கோடீஸ்வர வீட்டு பெண்களை வளைத்து போட்ட 6 நடிகர்கள்..

Top 6 Actors who were married rich women: நடிகர்கள் பலர் சினிமாவில் உச்சம் தொட்டு மிகப்பெரிய உயரத்தை அடைந்திருந்தாலும் தங்களுடைய திருமண வாழ்க்கை என்று வரும் பொழுது அதை பெற்றோர்களின் கையிலேயே விட்டுவிடுகிறார்கள். பெரும்பாலும் இவர்கள் பொருளாதார அளவில் உயர்ந்த இடத்தில் இருக்கும் பெண்களை தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். ஒரு சில நடிகர்கள் காதல் திருமணமாக இருந்தாலும் பணக்கார பெண்களை தான் வளைத்துப் போட்டு இருக்கிறார்கள். அப்படி கோடீஸ்வர பெண்களை வளைத்து போட்ட ஆறு ஹீரோக்களை பார்க்கலாம்.

ஆர்யா: நடிகர் ஆர்யா தமிழ் சினிமாவில் பிளேபாயாக ஆட்டம் போட்டு வந்தவர். ஆனால் திருமணம் என்று வந்தவுடன் அதற்கு ஏற்றார் போல் பெண்ணை பார்த்து காதல் வலையில் வீழ்த்தி திருமணம் செய்து கொண்டார். அவர் திருமணம் செய்து இருக்கும் நடிகை சாயிஷா இந்தியாவின் முக்கிய கோடீஸ்வரிகளில் ஒருவர். அவருடைய அப்பா அம்மா இருவருமே பாலிவுட் மிகப்பெரிய புள்ளிகள். மேலும் பாலிவுட் சூப்பர் ஸ்டாராக இருந்த திலீப் குமார் தான் சாயிஷாவின் தாத்தா.

விக்ரம் பிரபு: நடிகர் விக்ரம் பிரபு லட்சுமி என்னும் பெண்ணை தன்னுடைய 20 வயதிலேயே திருமணம் செய்து கொண்டார். விக்ரம் பிரபுவின் மாமனார் நடிகர் பிரபுவுக்கு நெருங்கிய நண்பர் ஆவார். மேலும் சேலத்தில் இருக்கும் எஸ் எஸ் எம் என்ற மிகப்பெரிய கல்லூரியின் நிறுவனர் இவர் தான். காதலில் விழுந்தாலும் விக்ரம் பிரபு பெரிய இடத்துப் பெண்ணாக பார்த்து தான் காதல் வயப்பட்டு இருக்கிறார்.

அருண் விஜய்: நடிகர் அருண் விஜய் பல வருடங்களாக சினிமாவில் ஜெயிக்க போராடி தற்போது தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்திருப்பவர். அருண் விஜய்க்கு பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணம் தான் நடைபெற்றது. ஆனால் இவர் திருமணம் செய்து இருக்கும் ஆர்த்தி மோகன் மிகப்பெரிய தயாரிப்பாளரின் மகள் ஆவார். அருண் விஜய்யை தூக்கிவிட அவருடைய மாமனார் தொடர்ந்து மாஞ்சா வேலு, மலை மலை போன்ற படங்களை தயாரித்தார்.

ஜெயம் ரவி: நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமா நடிகைகளை விட அவருடைய மனைவி ஆர்த்திக்கு தற்போது ரசிகர்கள் அதிகம். என்னதான் காதல் திருமணமாக இருந்தாலும் ரவி பெரிய புளியங்கொம்பை தான் பிடித்திருக்கிறார். ஆர்த்தியின் அப்பா தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் மேனேஜர் ஆவார். மேலும் ஆர்த்தியின் அம்மா சின்னத்திரையை சேர்ந்த தயாரிப்பாளர்.

விஜய்: நடிகர் விஜய் வளர்ந்து வரும் ஹீரோவாக இருக்கும்பொழுது சங்கீதாவை திருமணம் செய்து கொண்டார். சங்கீதாவின் குடும்பம் இலங்கையில் இருந்து லண்டனுக்கு புலம் பெயர்ந்தவர்கள். அவருடைய அப்பா லண்டனில் மிகப்பெரிய தொழிலதிபராக இருக்கிறார். மேலும் இலங்கையிலும் இவர்களுக்கு பல கோடி கணக்கில் சொத்துக்கள் இருக்கிறதாம்.

கார்த்தி: நடிகர் கார்த்தி அவருடைய நெருங்கிய உறவினர்களுக்குள்ளேயே திருமணம் செய்து கொண்டார். சூர்யாவின் திருமணம் காதல் திருமணம் என்பதால் கார்த்தி வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது சிவகுமாரின் மிகப்பெரிய ஆசை. அதை கார்த்தியும் நிறைவேற்றினார். இருந்தாலும் அவர் திருமணம் செய்திருக்கும் ரஞ்சினினியின் அப்பா ஈரோட்டில் மிகப்பெரிய தொழிலதிபர். கோடிக்கணக்கில் அவருக்கு சொத்துக்கள் இருக்கிறதாம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →