சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

நடிகைகள் நடித்த கடைசி படம்.. புகழின் உச்சியில் இருக்கும்போதே இறந்த நடிகை

தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் சில நடிகைகள் பிடித்துள்ளனர். அவர்கள் தற்போது நம்மோடு இல்லை என்றாலும் அவர்களின் படங்கள் மூலம் நம்மோடு வாழ்கிறார்கள். அவ்வாறு மிகவும் பரிச்சியமான ஐந்து நடிகைகள் கடைசியாக நடித்த படங்களை பார்க்கலாம்.

ஜெ ஜெயலலிதா : சினிமா, அரசியல் என இரண்டிலும் தன் ஆதிக்கத்தை காட்டியவர் ஜெ ஜெயலலிதா. இவர் ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். ஜெயலலிதா கடைசியாக 1980இல் நதியை தேடி வந்த கடல் படத்தில் சந்திரபாபு உடன் இணைந்து நடித்துள்ளார்.

சாவித்திரி : சாவித்திரி தமிழ், தெலுங்கு, கன்னடம் இந்தி ஆகிய மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சாவித்ரி கல்யாணம் பண்ணிப்பார் என்ற தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கடைசியாக 1984 ஆம் ஆண்டு சரத்பாபு உடன் இணைந்து அழகு படத்தில் நடித்துள்ளார்.

மனோரமா : ஆச்சி மனோரமா ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர் பெரும்பாலும் குணச்சித்திர மற்றும் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மனோரம்மா 1958ஆம் ஆண்டு மாலையிட்ட மங்கை படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கடைசியாக சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் 3 படத்தில் நடித்திருந்தார்.

சுஜாதா : தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர் சுஜாதா. இவர் 1971இல் மலையாள படமான தப்ஷினி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இவர் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான வரலாறு படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சௌந்தர்யா : தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மொழிகளில் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தவர் நடிகை சௌந்தர்யா. இவர் ரஜினியுடன் அருணாச்சலம், படையப்பா போன்ற படங்களில் நடித்துள்ளார். சௌந்தர்யா ஒரு விமான விபத்தில் இறந்தார். கடைசியாக சௌந்தர்யா விஜயகாந்தின் சொக்கத்தங்கம் படத்தில் நடித்திருந்தார்.சௌந்தர்யா புகழின் உச்சியில் இருக்கும்போதே ஒரு விமான விபத்தில் தன் சினிமா கேரியரை மட்டுமல்ல தன் வாழ்க்கையையும் இழந்துவிட்டார்.

- Advertisement -spot_img

Trending News