வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

அதிக வசூல் செய்து டாப் 5 இடத்தில் இருக்கும் படங்கள்.. தட்டு தடுமாறி கோட் பிடித்த இடம்

Top 5 Highest Grossing Movies: ஒரு படத்தின் வெற்றி, தோல்வி என்பது விமர்சனத்தை காட்டிலும் வசூலை வைத்து தான் கணக்கிடப்படுகிறது. என்ன தான் படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றாலும், வசூல் பெறவில்லை என்றால் அந்த படம் தோல்வி படங்களில் லிஸ்டில் தான் இடம்பெறுகிறது.

இந்நிலையில் இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான படங்களில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்களை இந்த பதிவில் பார்க்கலாம். இதில் தற்போது வரை முதலிடத்தில் இருப்பது ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவான 2.0 படம் தான்.

இதற்கு அடுத்த இடத்தை எந்திரன் படம் தக்க வைத்திருக்கிறது. இந்தப் படங்களின் வசூலை தற்போது வரை மற்ற படங்களால் முறியடிக்க முடியவில்லை. அடுத்ததாக மூன்றாவது இடத்தில் விஜய் மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவான லியோ படம் இருக்கிறது.

டாப் 5 இடத்தில் இருக்கும் தமிழ் படங்கள்

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக நல்ல லாபத்தை கொடுத்தது. அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் படம் நான்காவது இடத்தை பிடித்திருக்கிறது.

இந்த படம் 450 கோடியை தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியான நிலையில் பெரிய அளவில் வசூல் பெறவில்லை. அடுத்ததாக ஐந்தாவது இடத்தில் தட்டு தடுமாறி விஜய்யின் கோட் படம் பிடித்திருக்கிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் விஜய் இரண்டு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் 430 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கிறது. இப்போது கோட் படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகி இருக்கிறது.

ஓடிடிக்கு வந்த கோட்

Trending News