வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

பெண் ரசிகைகளால் அதிகமாக ரசிக்கப்பட்ட 6 நடிகர்கள்.. திருமணத்தால் ஹீரோவிலிருந்து ஜீரோவான பிரஷாந்த்

தமிழ் சினிமாவை பொறுத்த வரைக்கும் எத்தனை ஹீரோக்கள் மாசாக, கிளாஸாக வந்தாலும் ஒரு சில ஹீரோக்களுக்கு தான் சாக்லேட் பாய் என்ற பட்டம் கிடைக்கும். ஏனென்றால் பெண் ரசிகைகளுக்கு எந்த ஹீரோவை அதிகம் பிடிக்கிறதோ அவர்தான் அந்த காலகட்டத்தில் சாக்லேட் பாயாக இருப்பார். அப்படி இருந்த ஒரு சில ஹீரோக்கள் தற்போது இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய்விட்டார்கள்.

அரவிந்த் சாமி: இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அரவிந்த்சாமி. இந்த ஒரு படத்திலேயே அவருக்கு பெண் ரசிகைகள் கூட்டம் ரொம்பவும் அதிகமாக இருந்தார்கள். ஆனால் அரவிந்த்சாமி அதை சரியாக பயன்படுத்தவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதன் பின்னர் ஒரு சில படங்களில் நடித்தாலும் அரவிந்த்சாமிக்கு அந்த அளவுக்கு பெயர் கிடைக்கவில்லை.

Also Read: மணிரத்னம் அறிமுகப்படுத்திய ரத்தினக்கல்.. இளசுகளை கிறங்கடித்த அரவிந்த் சாமியின் 6 வெற்றி படங்கள்

மாதவன்: அலைபாயுதே திரைப்படத்தின் மூலம் அன்றைய இளம் பெண்களை தன் வசம் கவர்ந்திழுத்தவர் தான் நடிகர் மாதவன். சாக்லேட் பாயாக நடித்துக் கொண்டிருந்த இவர் திடீரென்று ஆக்சன் ஹீரோவாக களம் இறங்குகிறேன் என்ற பெயரில் மொத்தமாக மார்க்கெட்டை கெடுத்துக் கொண்டார். இன்றளவும் மாதவனுக்கு பெண் ரசிகைகள் அதிகம், ஆனால் அவரால் ஹீரோவாக ஜொலிக்க முடியவில்லை.

பிரஷாந்த் : நடிகர் பிரஷாந்த்அந்த காலகட்டத்தில் கமலஹாசன், ரஜினிகாந்துக்கு இணையாக வளர்ந்து வந்தார் என்றே சொல்லலாம். சினிமாவில் சரியாகப் பயணித்திருந்தால் இவர் இன்றைய டாப் ஹீரோக்களான அஜித் மற்றும் விஜய்க்கு இணையாக வந்திருப்பார். பிரஷாந்தின் சினிமா வாழ்க்கை அவருடைய திருமணத்தால் மொத்தமாய் காலியானது.

Also Read: அரவிந்த் சாமியை பார்த்து ஜொள்ளு விட்ட 5 ஹீரோயினிகள்.. இன்றுவரை க்ரஸ்ஷில் இருக்கும் குஷ்பூ

ராம்கி: என்றும் இளமையாகவே இருக்கும் நடிகர் என்றால் அது ராம்கி தான். ராம்கி செந்தூரப்பூவே திரைப்படத்தின் மூலம் பெண் ரசிகைகள் இடையே பிரபலமானவர். அதன் பின்னர் நிறைய படங்கள் நடித்திருந்தாலும் ராம்கி திடீரென்று சினிமாவிலிருந்து காணாமல் போய்விட்டார். இரண்டாவது இன்னிங்ஸில் களம் இறங்கினாலும் அவரால் ஜெயிக்க முடியவில்லை.

கார்த்திக்: நவரச நாயகன் கார்த்திக்குக்கு பெண் ரசிகைகள் மட்டுமில்லை அன்றைய சினிமாவில் முன்னணி ஹீரோயின்களாக இருந்த பல நடிகைகள் கார்த்திக்கின் ரசிகைகள் தான். அத்தனை நடிகைகள் இவருடன் நடிக்க ஆசைப்பட்டு நடித்தனர். விஜயகாந்துக்கு இணையாக படம் நடித்துக் கொண்டிருந்த கார்த்திக் அதன்பின்னர் சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார், தற்போது மீண்டும் தன்னுடைய இரண்டாவது இன்னிங்சை தொடங்கி இருக்கிறார்.

மோகன்: 90களின் காலகட்டத்தில் ‘மைக் மோகன்’ என்று அழைக்கப்பட்ட நடிகர் மோகன் கமல் மற்றும் ரஜினிக்கு இணையாக புகழின் உச்சியில் இருந்தார். அப்போது மோகனுக்கு பெண் ரசிகைகள் அதிகம். ஹீரோயின்களும் மோகனுடன் நடிக்க ரொம்பவே ஆசைப்பட்டு நடித்தனர். அப்படி முன்னணி ஹீரோவாக இருந்த மோகன் நல்ல மார்க்கெட் இருக்கும் போதே சினிமாவில் இருந்து காணாமல் போய்விட்டார்.

Also Read: படப்பிடிப்புக்கு வராமல் கறார் காட்டும் அரவிந்த்சாமி.. தலையில் துண்டை போடும் தயாரிப்பாளர்கள்

Trending News