திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

2வது நாளில் அதிக வசூலை அள்ளிய 5 படங்கள்.. ஜெயிலரிடம் மண்ணைக் கவ்விய லியோ

Top 5 2nd Day Collection Movies: ஒரு படத்தின் முதல் நாள் வசூல் என்பது சம்பந்தப்பட்ட நடிகர்களின் ரசிகர்களை பொருத்துத்தான். முதல் நாள் முதல் ஷோவில் தங்களுடைய நடிகர் ஜெயிக்க வேண்டும் என்பதற்காகவே ரசிகர்கள் திரையரங்குகளை ஆக்கிரமித்து விடுவார்கள். அந்த படத்தின் அடுத்த அடுத்த வெற்றி என்பது அது கடந்து வரும் பாதையை பொறுத்து தான். அப்படி முதல் நாள் வசூல் இல்லாமல் இரண்டாவது நாளில் அதிக வசூலை அள்ளிய ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

பதான்: ஷாருக்கான் நடித்த ஜவான் படம் ரிலீஸ் ஆகும் வரை பாலிவுட் சினிமா அதல பாதாளத்தில் தான் மூழ்கிக் கிடந்தது. பதான் வெற்றி தான் இந்தி திரை உலக தலை நிமிரச் செய்தது. இந்த படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பு பல எதிர்ப்புகள் வந்தது. எல்லா எதிர்ப்புகளையும் தாண்டி இரண்டாவது நாளில் 113.60 கோடி வசூல் செய்தது பதான்.

ஜவான்: அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த ஜவான் படம் இன்று வரை வசூல் வேட்டை ஆடி வருகிறது. இந்த படம் ஆயிரம் கோடி வசூலை தாண்டி விட்டதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியிடப்பட்டது. நயன்தாரா, விஜய் சேதுபதி, தீபிகா படுகோன் ஆகியோர் இணைந்து நடித்த இந்த படம் இரண்டாவது நாளில் 109.24 கோடி வசூல் செய்தது.

ஆதிபுருஷ்: இந்திய ரசிகர்களால் அதிகம் கழுவி ஊற்றப்பட்ட ஒரு படம் வசூலில் முன்னிலையில் இருக்கிறது என்றால் அது ஆதிபுருஷ் தான். இந்த படத்திற்கு கொடுக்கப்பட்ட ஹைப் அப்படி. இதை நம்பி ரசிகர்கள் முதல் நாளிலிருந்து தியேட்டரில் குவிய தொடங்கினார்கள். போகப் போக படத்தின் மீதான நெகட்டிவ் கமெண்ட் களால் சரிவர போகவில்லை. பிரபாஸ் நடித்த இந்த படம் இரண்டாவது நாளில் 81.21 கோடி வசூல் செய்தது.

ஜெயிலர்: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு பல வருடங்களுக்குப் பிறகு கிடைத்த மிகப்பெரிய வெற்றி படம் ஜெயிலர். இந்த படம் எல்லா தரப்பட்ட மக்களிடையேயும் பாசிட்டிவ் விமர்சனங்களை தான் பெற்றது. கிட்டத்தட்ட 600 கோடி வசூல் செய்தது. இந்த படத்தின் மூலம் நெல்சன் மீது இருந்த அத்தனை நெகட்டிவ் விமர்சனங்களும் காலியானது என்று தான் சொல்ல வேண்டும். ஜெயிலர் படம் இரண்டாவது நாளில் 56.24 கோடி வசூல் செய்தது,

லியோ: விஜய்க்கு மற்றொரு வெற்றி மகுடம் சூடி இருக்கிறது லோகேஷ் கனகராஜின் லியோ படம். இந்திய அளவில் ரிலீசான படங்களில் முதல் நாளில் அதிக வசூலை பெற்றது லியோ தான் என அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இதற்கு முன்பு ரிலீசான ஜெயிலர் படத்தின் சாதனையை முறியடிக்க வேண்டும் என்பதுதான் விஜய் ரசிகர்களின் குறிக்கோளாக இருந்தது. ஆனால் இந்த விஷயத்தில் ஜெயிலர் தான் ஜெயித்திருக்கிறது. இரண்டாவது நாள் வசூலில் 47.35 கோடி பெற்றிருக்கிறது.

Trending News