வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

பட்டிமன்றத்தை வைத்து நடிகர்களாகவே மாறிய 5 பேச்சாளர்கள்.. வேற லெவல் சம்பவம் பண்ணும் நிஷா அக்கா

பட்டிமன்றத்தில் தனது பேச்சுக்கள் மூலம் ரசிகர்களை அசர வைத்த சிலர் திரைப்படங்களில் நடிகராகவும் மாறியுள்ளனர். சமூக விஷயங்களை ஆராய்ந்து, அறிவு கூர்ந்து மக்களுக்கு பல நல்ல விஷயங்களையும் கூறியுள்ளனர். அதேபோல் சினிமாவிலும் தங்கள் நடித்த கதாபாத்திரத்தின் மூலம் மக்களுக்கு பல கருத்துக்களைக் கூறியுள்ளனர்.

திண்டுக்கல் லியோனி :பட்டிமன்றங்களில் நடுவராக பணியாற்றியவர் திண்டுக்கல் லியோனி. இவர் தன்னுடைய நகைச்சுவையான பேச்சுக்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். மேலும் இவர் ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார். மேலும் அரசியலிலும் ஆர்வம் உடையவர். இவர் கங்கா கௌரி என்ற படத்தில் அருண் விஜய்க்கு அப்பாவாக நடித்திருப்பார்.

சாலமன் பாப்பையா : மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற பட்டிமன்ற பேச்சாளர் சாலமன் பாப்பையா. இவர் தமிழ்துறை பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான முதல்வன், பாய்ஸ், சிவாஜி போன்ற படங்களில் நடித்துள்ளார்.

ராஜா : நகைச்சுவையான பட்டிமன்ற பேச்சாளர் ராஜா. இவருடைய பேச்சுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். பண்டிகை காலங்களில் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பட்டிமன்றம் நிகழ்ச்சியில் தவறாமல் கலந்து கொள்வார். இந்நிலையில் இவர் கண்ணா லட்டு தின்ன ஆசையா, கோ, சிவாஜி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

ஞானசம்பந்தம் : நகைச்சுவை பட்டிமன்ற பேச்சாளர் ஞானசம்பந்தம் பேராசிரியராகவும் பணியாற்றியுள்ளார். இவர் பெரும்பாலும் திரைப்படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் விருமாண்டி, இதயத்திருடன், சிவா மனசுல சக்தி, ரஜினிமுருகன், நிமிர்ந்து நில் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அறந்தாங்கி நிஷா : அறந்தாங்கி நிஷா ஆரம்பத்தில் பட்டிமன்ற பேச்சாளராக இருந்துள்ளார். அதன் பிறகு விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற்ற பிரபலமானார். இந்நிலையில் வெள்ளித்திரையில் கலகலப்பு 2, மாரி 2,கோலமாவு கோகிலா, ஆண்தேவதை போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது பல படங்களிலும் நடித்து வருகிறார்.

Trending News