இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் டாப் 5 இடத்தை பிடித்த சீரியல்கள்.. கனவை நிஜமாக்கி, விட்ட இடத்திற்கு வந்த விஜய் டிவி

Serial Trp Rating List: சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் எந்த சீரியல்கள் மக்கள் மனதை அதிகமாக கவர்ந்திருக்கிறது என்பதை ஒவ்வொரு வாரமும் வெளிவரும் டிஆர்பி ரேட்டிங் படி பார்த்து வருகிறோம். அந்த வகையில் இந்த வாரம் எந்த சீரியல்கள் முதல் ஐந்து இடத்தை பிடித்திருக்கிறது என்பதை ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

சிங்கப் பெண்ணே: குடும்ப சூழ்நிலைக்காக கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்த ஆனந்தி தைரியமாகவும் தன்னம்பிக்கையுடனும் போராடி குடும்ப கஷ்டங்களை சரி செய்யும் விதமாக சீறிப்பாயும் சிங்க பெண்ணாகத் தான் இருந்தார். இதற்கிடையில் அழகன் என்கிற அன்புவை உணர்வுபூர்வமாக காதலித்து வந்த ஆனந்திக்கு தற்போது மிகப்பெரிய சோதனையாக கர்ப்பம் என்ற விஷயம் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இதிலிருந்து எப்படி ஆனந்தி மீண்டு வரப் போகிறார் என்பதுதான் அடுத்த கட்ட கதையாக இருக்கிறது. இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங் இல் 9.93 புள்ளிகளை பெற்று முதலிடத்தில் இருக்கிறது.

கயல்: எழில் என்ன வேலை பார்க்கிறார் என்பதை தெரிந்து கொள்ளும் விஷயத்தில் கயல் ஆர்வமாக இருக்கிறார். அதனால் எழில் சொன்ன கம்பெனியில் கயல் போய் விசாரித்து பார்க்கிறார். ஆனால் அங்கே அப்படி ஒருத்தர் வேலை பார்க்கவில்லை என்று தெரிந்ததும் கயலுக்கு கொஞ்சம் சந்தேகம் வந்துவிட்டது. அந்த வகையில் எழிலிடம் நீ உண்மையிலேயே இந்த கம்பெனியில் தான் CAO இருக்கிறியா என்று கேட்கிறார். உடனே எழில் இதற்கு மேலையும் கயலை நாம் ஏமாற்ற கூடாது என்று முடிவெடுத்து உண்மையை சொல்ல வருகிறார். ஆனால் உண்மையே சொல்ல முடியாமல் கடைசியில் எழில் பொய் தான் சொல்லப் போகிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.72 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தை தக்க வைத்திருக்கிறது.

மூன்று முடிச்சு: நந்தினி எதுவும் பண்ணாமல் இருந்தபோதிலும் நந்தினி சுற்றி ஏகப்பட்ட பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கிறது. இதற்கு காரணம் வீட்டுக்குள் இருந்து ரேணுகா வேவு பார்த்து அர்ச்சனாவிடம் சொல்ல, அர்ச்சனா அதற்கு ஏற்ற மாதிரி சதி செய்து நந்தினியை சிக்கவைத்து குடும்பத்தில் இருப்பார்கள் நந்தினியை வெறுக்கும் படியான வேலைகளை பார்த்து வருகிறார். இதனால் மன வருத்தத்தில் இருக்கும் நந்தினிக்கு சூர்யா ஆறுதல் சொல்லி வருகிறார். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.76 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

மருமகள்: எப்போதும் போல் கஞ்சத்தனமாக இருக்கும் பிரபுவை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றி குடும்பத்துக்கு ஏற்ற மாதிரி கொண்டு வர வேண்டும் என்ற ஆதிரை நினைக்கிறார். ஆனால் இவர்கள் இரண்டு பேரையும் பிரிக்கும் வகையில் பல சதி வேலைகள் நடைபெறுகிறது. தற்போது பிரபுவின் பாட்டி காசிக்கு போவதால் ஆதிரை அதற்கு பணம் கொடுக்கிறார். இதை பார்த்த பிரபு கோபத்துடன் இருக்கிறார். இந்த வார டிஆர்பி ரேட்டிங்கில் 8.28 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் இருக்கிறது.

சிறகடிக்கும் ஆசை: பல மாதங்களாக இந்த ஒரு தருணத்திற்கு தான் காத்துக் கொண்டிருந்தோம் என்று சொல்வதற்கு ஏற்ப ரோகிணி பணக்கார வீட்டு பொண்ணு இல்லை பிரவுன் மணியும் மாமா இல்லை என்ற உண்மை குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தெரிந்து விட்டது. இது ஒரு வேலை கனவாக இருக்குமோ என்று எதிர்பார்த்து நேரத்தில் கடந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் கம்மியான புள்ளிகளை பெற்றதால் கனவை நிஜமாக்கி, விட்ட இடத்தை பிடிக்கும் வகையில் 8.18 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்திற்கு வந்துவிட்டது.

Advertisement Amazon Prime Banner

Leave a Comment