திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

அதிக வியூசை பெற்று முதல் 5 இடத்தை பிடித்த பாடல்கள்.. அரபிக் குத்தை மிஞ்சிய ரவுடி பேபி

படங்களில் பாடல்களுக்கு என்று ஒரு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. படத்தில் கதை நல்லா இல்லை என்றாலும் பாடல்கள் மூலம் படம் பெயர் பெற்று விடுகிறது. அது மட்டும் இல்லாமல் நடிகர்களுக்கு ஹிட் கொடுக்கும் பாடலாகவும் அமைந்துவிடுகிறது.

பிடித்த பாடல்களை திரும்பத் திரும்ப கேட்க தூண்டும் விதமாக அமையும் பாடல்கள் தமிழ் சினிமாவில் உண்டு. அவ்வாறு ஒட்டுமொத்த தென்னிந்தியாவையே அதிரவிட்ட ஐந்து பாடல்களை பற்றி இங்கு காணலாம்.

Also Readதனுஷ் மோசமாக வேட்டையாடிய 7 நடிகைகள்.. ஓவராகவே போய் குடும்பம் நடத்திய ஸ்ருதிஹாசன்

ஒய் திஸ் கொலவெறி: 2012ல் வெளிவந்த இப்பாடல் மக்களை கவர்ந்த ஒன்றாகும். இப்பாடல் காதல் தோல்வியால் மன உளைச்சலுக்கு ஆளாவதை வெளிப்படுத்தும் விதமாக அமைந்திருக்கும். இதில் உபயோகப்படுத்திய வார்த்தைகளும் மற்றும் இசையும் இப்பாடலை பெரிதளவு கொண்டு சென்றது. மேலும் இப்பாடல் 3.94 மில்லியன் வியூசை பெற்று ஐந்தாவது இடத்தை பிடித்திருக்கிறது.

என்ஜாய் என்ஜாமி: சந்தோஷ் நாராயணன் இசையமைப்பில் வெளிவந்த பாடல்கள் தான் என்ஜாய் என்ஜாமி. இப்பாடல் இயற்கையை போற்றும் விதமாக மக்கள் நெஞ்சில் நீங்காமல் நிலைத்து நின்றது. மேலும் குட்டீசுகளை மிகவும் கவர்ந்த பாடலாக அமைந்தது. மேலும் பாடலை கேட்கும் போது அவற்றை முனுமுனுக்க செய்யும் விதமாக அமைந்தது. இப்பாடல் 4.66 மில்லியன் வியூசை பெற்று பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

Also Readஉனக்கு 8 எனக்கு 18.. வாயடைக்க வைத்த விஜய் பட ஹீரோயினின் காதல்

அரபிக் குத்து: 2022ல் விஜய்யின் நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் படத்தில் இடம் பெற்ற பாடலாகும். இப்பாடலுக்கு அனிருத் இசையமைத்திருப்பார். மேலும் வைரலாகவும், ட்ரெண்டாகவும் சென்று இப்பாடல் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒன்றாக அமைந்தது. இதில் முக்கியமாக விஜய்யின் நடனம் கூடுதல் சிறப்பை பெற்று தந்தது. இவை 5.08 மில்லியன் வியூசை பெற்று மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது.

புட்டபொம்மா: அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே இடம்பெறும் இப்பாடல் ரசிகர்களை மயக்கும் விதமாக அமைந்தது. மேலும் இப்பாடலை கேட்பவர்களுக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் விதமாகவும் அமைந்திருக்கும். இப்பாடல் அதிக லைக் பெற்று டாப் ஹிட் பாடல்களில் இடம் பிடித்தது. மேலும் இப்பாடல் 8.32 மில்லியன் வியூசை பெற்று இரண்டாவது இடத்தை பிடித்திருக்கிறது.

Also Readநம்ம நடிகர்களை ஓரம் கட்ட வரும் 5 அக்கட தேசத்து ஹீரோக்கள்.. ரசிகர்களைக் கவர்ந்த அல்லு அர்ஜுன்

ரவுடி பேபி: 2018ல் வெளிவந்த மாரி படத்தில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது. இப்பாடலில் தனுஷ் மற்றும் சாய்பல்லவியின் நடனம் போட்டிக்கு போட்டியாக அமைந்திருக்கும். மேலும் இப்பாடல் சிறார்களுக்கு பிடித்த ஒன்றாகும். இப்பாடல் இப்படத்திற்கு கூடுதல் வெற்றியை பெற்று தந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சிறந்த நடனத்திற்கான விருதையும் பெற்றது. இதை தொடர்ந்து தற்பொழுதுவரை 1.4 பில்லியன் வியூஸ் பெற்று முதல் இடத்தில் இருந்து வருகிறது.

Trending News