Tamil Actors Educational Qualification: பெரும்பாலும் நடிகர்கள் மற்றும் நடிகைகளின் சொந்த வாழ்க்கையை பற்றி நிறைய விஷயங்கள் வெளியில் வரும். ஆனால் அவர்கள் என்ன படித்திருக்கிறார்கள் என்பது மட்டும் அவ்வளவாக வெளியில் தெரியாது. தமிழ் சினிமாவில் இந்த ஐந்து ஹீரோக்கள் நல்ல படித்த, பட்டதாரிகளாக இருக்கிறார்கள். இதில் ஒரு சில நடிகர்கள் இவர்கள் இவ்வளவு படித்திருக்கிறார்களா என்று ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு இருக்கிறார்கள்.
விக்ரம்: சினிமாவிற்கு என்று தன்னை மொத்தமாக அர்ப்பணித்துக் கொண்டவர் தான் சியான் விக்ரம். ஒரு காலத்தில் நடிக்கும் வாய்ப்புக்காக பயங்கரமாக கஷ்டப்பட்ட இவர், தற்போது கிடைத்த வாய்ப்புகளை கனக்கச்சிதமாக பயன்படுத்தி வருகிறார். விக்ரம் ஆங்கிலத்தில் புலவர் படிப்பை முடித்து, எம்பிஏ வும் படித்திருக்கிறார்.
கார்த்தி: நடிகர் கார்த்தி பருத்திவீரன் திரைப்படத்தில் நடித்த பொழுது நிஜமாகவே தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண இளைஞனைப் போல் தான் தோற்றமளிப்பார். அதன் பின்னர் இவர் வெளிநாட்டில் படித்தவர் என்று தெரிந்து அனைவருக்கும் ஆச்சரியமாக இருந்தது. கார்த்தி மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துவிட்டு, எம்பிஏவும் முடித்திருக்கிறார்.
சூர்யா: நடிகர் சூர்யா நடிப்பதற்காக எல்லாம் எந்த முயற்சியும் எடுக்காமல், இயக்குனர் வசந்த் அழைத்த போது ஏதோ ஒரு வாய்ப்பை உபயோகப்படுத்திக் கொள்வதற்காக சினிமாவுக்குள் வந்து இன்று ஒட்டுமொத்த உலக சினிமாவும் வியந்து பார்க்கும் வகையில் இருக்கிறார். சூர்யா பி.காம் படித்துவிட்டு, ஒரு பெரிய கம்பெனியில் உதவி மேலாளராகவும் வேலை பார்த்து இருக்கிறார்.
சிம்பு: நடிகர் சிம்பு சிறு வயதிலிருந்து சினிமாவுக்குள் இருக்கிறார். இளம் வயதிலேயே அவருடைய அப்பா டி. ராஜேந்தர் இயக்கிய படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமாகினார். தன்னுடைய கடுமையான உழைப்பினால் இன்று தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாகவும் இருக்கும் சிம்பு விஷுவல் கம்யூனிகேஷன் படித்து இருக்கிறார்.
Also Read:116 நாட்கள் ஷூட்டிங் நிறைவடைந்தது.. பரபரப்பு கிளப்பிய தங்கலான் ரிலீஸ் அப்டேட்
தனுஷ்: நடிகர் தனுஷ் துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகினார். இவர் 12 ஆம் வகுப்பு முடித்த கையோடு தமிழ் சினிமாவிற்குள் வந்துவிட்டார் என நிறைய பேட்டிகளில் சொல்லி இருக்கிறார். இன்று வரை இவர் கல்லூரி படிப்பை படிக்கவில்லை என்று தான் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் தனுஷ் தொலைதூரக் கல்வியின் மூலம் பிசிஏ படித்திருக்கிறார்.
மேலும் தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் ஹீரோவான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பியூசி முடித்திருக்கிறார். உலக நாயகன் கமலஹாசன் மற்றும் நடிகர் அஜித்குமார் பள்ளி படிப்பை பாதியிலேயே நிறுத்தியவர்கள். அதைப் போன்று தளபதி விஜய் கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு தான் சினிமாவிற்குள் நுழைந்தார்.