இன்றும் எத்தனை தடவை வேண்டுமானாலும் பார்க்கலாம் என்று ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.
அந்தவகையில் கடந்த 1997-ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் பார்த்திபன், மீனா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்த பாரதிகண்ணம்மா திரைப்படம் ஆனது, காதலுக்கு ஜாதி-மதம், ஏழை- பணக்காரன் என்பது தெரியாது என காண்பிக்கும் விதத்தில் அட்டகாசமாக இயக்கி இருப்பார்.
அதே ஆண்டிலேயே இவர் இயக்கத்தில் வெளிவந்த பொற்காலம் திரைப்படத்தில் முரளி, மீனா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்கள். இதில் ஓர் அண்ணன் தன்னுடைய ஊமை தங்கைக்கு திருமணம் நடத்த வரதட்சணைக்காக என்ன பாடுபடுகிறான் என்பதை சேரன் தத்ரூபமாக வெளிக்காட்டி இருப்பார்.
இதைத்தொடர்ந்து 2000-ஆம் ஆண்டில் வெளிவந்த சேரனின் வெற்றிக்கொடி கட்டு திரைப்படத்தின் மூலம் மிடில் கிளாஸ் குடும்பத்தில் இருக்கும் வாலிபன், வெளிநாட்டிற்கு வேலைக்கு என்றால் குடும்பம் செட்டில் ஆகிவிடும் என்ற ஒருசிலரின் எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில், உள்ளூரிலேயே இருக்கிற வேலையை செய்தால் கொடிகட்டிப் பறக்கலாம் என்பதை இந்தப் படத்தின் மூலம் அழகாக காட்டியிருப்பார்.
இதைத்தொடர்ந்து 2004-ஆம் ஆண்டு வெளிவந்த ஆட்டோகிராப் திரைப்படத்தை இயக்கியதுடன், ரொமான்டிக் ஹீரோவாக கோபிகா, சினேகா, மாளவிகா போன்ற மூன்று கதாநாயகிகளுடன் இணைந்து நடித்து, எந்த நடிகையுடன் ஜோடி சேருவார் என்ற சஸ்பென்ஸ் உடன், ஒருவனுடைய பள்ளிப்பருவம் முதல் கல்லூரி வரை வாழ்க்கையில் நடக்கும் அழகான சம்பவங்களை இந்த படத்தின் மூலம் காட்சிப்படுத்தி இருப்பார். இந்தப் படத்தின் சூப்பர் டூப்பர் வெற்றியை தொடர்ந்து தெலுங்கிலும், கன்னடத்திலும், பெங்காலியில் ரீமிக்ஸ் செய்யப்பட்டது. இந்தப் படத்தினால் இளைஞர்கள் தூக்கத்தை தொலைத்து காதலில் சுற்றி திரிந்தனர்
மீண்டும் 2005-ஆம் ஆண்டில் சேரன் இயக்கத்தில் வெளிவந்த தவமாய் தவமிருந்து திரைப்படத்தின் மூலம் தாய்-தந்தை தங்களுடைய பிள்ளைகளுக்கு கஷ்டம் தெரியாமல் வளர்க்கின்றனர். ஆனால் வளர்ந்து பெரியவர்களான பிறகு, பெற்றோர்களை எப்படி நடத்துகின்றனர் என்பதை இந்தப் படத்தில் உணர்த்தியிருப்பார்.
இவ்வாறு குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களையும், கிராமத்துப் பின்னணியில் நடுத்தர வர்க்கத்தினர் அனுபவிக்கும் போராட்டத்தையும் சேரன், தான் இயக்கிய படத்தின் மூலம் வெளிப்படுத்தி இருப்பார்