Serial Trp Rating List: சீரியலுக்கு எப்பொழுதுமே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும். அதிலும் குடும்பத்துடன் சேர்ந்து பார்க்கும் இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கான ஒரு விஷயம் சீரியல் தான். அந்த வகையில் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங்கில் அதிக புள்ளிகளை பெற்றிருப்பது சன் டிவி தான். ஆனால் இந்த வாரம் சில மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கிறது. அதில் எந்த சீரியல்கள் எவ்வளவு பிள்ளைகளை பெற்றிருக்கிறது என்பதை பார்க்கலாம்.
சிறகடிக்கும் ஆசை: ரோகினியின் உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக முத்துவுக்கு தெரிய வரப்போகிறது. அந்த வகையில் தற்போது சத்யாவின் வீடியோவை சோசியல் மீடியாவில் வெளியிட வேண்டும் என்பதற்காக தன்னுடைய போனை திருடி இந்த மாதிரி தில்லாலங்கடி வேலையை ரோகிணி பார்த்திருக்கிறார் என்ற விஷயம் முத்துவுக்கு தெரிந்து விட்டது. இனி முத்து செய்யப் போகும் சம்பவத்தில் சிக்கிக் கொண்டு ரோகிணி தவிக்கப் போகிறார். இந்த வாரம் 8.57 புள்ளிகளை பெற்று டிஆர்பி ரேட்டிங்கில் ஐந்தாவது இடத்தை பெற்றிருக்கிறது.
மருமகள்: பிரபுவுக்கும் ஆதிரைக்கும் கல்யாணம் ஆனதிலிருந்து தொடர்ந்து பிரச்சினைகளை சந்தித்து வரும் இந்த ஜோடிக்கு சந்தோசம் என்றால் என்னவென்றே தெரியாத அளவிற்கு ஏகப்பட்ட சிக்கல்களில் மாட்டிக் கொண்டார்கள். அந்த வகையில் தனி குடித்தனம் போக வேண்டும் என்று நினைக்கும் பிரபுவின் மனசை மாற்ற ஆதிரை போராடி வருகிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.69 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
கயல்: கயலுக்கு கல்யாணம் ஆகி இருந்தாலும் இப்பொழுது வரை கயல் முழுக்க முழுக்க அவருடைய குடும்பத்தை மட்டுமே நினைவில் வைத்து கூடப்பிறந்தவர்களின் பிரச்சினையை சரி செய்ய போராடி வருகிறார். இதில் கயல் என்ன பண்ணாலும் நான் கூடவே சப்போர்ட் பண்ணுவேன் என்பதற்காக எழிலும் கஷ்டப்பட்டு வருகின்றார். ஆனால் இவர்களைப் பிரித்துக் காட்டுவேன் என்று வேலு ஒரு பக்கம் சதி செய்கிறார். இதற்கிடையில் வேதவல்லி, கயல் பெரியம்மா மற்றும் சிவசங்கரி கூட்டு சேர்ந்து கயல் குடும்பத்தை பழிவாங்க முயற்சி எடுக்கிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.64 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
மூன்று முடிச்சு: நந்தினி மீது விழுந்த கொலை கேசை சரி செய்யும் விதமாக சூர்யா போலீஸிடம் நிரூபித்துக் காட்டிவிட்டார். அத்துடன் நந்தினியின் பிறந்தநாளுக்கு சர்ப்ரை செய்யும் விதமாக ஆட்டம் பாட்டம் என சூர்யா கொண்டாடி வருகிறார். இதனால் சுந்தரவல்லி மொத்த கோபத்தையும் நந்தினி மீது காட்டும் விதமாக நந்தினியை வேதனைப்படுத்தி வருகிறார். நந்தினியின் நிலைமை என்னவென்று தெரியாத சூர்யா தொடர்ந்து செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் நந்தினி தான் தத்தளித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 10.02 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
சிங்க பெண்ணே: அன்புவின் அம்மா லலிதாவிற்கு தன்னை முழுமையாக ஆஸ்பத்திரியிலிருந்து கவனித்துக் கொண்டது ஆனந்தி தான் என்று புரிந்து கொண்டார். அத்துடன் ஆனந்தியை தவிர தன் மகனையும் குடும்பத்தையும் பார்த்துக் கொள்ள வேறு யாராலும் முடியாது என தெரிந்து கொண்ட லலிதா, உடனடியாக ஆனந்தியின் ஹாஸ்டலுக்கு சென்று நீதான் என் வீட்டு மருமகள் என்று சொல்லி வாக்கு கொடுத்து விடுகிறார். அதே நேரத்தில் மகேஷ், வார்டனை கூட்டிட்டு ஆனந்தியின் அப்பா அம்மாவிடம் பொண்ணு கேட்பதற்கு போய்விட்டார். அவர்களும் சம்மதம் கொடுத்த நிலையில் ஆனந்தி எடுக்கப் போகும் முடிவு என்னவாக இருக்கப்போகிறது என கேள்வி குறியாக நிற்கிறது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 10.08 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.