தமிழ் சினிமாவில் 60 களில் முன்னணி நடிகர்களாக வலம் வந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்ற முன்னணி நடிகர்களுக்கு இணையாக வில்லன் கதாபாத்திரத்தில் சில நடிகர்கள் நடித்துள்ளனர். அவ்வாறு 60 களில் வில்லனாக மிரட்டிய 5 நடிகர்களை பார்க்கலாம்.
பி எஸ் வீரப்பா : தமிழ் சினிமாவில் நடிகராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர் பி எஸ் வீரப்பா. இவர் பெரும்பாலான படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவருடைய வசனங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றிருந்தது. எம்ஜிஆர், சிவாஜி கணேசன் போன்றோரிலிருந்து கமலஹாசன், ரஜினிகாந்த், விஜயகாந்த் போன்றோர் படங்கள் வரை பி எஸ் வீரப்பா நடித்துள்ளார்.
எம் என் நம்பியார் : தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேல் தலைசிறந்த நடிகராக திகழ்ந்தவர் எம்என் நம்பியார். எம்ஜிஆர், சிவாஜி போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நிரந்தர வில்லன் நடிகராக இடம் பெற்றவர் நம்பியார். இவருடைய நடிப்பை பார்த்து பலரும் மிரண்டுயுள்ளனர். இவர் விஜய்காந்தின் சுதேசி படத்தில் கடைசியாக நடித்திருந்தார்.
எஸ் ஏ அசோகன் : தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன் நடிகராக அறியப்படுபவர் எஸ் ஏ அசோகன். இவர் கப்பலோட்டிய தமிழன் திரைப்படத்தில் ஆஷ்துரை வேடமேற்று நடித்து பலரது பாராட்டையும் பெற்றார். இதைத் தொடர்ந்து எம்ஜிஆர், சிவாஜி போன்ற நடிகர்களின் படங்களில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
எம் ஆர் ராதா : நாடகத்துறை பின்னணியிலிருந்து சினிமாவிற்குப் ஆண்டு கொடிகட்டி பறந்தவர் எம் ஆர் ராதா. ரத்தக்கண்ணீர் படத்தின் மூலம் எம் ஆர் ராதாவுக்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்தது. எம் ஆர் ராதா சில படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் கிட்டத்தட்ட 125 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
ஆர் எஸ் மனோகர் : பல்லாண்டு வாழ்க, அடிமைப்பெண் காவல்காரன், சிஐடி சங்கர், இதயக்கனி, பில்லா போன்ற பல படங்களில் நடித்தவர் ஆர்எஸ் மனோகர். இவர் எம்ஜிஆருடன் பல படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார். மனோகர் பல்வேறு நாடகங்களை அரங்கேற்றி நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் 200க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.