ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

70-களில் இருந்து காதல் மன்னாக நடிகைகளை ஆட்சிசெய்த 5 நடிகர்கள்.. 52 வயதிலும் டஃப் கொடுக்கும் அரவிந்த்சாமி

தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோக்கள், ஆக்சன் ஹீரோக்கள் என பல ஹீரோக்கள் டாப்பாக இருந்தாலும் அவர்கள் எல்லோருக்கும் ‘காதல் இளவரசன்’, ‘காதல் மன்னன்’ என்ற பெயர் வந்துவிடாது. எந்த நடிகர்களுக்கு பெண் ரசிகைகள் அதிகம் இருக்கிறார்களோ அவர்களுக்கு தான் இந்த தனித்துவமான பெயர் கிடைக்கும். அப்படி 70 களில் இருந்து தமிழ் ரசிகைகளின் காதல் இளவரசர்களாக கோலிவுட்டை 5 பேர் ஆட்சி செய்து இருக்கின்றனர்.

ஜெமினி கணேசன்: ஜெமினி கணேசன் தமிழ் திரையுலகின் புகழ்வாய்ந்த ஹீரோக்களில் ஒருவராவார். இவர் தமிழ் மொழி மட்டுமன்றி ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். தன்னுடைய வாழ்நாளில் மொத்தம் 200 படங்களில் நடித்திருக்கிறார். முதன் முதலில் தமிழ் சினிமாவில் ‘காதல் மன்னன்’ என்று அழைக்கப்பட்டவர் இவர் தான்.

Also Read: சாவித்திரி வீட்டில் திருடு போன 100 சவரன் நகைகள்.. தீராத விரக்தியால் நடிகையர் திலகம் எடுத்த முடிவு

ரவிச்சந்திரன்: 1964 ஆம் ஆண்டு ‘காதலிக்க நேரமில்லை’ என்னும் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் தான் ரவிச்சந்திரன். இதயக்கமலம், குமரிப் பெண், அதே கண்கள், கௌரி கல்யாணம், மதராஸ் டு பாண்டிச்சேரி, நான், உத்தரவின்றி உள்ளே வா, புகுந்த வீடு, இதயக்கமலம், ஊமை விழிகள் போன்ற நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து இருக்கிறார்.

‘நவரச நாயகன்’ கார்த்திக்: 1981 ஆம் ஆண்டு ‘இயக்குனர் சிகரம்’ பாரதிராஜா இயக்கத்தில் அறிமுகமானவர் தான் ‘நவரச நாயகன்’ கார்த்திக். துறுதுறுவெனவும், வசீகரிக்கும் முகமும் கொண்ட கார்த்திக்கு பெண் ரசிகைகள் அதிகம். அப்போதைய நடிகைகளே கார்த்திக்குடன் நடிக்க ரொம்ப ஆசைப்பட்டனர். இவருடைய ‘அக்னி நட்சத்திரம்’ மற்றும் ‘மௌன ராகம்’ திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய பெயரை வாங்கி கொடுத்தது.

Also Read: சாவித்திரிக்காக போனில் மிரட்டிய எம்ஜிஆர்.. கருப்பு பக்கங்களாக மாறிய வாழ்க்கை

அரவிந்த்சாமி: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ‘தளபதி’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும், ‘ரோஜா’ திரைப்பட ரிலீசுக்கு பிறகே மக்களால் கவனிக்கப்பட்டார் அரவிந்த்சாமி. பம்பாய், மின்சார கனவு, இந்திரா, தேவராகம், அலைபாயுதே போன்ற படங்களில் நடித்திருக்கிறார். இன்று வரை தமிழ்நாட்டில் அழகான ஆணுக்கு உதாரணம் என்றால் அது அரவிந்த்சாமி தான்.

மாதவன்: 2000 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் மாதவன். அன்றிலிருந்து இன்றுவரை பெண் ரசிகர்களின் மனதில் காதல் இளவரசனாக இருப்பது மாதவன் தான். மின்னலே , டும் டும் டும் படங்களின் மூலம் பெண் ரசிகைகள் அத்தனை பேரையும் தன் பக்கம் இழுத்தவர்.

Also Read: 60களில் ஆட்சி செய்த நடிகர்கள்.. மும்மூர்த்திகளாக தங்களுக்குள் பிரித்துக் கொண்ட படங்கள்

Trending News