ஒட்டுமொத்த இந்தியா முழுவதும் இன்று மரணம் ஓலம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு நாள் ஏன் வந்தது என்று பலரும் வருந்தும் அளவுக்கு பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது நேற்று நடந்த ரயில் விபத்து. கொல்கத்தாவில் இருந்து வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூரிலிருந்து கொல்கத்தா நோக்கி சென்ற ஹவுரா எக்ஸ்பிரஸ், ஒரு சரக்கு ரயில் என மூன்றும் ஒன்றுக்கொன்று மோதி பயங்கர விபத்துக்குள்ளாகி இருக்கிறது.
இந்தக் கோர விபத்தின் காரணமாக 280 க்கும் மேற்பட்ட பயணிகள் உயிரிழந்து உள்ளனர். அதைத்தொடர்ந்து 900-ற்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சையில் இருக்கின்றனர். இதற்கான மீட்பு பணிகள் அனைத்தும் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்த இந்தியாவையும் புரட்டி போட்ட இந்த விபத்தை கேள்விப்பட்ட பலரும் தற்போது இறந்தவர்களுக்கான இரங்கல்களையும், சிகிச்சை பெறுபவர்களுக்கான வேண்டுதலையும் முன்வைத்து வருகின்றனர்.
Also read: விஜய் பட ஹீரோயினை டார்கெட் செய்யும் ஹீரோ.. செண்டிமெண்டாக எல்லா படமும் செம ஹிட்
மேலும் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும் இன்று ஒரு நாள் தூக்கம் அனுசரிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. நம் முதல்வர் மு க ஸ்டாலின் இன்று கலைஞருடைய பிறந்தநாள் கொண்டாட்டங்களை கூட ரத்து செய்துவிட்டு இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த மக்களை பாதுகாப்பாக அழைத்து வரும் பணிகளை முடுக்கி விட்டுள்ளார்.
இப்படி அரசு மீட்பு பணிகளுக்கான நடவடிக்கைகளை ஒரு புறம் எடுத்து வந்தாலும் விஷயத்தை கேள்விப்பட்ட பொதுமக்களும் தங்களுடைய உதவிகளை செய்து வருகின்றனர். அந்த வகையில் விபத்தில் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருக்கும் பயணிகளுக்கு தேவையான ரத்தத்தை கொடுக்க பலரும் முன்வந்துள்ளனர். இப்படி பலரும் தங்களால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Also read: ஒரு ஹிட் படம் கொடுத்த முரட்டு தைரியம்.. என் கதைக்கு நான் தான் ஹீரோ, விஜய்க்கு நோ சொன்ன பிரதீப்
அது மட்டுமின்றி ஜி வி பிரகாஷ் போன்ற திரைப்பிரபலங்கள் கூட இந்த விபத்து குறித்த தங்கள் மனவேதனையை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகின்றனர். ஆனால் டாப் நடிகர்கள் யாரும் இது குறித்து எந்த ஒரு பதிவையும் போடாதது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா போன்ற எந்த நடிகர்களும் இது பற்றி எந்தவிதமான கருத்தையும் தெரிவிக்காமல் இருப்பது பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அதிலும் அரசியல் கட்சி ஆரம்பித்து எதற்கெடுத்தாலும் குரல் கொடுக்கும் கமலும், அரசியலில் அஸ்திவாரம் போட காத்திருக்கும் விஜய்யும் இதுவரை எந்த ஒரு பதிவும் போடவில்லை. இதுதான் தற்போது பலரின் கண்டனங்களுக்கும் ஆளாகி வருகிறது. சாமானிய மக்கள் கூட இந்த விஷயத்தை கேள்விப்பட்டு தங்கள் வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.
Also read: தந்திரமாக கமலை பகடைக்காயாக யூஸ் பண்ணும் பிரபாஸ்.. இது தெரியாமல் வாண்டடா மாட்டிய உலக நாயகன்
ஆனால் சமுதாயத்தில் ஒரு பொறுப்பில் இருக்கும் இந்த நடிகர்கள் மௌன சாமியார் போல் கண்டும் காணாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. தங்களுடைய பட பிரமோஷன் என்றால் வரிந்து கட்டி சோசியல் மீடியாவில் களமிறங்கும் இவர்கள் இது போன்ற விஷயங்களுக்கு குரல் கொடுக்காமல் இருப்பது கடும் எதிர்ப்பை சந்தித்து வருகிறது.