செவ்வாய்க்கிழமை, ஜனவரி 7, 2025

2023ல் அதிக சம்பளம் வாங்கிய 5 நடிகைகள்.. ஓவர் நைட்டில் ஒபாமா ஆன த்ரிஷா

Highest Paid Actress: தென்னிந்திய சினிமாவில் நடிகைகள் பலரும் பழைய ஸ்டீரியோடைப்புகளை உடைத்தெரிய ஆரம்பித்து இருக்கிறார்கள். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இருந்தால் மட்டுமே அந்த கதையை தேர்ந்தெடுத்து நடிக்கிறார்கள். அப்படி இந்த வருடம் சிறந்த கதாபாத்திரத்தில் நடித்து அதிக சம்பளத்தை வாங்கிய 5 ஹீரோயின்களை பற்றி பார்க்கலாம்.

அதிக சம்பளம் வாங்கிய 5 நடிகைகள்

த்ரிஷா: நடிகை த்ரிஷாவிற்கு பொன்னியின் செல்வன் படம் மிகப்பெரிய அதிர்ஷ்ட கதவை திறந்து இருக்கிறது என சொல்லலாம். கடந்த மூன்று வருடங்களாக மார்க்கெட்டே இல்லாமல் இருந்த அவருக்கு குந்தவை கேரக்டர் மீண்டும் முன்னணி ஹீரோயின் இடத்தை கொடுத்திருக்கிறது. நடிகர் விஜய் உடன் இணைந்து லியோ படத்தில் நடித்த அவர், அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்போதைக்கு த்ரிஷா ஒரு படத்திற்கு 10 கோடி சம்பளமாக வாங்குகிறார்.

நயன்தாரா: நடிகை நயன்தாராவிற்கு திருமணத்திற்கு பிறகு சினிமாவில் அந்த அளவுக்கு வரவேற்பு இல்லை. இருந்தாலும் சம்பள விஷயத்தில் இன்னும் முன்னணியில் தான் இருக்கிறார். நயன்தாரா ஜவான் படத்திற்காக 11 கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார். இந்த வருடத்தில் அதிகமாக சம்பளம் வாங்கிய ஹீரோயின்கள் வரிசையில் அவர்தான் முதலிடத்தில் இருக்கிறார்.

Also Read:2023-இல் இன்ஸ்டாவில் அதிக ஃபாலோவர்ஸ் வைத்திருக்கும் 6 ஹீரோக்கள்.. விஜய்யை பின்னுக்கு தள்ளிய ஹீரோ

ஸ்ரீநிதி ஷெட்டி: நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நிறைய அழகி போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறார். நடிகர் யாஷ் நடித்த கே ஜி எஃப் என்னும் பிரம்மாண்டப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். தமிழில் விக்ரம் நடித்த வெளியான கோப்ரா படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் இன்றைய தேதியில் ஒரு படத்திற்கு ஏழு கோடி சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கிறார்.

பூஜா ஹெக்டே: மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டு பரிசு வாங்கிய நடிகை பூஜா ஹெக்டே தமிழில் முகமூடி படத்தின் மூலம் அறிமுகமானார். அவருக்கு தெலுங்கு சினிமா உலகம் மிகப் பெரிய அளவில் கை கொடுத்தது. தளபதி விஜய் நடித்த பீஸ்ட் படத்தின் மூலம் மீண்டும் தமிழ் சினிமாவுக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார். இவர் இந்த வருடம் ஒரு படத்திற்கு ஆறு கோடி சம்பளமாக வாங்கி இருக்கிறார்.

சமந்தா: நடிகை சமந்தா திருமணத்திற்கு பிறகும் தென்னிந்திய சினிமாவில் முக்கியமான ஹீரோயினாக இருந்து வந்தார். விவாகரத்திற்கு பிறகும் தனிக் கதாநாயகியாக நடித்து மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்தார். அவருக்கு இடையில் மையோசைட்டிஸ் என்னும் நோய் தாக்கத்தின் மூலம் நிறைய பிரேக் எடுத்துக் கொண்டிருக்கிறார். இவர் மூன்று முதல் ஐந்து கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளமாக வாங்குகிறார்.

Also Read:சீரியல் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த டாப் 5 பிரபலங்கள்.. நான்கு பெண்கள் மத்தியில் ஒரு ஆணழகன்

Trending News