திங்கட்கிழமை, டிசம்பர் 30, 2024

பிப்ரவரியில் ரிலீஸ் ஆகும் முக்கியமான 5 படங்கள்.. சைக்கோ இயக்குனருடன் நேருக்கு நேர் மோதும் சந்தானம்

Top 5 films releasing in February: புத்தாண்டு துவங்கி பொங்கலை எல்லாம் ஜாலியாக கொண்டாடி முடித்து விட்டோம். அடுத்ததாக பிப்ரவரி மாதத்தில் என்ட்ரி ஆக போகிறோம், இந்த மாதத்தில் என்னதான் ஹாலிடேஸ் கம்மியாக இருந்தாலும் முக்கியமான ஐந்து படங்கள் ரிலீஸ் ஆகி சினிமா பிரியர்களை திரையரங்கில் ஆரவாரப்படுத்தப் போகிறது. அதிலும் குறிப்பாக சைக்கோ இயக்குனருடன் சந்தானம் இந்த முறை நேருக்கு நேர் மோதுகிறார்.

டேபில்: சவரக்கத்தி படத்தின் இயக்குனர் ஆதித்யா இயக்கத்தில் விதார்த்த, பூர்ணா, மிஷ்கின் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் டேபில் திரைப்படம் பிப்ரவரி 2ம் தேதி வெளியாகிறது. இந்த படத்தின் ப்ரமோஷன் பணிகள் தற்போது பரபரப்பாக நடைபெறுகிறது. அதோடு இந்தப் படத்தை தயாரித்து இசையமைத்தது  சைக்கோ, பிசாசு போன்ற படங்களை இயக்கிய மிஷ்கின் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடுகப்பட்டி ராமசாமி: டிக்கிலோனா படத்தை இயக்கிய கார்த்திக் யோகியுடன் சந்தானம் மீண்டும் இணைந்து நடித்த வடுகப்பட்டி ராமசாமி என்ற திரைப்படம், டெவில் மூவி வெளியாகும் அதே தினமான பிப்ரவரி 2ம் தேதி தான் ரிலீஸ் ஆகிறது. அதேபோல் குக் வித் கோமாளி ரக்சன், KPY தீனா நடித்திருக்கும் ‘மறக்குமா நெஞ்சம்’ திரைப்படமும் பிப்ரவரி 2ம் தேதி தான் வெளியாகிறது.

லவ்வர்: குட் நைட் படத்தின் மூலம் வேற லெவலுக்கு ரீச்சான நடிகர் மணிகண்டன் நடிப்பில், அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் எழுதி இயக்கிய லவ்வர் திரைப்படம் வருகிற பிப்ரவரி 9ம் தேதி திரையரங்கில் வெளியாக ள்ளது.

சைரன்: பிப்ரவரி 16ம் தேதி ஜெயம் ரவி சிறை கைதியாக நடித்த சைரன் திரைப்படம் ரிலீஸ் ஆகிறது. இதில் கீர்த்தி சுரேஷ் போலீஸ் கெட்டப்பில் மிரட்டுகிறார். இவர்களுடன் அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரக்கனி உள்ளிட்டோரும் இணைந்து நடித்துள்ளனர்.

Also Read: அடிமேல் அடிவாங்கும் சந்தானம்.. கமுக்கமாக நண்பனுக்கு டிமிக்கி கொடுத்த உதயநிதி

பிப்ரவரி மாதத்தில் வெளியாக காத்திருக்கும் படங்கள் 

லால் சலாம்: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி ‘மொய்தின் பாய்’ என்ற கேமியோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் லால் சலாம் திரைப்படம் வரும் பிப்ரவரி 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் கிரிக்கெட்டை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதால் இளசுகளிடம் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அதே சமயம் தனுஷை தற்சமயம் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போட்டியாக பார்ப்பதால் அவருடைய கேப்டன் மில்லர் படத்தின் வசூலை லால் சலாம் முறியடிக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கிறார். எனவே லால் சலாம், கேப்டன் மில்லர் படத்தின் வசூலை பின்னுக்குத் தள்ளுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

இது தவிர, காமெடி கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வந்த சதீஷின் சீரியஸ் நடிப்பில் கிரைம் திரில்லராக உருவாகியுள்ள வித்தைக்காரன் திரைப்படமும், கதாநாயகியே இல்லாமல் பேச்சுலர் வாழ்க்கையை சித்தரித்திருக்கும் ‘தி பாய்ஸ்’ படமும் பிப்ரவரி 16ம் தேதி தான் வெளியாகிறது.

Also Read: தயாரிப்பாளர்களை முக்காடு போட வைத்த கார்த்தியின் 5 படங்கள்.. தலையில் அடித்து புலம்ப வைத்த படம்

Trending News