Serial TRP Rating List: சின்னத்திரை மூலம் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் எந்த சீரியல் மக்கள் மனதை அதிகமாக கவர்ந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் வெளியாகும் டிஆர்பி ரேட்டிங் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் எந்த சீரியல்கள் எவ்வளவு புள்ளிகளை பெற்றிருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
சிங்க பெண்ணே: முக்கோண காதலாக இருந்த அன்பு ஆனந்தி மற்றும் மகேஷின் காதலுக்கு முடிவு கட்டும் விதமாக அன்பு ஆனந்தின் காதல் கை கூட போகிறது. இதை எதிர்பார்க்காத மகேஷ் ஆக்ரோஷத்தில் அன்பு மீது வெறி ஆகிவிட்டார். உடனே ஆனந்தி என்னோட அன்புவை நீங்கள் எதுவும் பண்ண முடியாது என்பதற்கு ஏற்ப பாதுகாவலராக இருக்கிறார். அந்த வகையில் இவர்களுடைய காதலை மகேஷ் எப்படி ஏற்றுக் கொள்ளப் போகிறார், அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது விறுவிறுப்பான கதைகளுடன் நகருகிறது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.62 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.
மூன்று முடிச்சு: அரைச்சு மாவை அரைக்க வேண்டாம் என்று முகம் சுளிக்கும் அளவிற்கு சூர்யாவின் குடி தொடர்ந்து கதையை டேமேஜ் ஆகி கொண்டே வந்தது. அந்த வகையில் கொஞ்சம் கொஞ்சமாக சூர்யா கேரக்டரை மாற்றும் விதமாக நந்தினி எடுத்த அவதாரம் தான் குடிப்பழக்கத்தில் இருந்து விடுவிப்பது. அப்படி மட்டும் சூர்யா மொத்தமாக மாறிவிட்டால் நிச்சயம் இந்த நாடகம் முதலிடத்திற்கு வந்து விடும். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.57 புள்ளிகளைப் பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.
கயல்: தேவிக்கு குழந்தை பிறக்குமோ இல்லையோ ஆனா கயலுக்கு பிரச்சனை மட்டும் தீரவே செய்யாது என்பதற்கு ஏற்ப தொடர்ந்து பிரச்சினைகளாக வந்து கொண்டே இருக்கிறது. இதனால் பாவம் எழிலும் நிம்மதி இல்லாமல் கயல் குடும்பத்துடன் சிக்கிக் கொண்டு போராடுகிறார். தற்போது தேவியை கடத்திய நிலையில் கண்டுபிடிக்கும் விதமாக இன்னும் கொஞ்ச நாள் ட்ராக் இப்படியே போகப் போகிறது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.39 புள்ளிகளை பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.
மருமகள்: ஆதிரை செய்யாத கொலையை செஞ்சதாக சொல்லி போலீஸ் ஸ்டேஷனில் வற்புறுத்துகிறார்கள். ஆனால் ஆதிரை மற்றும் பிரபு எங்களுக்கு என்ன ஆனாலும் பரவாயில்லை, பொய்யாக ஒரு விஷயத்தை சொல்ல மாட்டோம் என்று பிடிவாதமாக இருக்கும் பட்சத்தில் அங்கு இருக்கும் போலீஸ் அவர்களை சித்திரவதை செய்கிறார்கள். இவர்களை காப்பாற்றும் விதமாக போலீசின் மேல் அதிகாரி ஒருவர் வருகிறார். நிச்சயம் அவர் மூலம் ஆதிரை மற்றும் பிரபுவுக்கு விடிவு காலம் பிறந்து விடும். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 8.29 புள்ளிகளைப் பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.
சிறகடிக்கும் ஆசை: கடந்த சில வாரங்களாக நான்காவது இடத்தில் இருந்த சிறகடிக்கும் ஆசை சீரியல் இந்த வாரம் 8.21 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இன்னும் அடுத்த சில வாரங்களில் மொத்தமாக டிஆர்பி ரேட்டிங்கில் அடி வாங்கி விடும். ஏனென்றால் ரோகிணி இப்போதைக்கு மாட்ட வாய்ப்பே இல்லாத அளவிற்கு இயக்குனர் செக் வைத்து விட்டார். இதில் கதாநாயகனாக ஜொலித்த முத்து, கடைசி வரை அந்த வீட்டில் அவமானப்பட்டு ஒரு எடுபிடி வேலைகளை பார்த்துக்கொண்டே வரப் போகிறார்.