புதன்கிழமை, ஜனவரி 15, 2025

டபுள் மீனிங்கில் டைட்டில் வைத்து சர்ச்சையான 5 படங்கள்.. அதுவும் அந்த முரட்டு குத்து ரொம்ப மோசம்

தமிழ் சினிமாவை பொருத்தவரை டைட்டிலுக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். அவ்வாறு சிலர் டபுள் மீனிங் டைட்டில் படங்கள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்பத்தில் டைட்டில்காக பல விமர்சனங்கள் வந்தாலும் படத்தின் கதை ரசிகர்களுக்கு பிடித்துப் போக அது வெற்றிப் படமாகவும் மாறியுள்ளது.

பல்லு படாம பாத்துக்க : விஜய் வரதராஜ் இயக்கத்தில் அட்டகத்தி தினேஷ், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பல்லு படாம பாத்துக்க. இப்படத்தின் டைட்டில் வெளியான போது டபுள் மீனிங்கில் உள்ளது என சர்ச்சை உண்டானது. இப்படம் அடல்ட் காமெடி படமாக வெளியானது.

இருட்டு அறையில் முரட்டு குத்து : சந்தோஷ் பி ஜெயக்குமார் இயக்கத்தில் கௌதம் கார்த்திக், யாஷிகா ஆனந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் இருட்டு அறையில் முரட்டு குத்து. இப்படத்தின் டைட்டில் வெளியாகும்போது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. இப்படம் அடல்ட் மூவியாக வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

——— போட பொண்ணு வேணும் (கடலை) : ஆனந்த்ராஜ் இயக்கத்தில் அசார், யோகிபாபு, மனிஷா ஜித் நடித்துள்ள காதல் காமெடி திரைப்படம் கடலை போட பொண்ணு வேணும். இப்படத்தின் பிரமோஷனுக்காக முதலில் டேஸ் போட பொண்ணு வேணும் என்று போஸ்டர் அடித்து ஒட்டப்பட்டது. இது பல சர்ச்சைகளுக்கும் உள்ளான பிறகு கடலை போட்ட பொண்ணு வேணும் என டைட்டில் வெளியானது.

உங்கள போடணும் சார் : ஜித்தன் ரமேஷ் நடிப்பில் 2019 இல் வெளியான திரைப்படம் உங்கள போடணும் சார். நானும் ரவுடிதான் படத்தில் நயன்தாரா உங்கள போடணும் சார் என்ற வசனத்தை பேசி இருப்பார். அந்த வசனத்தை இப்படத்திற்கு டைட்டிலாக வைக்க பட்டிருந்தது. இப்படமும் அடல்ட் மூவி ஆக வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவு இப்படம் வெற்றி பெறவில்லை.

ஒரு கை ஓசை : கே பாக்யராஜ் இயக்கத்தில் பாக்யராஜ், அஸ்வினி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஒரு கை ஓசை. இப்படத்தில் பாக்யராஜ் ஊமையாக நடித்திருந்தார். ஆரம்பத்தில் இப்படத்தின் டைட்டில் சர்ச்சையை ஏற்படுத்தினாலும் எதிர்பாராத கிளைமாக்ஸ் ஆல் ரசிகர்களின் பாராட்டை பெற்றது.

Trending News