இந்தியாவில் உள்ள கோயில்களை தாண்டி தற்போது சாமியார்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்நிலையில் தங்களை சாமியார்கள் என சொல்லிக்கொண்டு பலர் கோடிக்கணக்கில் சம்பாதிக்கின்றனர். இவர்களை நம்பியும் பக்தர்கள் கோடிக்கணக்கில் பணத்தை கொடுக்கவும் தயாராகவும் உள்ளனர். இதில் சிலர் மக்களுக்காக நல்லது செய்ய வேண்டும் என்ற முயற்சியிலும் செயல்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் இந்தியாவில் உள்ள 5 பணக்கார குருவை பார்க்கலாம்.
ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் : இவர் தமிழ்நாட்டில் உள்ள பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவர் பழமையான யோகா பயிற்சிகள் மற்றும் மூச்சு பயிற்சிகளை சில மாநாடுகள் மூலம் பலருக்கும் கற்றுக்கொடுக்கிறார். ஆன்மீகத்தைப் பற்றிய பல விழிப்புணர்வுகளை பக்தர்களுக்கு அளித்து வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு 3500 கோடி ஆகும்.
பாபா ராம்தேவ் : இவர் யோகா கற்பித்தல், இயற்கை மருத்துவம் ஆகியவற்றில் புகழ் பெற்றவர். மேலும் அரசியலிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். பாபா ராம்தேவ் பதஞ்சலி யோகாபீத் மற்றும் திவ்யா யோகி மந்திர் அறக்கட்டளைகள் வைத்துள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 4500 கோடி ஆகும்.
பங்காரு அடிகளார் : இவர் தென்னிந்தியாவைச் சேர்ந்த ஆன்மிக குரு ஆவார். ஆதிபராசக்தி கோவிலில் பக்தர்கள் இவரை பங்காரு அடிகளார் என்று அழைக்கப்படுகிறார்கள். மேலும் ஆதிபராசக்தி தொண்டு மருத்துவ கல்லூரி மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் தலைவராக உள்ளார். இவருடைய நிகர சொத்து மதிப்பு 5000 கோடி ஆகும்.
சத்குரு ஜகி வாசுதேவ் : சத்குரு யோகாவின் குருவாக திகழ்கிறார். இவர் ஈஷா அறக்கட்டளை நிறுவியுள்ளார். மேலும் இந்த அறக்கட்டளை மூலம் உலக நாடுகளில் யோகா நிகழ்ச்சியை வழங்கிக் கொண்டிருக்கிறார். மேலும் சமூக மற்றும் சுற்றுப்புற நல செயல்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு 7000 கோடி ஆகும்.
நித்யானந்தா : இவரை ஒரு அவதாரம், மறுபிறவி என அவரது சீடர்கள் நம்புகிறார்கள். மேலும் நித்யானந்தா தியான மடம் என்ற மத அமைப்பு நித்யானந்தாவால் நிறுவப்பட்டுள்ளது. மேலும் அமெரிக்கா முழுவதும் இந்த மத அமைப்பு கலாச்சார நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மேலும் நித்யானந்தா பல சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு 10500 கோடி ஆகும். தற்போது நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது.