வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 இசையமைப்பாளர்கள்.. ஆஸ்கர் நாயகனையே ஓவர் டேக் செய்யும் அனிருத்

Music Director Anirudh: படத்தில் இடம்பெறும் பாடல்களுக்கு என்று ஒரு சிறப்பம்சம் உண்டு. அவ்வாறு பாடலுக்கு இசையமைக்கும் இசையமைப்பாளர்கள் மேற்கொள்ளும் முயற்சியால் தான் அப்படம் மக்களிடையே வெற்றி பெறுகிறது.

படங்களின் சிச்சுவேஷனுக்கு ஏற்ப பாடல்களை அமைப்பதன்பொருட்டே படங்கள் ஹிட் பெறுகின்றன. அவ்வாறு இத்தகைய சிறப்புடைய பாடல்களை இசையமைக்க அதிக சம்பளம் வாங்கும் 5 டாப் இசையமைப்பாளர்களை பற்றி இங்கு காண்போம்.

Also Read: சொகுசாக வாழ அந்தரங்க தொழில் செய்த நடிகை.. ஒரு வருடத்திலேயே முடிந்த திருமண வாழ்க்கை

ஜி வி பிரகாஷ்: பன்முகத் திறமை கொண்ட இவர் 2006ல் வெளிவந்த வெயில் படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின் இவர் மேற்கொண்ட பொல்லாதவன், ஆயிரத்தில் ஒருவன், தெய்வத்திருமகள், ராஜா ராணி, அசுரன், சர்தார், வாத்தி போன்ற படங்களின் பாடல்களுக்கு இசையமைத்து வெற்றி கண்டுள்ளார். இவர் ஒரு படத்திற்கு சுமார் 1 முதல் 4 கோடி வரை சம்பளத்தை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறார்.

யுவன் சங்கர் ராஜா: தந்தையின் இசையால் ஈர்க்கப்பட்டு, அதன்பின் தமிழ் சினிமாவில் பாடகராகவும், இசையமைப்பாளராகவும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். 7 ஜி ரெயின்போ காலனி, பருத்திவீரன், பையா, ஒரு கல் ஒரு கண்ணாடி, மாநாடு போன்ற படங்களின் பாடல்கள் மூலம் சிறந்த இசையமைப்பாளராக பல விருதுகளையும், புகழையும் பெற்றார். இவர் ஒரு படத்திற்கு சுமார் ஒன்றை முதல் 5 கோடி வரை சம்பளத்தை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறார்.

Also Read: அஜித்தின் மச்சானால் பெருமூச்சு விட்ட தம்பி ராமையா.. புளியங்கொம்பை பிடித்த மகன்

தமன்: இவர் இசையமைப்பில் வெளிவந்த எண்ணற்ற பாடல்களில் ஈஸ்வரன், எனிமி, பிரின்ஸ், வாரிசு போன்ற படங்களின் பாடல்கள் மூலம் பெரிதும் பேசப்பட்டார். அதிலும் குறிப்பாக வாரிசு படத்தில் இவர் மேற்கொண்ட ரஞ்சிதமே பாடல் மிகுந்த ஹிட் கொடுத்த பாடல் ஆகும். அதைத் தொடர்ந்து இவர் தெலுங்கு படங்களிலும் ஆர்வம் காட்டி வருகிறார். மேலும் ஒரு படத்திற்கு சுமார் மூன்று முதல் ஏழு கோடி வரை சம்பளத்தைப் பெற்று மூன்றாவது இடத்தில் தமன் இருக்கிறார்.

அனிருத்: பன்முகத் திறமை கொண்ட இவர் 3 படத்தின் பாடல்கள் மூலம் அறிமுகமானவர். அதை தொடர்ந்து இவர் மேற்கொண்ட எண்ணற்ற பாடல்கள் ஹிட் கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக மாஸ்டர், டாக்டர், டான், பீஸ்ட், விக்ரம் போன்ற பிரபலங்களின் படங்களில் இசையமைத்து மாஸ் காட்டி வருகிறார். மேலும் அடுத்தடுத்த படங்களில் வாய்ப்பு பெற்று வரும் இவர் சுமார் 4 முதல் 10 கோடி வரை சம்பளத்தை பெற்று அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

Also Read: 45 வயதில் விக்ரம் பட நடிகை செய்த வேலை.. 10 வயது இளையவருடன் காட்டும் நெருக்கம்

ஏஆர் ரகுமான்: ஆஸ்கர் நாயகன் என அழைக்கப்படும் இவர் தன் பாடலின் மூலம் பல விருதுகளையும், புகழையும் பெற்றுள்ளார். தன் திறமையால் மேற்கொள்ளும் முயற்சி மூலம் அடுத்தடுத்து பட வாய்ப்புகளை பெற்று வரும் இவர் சமீபத்தில் வெளிவந்த பொன்னின் செல்வன் படத்திலும் இசையமைத்துள்ளார். மேலும் இவர் சுமார் ஆறு முதல் 12 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளமாக பெற்று அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

Trending News