திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

2022-ல் அதிகமா பேசப்பட்டு கொடிகட்டிப் பறந்த 6 இயக்குனர்கள்.. மணிரத்தினத்துக்கே சவால் விட்ட இளம் இயக்குனர்

ஒரு படம் வெற்றியா தோல்வியா என்பதை அந்தப் படத்திற்கு ரசிகர்கள் கொடுக்கும் பலவிதமான விமர்சனங்களை வைத்தே தெரிந்து கொள்ளலாம். அந்த வகையில் 2022 ஆம் ஆண்டு ரசிகர்களின் மத்தியில் அதிகம் பேசப்பட்ட சிறந்த 6 தமிழ் திரைப்பட இயக்குனர்களின் லிஸ்ட் தற்போது இணையத்தை கலக்கி கொண்டிருக்கிறது.

எஸ் எஸ் ராஜமௌலி: பிரம்மாண்டத்தின் இயக்குனரான ராஜமௌலி ஜூனியர் என்டிஆர் மற்றும் ராம்சரனை வைத்து இயக்கிய ஆர்ஆர்ஆர் படம் உலக அளவில் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமல்லாமல் இந்த ஆண்டு பாக்ஸ் ஆபிஸ் இன்னும் வசூலை வாரி குவித்தது. இதனால் ரசிகர்களின் மத்தியில் இந்த படத்தின் இயக்குனர் ராஜமௌலி 2022ஆண்டு அதிகம் பேசப்பட்ட இயக்குனர்களின் லிஸ்டில் 6-ம் இடத்தைப் பெற்றார்.

Also Read: 2022-ல் சிறந்த டாப் 5 ஹீரோஸ்.. பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கிய ஏஜென்ட் விக்ரம்

பிரசாந்த் நீல்: விஜயின் பீஸ்ட் படத்துடன் ரிலீசான இந்த படம் தமிழ் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த படமாக இருந்தது மட்டுமல்லாமல் உலக அளவில் பாக்ஸ் ஆபிஸையும் மிரட்டியது. இதன் மூலம் இந்த படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட இயக்குனர்களின் லிஸ்டில் 5-ம் இடத்தில் உள்ளார்.

மணிரத்தினம்: இந்திய அளவில் அறியப்பட்ட பழம்பெரும் இயக்குனரான இவர் தனது கனவு திரைப்படம் ஆன பொன்னியின் செல்வன் படத்தை இயக்கி ரசிகர்களுக்கு விருந்தளித்தவுடன் பாக்ஸ் ஆபிஸிலும் வசூலை வாரி குவித்தார். இதன் மூலம் இவர் ரசிகர்களால் பேசப்பட்ட இயக்குனர்களின் லிஸ்டில் 4-ம் இடத்தில் உள்ளார்.

ஹெச் வினோத்: 2014 ஆம் ஆண்டு சதுரங்க வேட்டை படத்தை இயக்கியதின் மூலம் பிரபலமான இவர், அதன் பிறகு இந்த வருடம் அஜித்தின் வலிமை படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனம் கிடைத்தாலும் அவர்களால் அதிகம் பேசப்பட்ட இயக்குனர்களின் லிஸ்டில் 3-ம் இடத்தில் உள்ளார்.

Also Read: அடுத்தடுத்த கமலுடன் கூட்டணி போடும் 5 இயக்குனர்கள்.. பல 100 கோடி முதலீடு செய்ய காத்துக்கிடக்கும் தயாரிப்பாளர்கள்

லோகேஷ் கனகராஜ்: கைதி, மாஸ்டர் படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் நடிப்பில் வெளியான விக்ரம் படம் லோகேஷ் உடைய தரத்தை மேலும் உயர்த்தியது. இந்தப் படத்தில் இவர் தன்னுடைய ரசிகர் வட்டத்தை பெருக்கிக் கொண்டார் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு விக்ரம் படத்தை சிறப்பாக இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்த வருடம் அதிகம் பேசப்பட்ட இயக்குனர்களின் லிஸ்டில் 2ம் இடத்தில் உள்ளார்.

பிரதீப் ரங்கநாதன்: 2019 ஆம் ஆண்டு ஜெயம் ரவி நடிப்பில் வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான இவர், இந்த வருடம் ஹாட் டாபிக்காக பேசப்பட்ட இளம் இயக்குனர் ஆவார். இந்த வருடம் இவர் இயக்கி நடித்த லவ் டுடே படத்தின் மூலம் முன்னணி இயக்குனர்களுக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ந்துவிட்டார்.

அத்துடன் இளசுகளின் மனதைக் கவர்ந்த ஃபேவரட் இயக்குனராகவும் உள்ளார். இதனால் இவருடைய அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். மேலும் இந்த வருடத்திற்கான அதிகம் பேசப்பட்ட டாப் 6 இயக்குனர்களின் லிஸ்டில் இவருக்கு முதலிடம் கிடைத்திருக்கிறது.

Also Read: அறிமுகக் காட்சியில் அனல் பறக்க விட்ட 4 ஹீரோக்கள்.. இப்பவும் ரோலக்ஸ்காக காத்துக் கிடக்கும் வெறி பிடித்த ரசிகர்கள்

இவ்வாறு இந்த 6 இயக்குனர்களும் இந்த வருடத்திற்கான டாப் 6 இயக்குனர்கள் என்ற பெருமையை பெற்றதுடன் 80, 90களில் கலக்கிய மணிரத்தினத்தை இளம் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் பின்னுக்கு தள்ளி முதல் இடத்தை பெற்றிருப்பது பலரால் பாராட்டப்படுகிறது.

Trending News