குடும்ப ஆடியன்சை கவரும் வகையில் திரைப்படங்களை இயக்கும் சிறந்த இயக்குனர்களில் டிபி கஜேந்திரனும் ஒருவர். இவர் இயக்கத்தில் வெளிவந்த அத்தனை திரைப்படங்களும் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் வகையிலும், குடும்பத்தோடு பார்க்கும் படியாகவும் இருக்கும். அந்த வகையில் இவர் இயக்கத்தில் வெளிவந்த சிறந்த ஐந்து திரைப்படங்களைப் பற்றி இங்கு காண்போம்.
எங்க ஊரு காவக்காரன் டிபி கஜேந்திரன் இயக்கத்தில் ராமராஜன், கௌதமி, எம் என் நம்பியார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருப்பார்கள். 1988 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் பயங்கர ஹிட்டானது. அந்த வகையில் இப்படம் இயக்குனருக்கு மிகப்பெரும் அடையாளமாகவும் மாறியது.
Also read: பிரபு பட இயக்குனர் திடீர் மரணம்.. அதிர்ச்சியில் உறைந்த திரையுலகம்
பாண்டி நாட்டு தங்கம் கார்த்திக், நிரோஷாவின் நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. இன்னும் சொல்லப்போனால் 80 காலகட்டத்தில் கார்த்திக் நடித்த படங்களிலேயே மிகப்பெரும் ஹிட் அடித்த திரைப்படமும் இதுதான்.
பாட்டு வாத்தியார் ரமேஷ் அரவிந்த், ரஞ்சிதா, செந்தில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த இத்திரைப்படம் 1995 ஆம் ஆண்டு வெளியானது. முழுக்க முழுக்க காதல் கலந்த திரைப்படமாக வெளிவந்த இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
மிடில் கிளாஸ் மாதவன் கடந்த 2001 ஆம் ஆண்டு பிரபு, அபிராமி, வடிவேலு, விவேக் உள்ளிட்ட பலர் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. முழுக்க முழுக்க காமெடி கலந்து வெளிவந்த இந்த திரைப்படத்தில் விவேக் மற்றும் வடிவேலுவின் காமெடி இப்போதும் கூட ரசிக்கப்பட்டு வருகிறது. அந்த அளவுக்கு ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்த பெருமை இப்படத்திற்கு உண்டு.
சீனா தானா 2007 ஆம் ஆண்டு பிரசன்னா, ஷீலா, வடிவேலு, மணிவண்ணன் நடிப்பில் இப்படம் வெளிவந்தது. ஆக்சன் மற்றும் காமெடி திரைப்படமாக உருவான இதில் பிரசன்னா மற்றும் வடிவேலு இருவரும் டிடெக்டிவாக நடித்திருப்பார்கள். அதிலும் இப்படத்தில் வடிவேலு பேசும் பல வசனங்கள் இப்போது மீம்ஸாக வெளிவந்து பட்டையை கிளப்புகிறது.
Also read: வயிறு குலுங்க சிரிக்க வைத்த பிரபுவின் 5 படங்கள்.. கார்த்திக்-கவுண்டமணி காம்போவிற்கு கொடுத்த டஃப்