வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

5 முன்னணி ஹீரோக்களின் முதல் 50 கோடி படங்கள்.. அஜித் vs விஜய், ஜெயித்தது யார் தெரியுமா?

Top Heroes 50 crs collection movies: தமிழ் சினிமாவில் இப்போதெல்லாம் முன்னணி ஹீரோக்களின் படங்களின் வசூல் என்பது ஆயிரம் கோடியை இலக்காக கொண்டிருக்கிறது. இப்போதெல்லாம் படம் ரிலீஸ் ஆகி ஒரு வாரத்திலேயே 100 கோடியை கடந்து விட்டதாக அசால்டாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகி விடுகின்றன. முன்பெல்லாம் 25 கோடி, 30 கோடி வசூல் என்பதே பெரிய விஷயமாக இருந்தது. அப்படிப்பட்ட காலத்தில் முன்னணி ஹீரோக்கள் ஐந்து பேரின் எந்தெந்த படங்கள் முதலில் 50 கோடியை வசூல் செய்தது என்பதை பார்க்கலாம்.

கமல்ஹாசன்: இந்த 50 கோடி வசூல் நிலவரத்தில் முதலில் ஜெயித்தது உலகநாயகன் கமலஹாசன் தான். இயக்குனர் சங்கர் இயக்கத்தில் கமல் நடித்த 1996 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்தியன் படம் 55 கோடி வசூல் செய்வது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிளாக் பஸ்டர் படமான பாட்ஷா படத்தில் வசூல் சாதனையை இந்த படம் முறியடித்தது. படத்தின் வசூல் என்பதை தாண்டி இந்தியன் படத்தில் பாடல் கேசட்டுகள் விற்பனையும் அப்போது பெரிய சாதனையை படைத்தது.

ரஜினிகாந்த்: ரஜினிகாந்தின் சினிமா கேரியரில் மிக முக்கியமான படம் தான் படையப்பா. எப்படி பாட்ஷா படத்தின் வசூலை இந்தியன் படம் முறியடித்ததோ, அதே மாதிரி இந்தியன் படத்தின் வசூலை படையப்பா படம் முறியடித்து விட்டது. 1999 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆன இந்த படம் 60 கோடி வசூல் செய்தது. ரஜினிகாந்தின் அரசியல் வருகைக்கு தீனி போடும் வகையில் இந்த படத்தின் வசனங்கள் இருந்ததால் ரஜினி ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

Also Read:பஞ்ச் டயலாக்கால் மோதிக்கொண்ட அஜித், விஜய்யின் 5 படங்கள்.. உச்சகட்ட எதிர்பார்ப்பில் வெளிவரும் வாரிசு VS துணிவு

அஜித்: இயக்குனர் கே எஸ் ரவிக்குமாருடன் கூட்டணி அமைத்து அஜித் கொடுத்த மிகப்பெரிய ஹிட் படம் தான் வரலாறு. இந்த படம் கடந்த 2006 ஆம் ஆண்டு ரிலீசானது. நடிகர் அஜித்குமார் மூன்று வேடங்களில் நடித்து சூப்பர் ஹிட் கொடுத்த இந்த படம் 60 கோடி வசூல் செய்தது. இந்தப் படத்திற்காக அஜித் தன்னுடைய உடல் எடையை வெகுவாக குறைத்து இருந்தது பெரிய அளவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

விஜய்: இயக்குனர் ஜெயம் ராஜா இயக்கத்தில் விஜய் கூட்டணி போட்டு கலக்கிய படம் தான் வேலாயுதம். இந்த படம் கடந்த 2011 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆனது. படம் காமெடி மற்றும் ஆக்சன் கலந்த திரைக்கதை என்பதால் பெரிய அளவில் வரவேற்பையும் பெற்றது. இருந்தாலும் நடிகர் விஜய் உடைய சினிமா கேரியரில் வேலாயுதம் படம் பிளாப் என்று ஒரு மாய பிம்பம் உருவாக்கப்பட்டிருந்தாலும், இந்த படம் 66 கோடி வசூல் செய்திருக்கிறது.

சூர்யா: நடிகர் சூர்யாவின் சினிமா கேரியரின் மறக்க முடியாத இரண்டு படங்கள் என்றால் அது காக்க காக்க மற்றும் சிங்கம் படம் தான். காக்க காக்க அன்புச்செல்வனம் சிங்கம் படம் துரை சிங்கமும் ரொம்பவே வித்தியாசமான காவல்துறை அதிகாரிகளாக வந்தவர்கள். நடிகர் விக்ரமுக்கு எப்படி சாமி என்ற ஒரு பெரிய பிற்படத்தை இயக்குனர் ஹரி கொடுத்தாரோ அதேபோல நடிகர் சூர்யாவுக்கு கொடுத்த படம் தான் சிங்கம். இந்த படம் கடந்த 2011 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி 53 கோடி வசூல் செய்தது.

Also Read:அஜித்திடம் இருக்கும் தரமான குணம்.. இதை மட்டும் கத்துக்கிட்டா விஜய் தான் அடுத்த CM

Trending News