புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

2022ல் அதிக படங்களை இசையமைத்த டாப் 5 இசையமைப்பாளர்கள்.. ஆஸ்கார் நாயகனையே பின்னுக்கு தள்ளிய ராஜா வீட்டு கன்னுக்குட்டி

தென்னிந்திய சினிமாவில் இசையின் ஆட்சியானது ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதிலும் இசையமைப்பாளர்கள் தங்களது இசையின் மூலம் சினிமா திரையில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கின்றன. அதிலும் 2022-ல் அதிக படங்களை இசையமைத்த டாப் 5 இசையமைப்பாளர்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது. இதில் ஒரே வருடத்தில் பிரபல இசையமைப்பாளர் 10 படங்களை இசையமைத்து முதலிடத்தை பிடித்திருக்கிறார்.

ஏஆர் ரகுமான்: இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் வெளிவந்த ரோஜா திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் திரை உலகுக்கு அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து ஹிந்தி, தமிழ், ஆங்கிலம் போன்ற பல மொழி திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவருக்கு இசை புயல் என்று புனை பெயரும் உள்ளது. இவர் ஹாலிவுட் திரை திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக ஆஸ்கார் விருதினை வென்றார்.

அதனைத் தொடர்ந்து கோல்டன் குளோப் விருது, பாப்டா விருது, தேசிய திரைப்பட விருது என புகழ்பெற்ற விருதுகளை பெற்றுள்ளார். 2009 ஆம் ஆண்டு 81 ஆம் ஆஸ்கார் விருதுக்கான மாபெரும் மேடையில் இவர் தனது தாய் மொழியான தமிழில் “எல்லாம் புகழும் இறைவனுக்கே” என்று அடிக்கடி உச்சரிக்கும் மந்திர சொல்லை பாடி தமிழ் மொழிக்கு பெருமை சேர்த்தார். இவர் இசையமைப்பில் இந்த ஆண்டு வெளியான திரைப்படங்கள் வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன், அயலான், இரவின் நிழல் போன்ற 4 படங்களை இசையமைத்து 5-ம் இடத்தில் உள்ளார்.

Also Read: 2023ல் வெளிவர இருக்கும் 10 ஹிட் படங்களின் 2-ம் பாகம்.. பொன்னியின் செல்வன் முடிவிற்காக காத்திருக்கும் ரசிகர்கள்

ஜிப்ரான்: 2011 ஆம் ஆண்டு வெளியான வாகை சூடவா என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து குட்டி புலி, நையாண்டி போன்ற சூப்பர் ஹிட் படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் தனது இசை பயணத்தை தொடங்கினார். அது மட்டுமல்லாமல் 800-க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கும் இசையமைத்துள்ளார். ஜிப்ரான் இசையமைப்பில் இந்த ஆண்டு வெளிவந்த திரைப்படங்கள் ட்ரிகர், மகா, பட்டத்து அரசன் போன்ற 5 படங்களை இசையமைத்து 3-ம் இடத்தில் உள்ளார்.

அனிருத்: இவர் தமிழில் முதன் முதலில் 3 படத்திற்கு இசையமைத்துள்ளார். ”ஒய் திஸ் கொலவெறி” என்ற பாடல் மூலம் பட்டி தொட்டி எங்கும் மிகவும் பிரபலமானார். அதனைத் தொடர்ந்து நடிகர் தனுஷ் நடித்து தயாரித்த படங்களுக்கு மட்டுமே இசையமைத்து வந்த அனிருத் தற்பொழுது மற்ற எல்லா படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். இந்த ஆண்டு இவர் இசையமைத்த திரைப்படங்களான திருச்சிற்றம்பலம், விக்ரம், டான், காத்து வாக்குல ரெண்டு காதல், பீஸ்ட் போன்ற போன்ற 5 படங்களை இசையமைத்து 3-ம் இடத்தில் உள்ளார்.

Also Read: IMDB வெளியிட்ட 2022 சிறந்த டாப் 10 படங்கள்.. இந்தியளவில் டஃப் கொடுத்த காந்தாரா

சந்தோஷ் நாராயணன்: 2012 ஆம் ஆண்டு வெளியான அட்டக்கத்தி படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பீட்சா, சூது கவ்வும், பீட்சா 2, வில்லா, குக்கூ, ஜிகர்தண்டா, மெட்ராஸ் போன்ற தமிழ் படங்களுக்கு இசையமைத்துள்ளார். 2013 ஆம் ஆண்டு வெளியான சூது கவ்வும் என்ற திரைப்படத்திற்கு இசையமைத்ததற்காக இரண்டு விஜய் விருதுகள் பரிந்துரை செய்யப்பட்டு சிறந்த பின்னணி இசைக்கான ஒரு விருதுதையும் வென்றார்.

பல திரைப்படங்களுக்கு இசையமைத்து பிரபலமான இவர் 2019-ம் ஆண்டில் ஜிப்சி திரைப்படத்தில் “வெரி வெரி பேட்” என்ற பாடலுக்கு இசையமைத்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். இப்பாடலானது ஜனநாயகத்துக்கு எதிரான பாடல் வரிகளை கொண்டு இயக்கியதால் சர்ச்சையில் சிக்கியது.சந்தோஷ் நாராயணன் இசை அமைப்பில் இந்த ஆண்டு வெளிவந்த படங்கள் ஆன நாய் சேகர் ரிட்டன்ஸ், இதயம் முரளி, குளு குளு, மகான், பபூன் போன்ற 6 படங்களை இசையமைத்து 2-ம் இடத்தில் உள்ளார்.

யுவன் சங்கர் ராஜா: இவர் இசைக் கலைஞர், பின்னணி பாடகர் மற்றும் பாடல் ஆசிரியராகவும் இருந்து வருகிறார். இவர் மேற்கத்திய இசையை பயன்படுத்துபவர் அதனை தொடர்ந்து ஹிப் ஹாப் இசையையும் அறிமுகப்படுத்தியவர் ஆவார். இவர் இசைக்காக இரண்டு ஃபிலிம் ஃபேர் விருதுகளை வென்றுள்ளார். 2004 ஆம் ஆண்டில் வெளியான 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் அனைவரின் மனதையும் கொள்ளை கொண்ட பாடல்களை கொடுத்ததற்காக இவருக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது.

இவரின் பீஜியத்திற்காகவே பல படங்கள் ஹிட் ஆகின. யுவன் சங்கர் ராஜா இசையில் இந்த ஆண்டு வெளிவந்த படங்களான லத்தீன், இறைவன், அலீஸ், இடம் பொருள் ஏவல், ஏழு கடல் ஏழுமலை, பொம்மை, ஸ்டார், ஆண்டவர், இறைவன் மிகப் பெரியவன், பரம்பொருள் போன்ற 10 படங்களை இசையமைத்து முதல் இடத்தில் உள்ளார்.

Also Read: ஜெட் வேகத்தில் எகிறிய வினோத்தின் மார்க்கெட்.. அஜித்தால் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கும் 4 படங்கள்

இவ்வாறு 5  இசை அமைப்பாளர்கள் இசையமைப்பில் வெளியான திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆகின . அதிலும் யுவன் சங்கர் ராஜா இசையமைப்பில் அதிக படங்கள் வெளிவந்து 2022-ல் அதிக படங்களை அதிக படங்களை இசையமைத்த இசையமைப்பாளர்களின் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளார். இவரின் பீஜியத்திற்காகவே சில படங்கள் ஹிட் ஆவது உண்டு .

Trending News