80ஸ், 90ஸ்-களில் ஹீரோவாக இருந்த பலர் தற்போது காமெடியன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் என காலத்திற்கேற்ப தங்களை மாற்றி நடித்து வருகின்றனர். சத்யராஜ், பிரபு, சரவணன், சரத்குமார் போன்றவர்கள் தங்களுக்கு கிடைக்கும் கதாபாத்திரை ஏற்று நடித்து சினிமாவில் ஜெயித்து வருகின்றனர். ஒரு சில நடிகர்கள் ஹீரோவாக நடிக்க வேண்டும் என சொந்த தயாரிப்பு, கிடைத்த கதைகளில் எல்லாம் நடித்து மார்க்கெட்டை இழந்து தவிக்கின்றனர், அப்படிப்பட்ட ஹீரோக்கள் ஒரு சிலரின் லிஸ்ட்.
பிரஷாந்த்: பிரஷாந்த் அழகும், துள்ளலும் சேர்ந்த 90ஸ் களில் பிஸியான நடிகர். இவர் உச்சநட்சத்திரமாக நடித்து கொண்டிருக்கும் போது தான், விஜய் அஜித் எல்லாம் வளர்ந்து கொண்டிருக்கிறார்கள். பிரஷாந்திற்கு அப்போது டாப் ஸ்டார் என்ற பெயரே உண்டு. 20 களின் நடுவில் பிரஷாந்திற்கு மார்க்கெட் குறைய தொடங்கியது, ஆனால் பிரஷாந்த் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் ஹீரோ அந்தஸ்த்திற்க்காக அடுத்தடுத்து பிளாப் படங்கள் கொடுத்து முற்றிலுமாக மார்க்கெட் இழந்தார்.
அப்பாஸ்: அறிமுகமான வருடங்களில் அப்பாஸுக்கு நல்ல கிரேஸ் இருந்தது, பெண் ரசிகர்களும் அதிகமாக இருந்தனர். ஆனால் அப்பாஸ் இரண்டு கதாநாயகர்களின் படங்களில் நடிக்குமளவிற்கு பின்னுக்கு போய்விட்டார். ஒரு சில படங்களில் வில்லனாக முயற்சி செய்த போதும் எடுபடவில்லை.
ஷியாம்: ஷியாம் 12 பி, ஏய் நீ ரொம்ப அழகா இருக்க, இயற்கை,லேசா லேசா , உள்ளம் கேட்குமே படங்களில் காதல் நாயகனாக நடித்து வெற்றி பெற்றார். இவர் ஆக்சன் ஹீரோவாக மாற முயற்சி செய்த படங்களே இவர் மார்க்கெட் இழக்க காரணம்.
பரத்: பரத்திற்கும் நடிகர் ஷ்யாமின் நிலைமை தான். காதல் நாயகனாக வலம் வர வேண்டிய அவர் இயக்குனர் பேரரசுடன் இணைந்து கொடுத்த படங்களே பரத்தின் தோல்விக்கு காரணம். மாஸ் ஹீரோ ஆக வேண்டும் என ஆசைப்பட்டு மார்க்கெட்டை இழந்தார்.
கரண்: கரண் இந்த லிஸ்டில் முற்றிலும் மாறுபட்டவர். ஆரம்ப காலங்களில் வில்லனாக நடித்து கொண்டிருந்த இவர் தன்னுடைய ரி என்ட்ரியில் கதாநாயகனாக களம் இறங்கினார். கதாநாயகன் ஆசையில் இவர் சொந்த தயாரிப்பில் எடுத்த அத்தனை படங்களும் பிளாப்.
ஜீவன்: ஜீவன், கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா-ஜோதிகா நடிப்பில் வெளியான காக்க காக்க திரைப்படத்தில் பாண்டியா என்னும் வில்லனாக வந்து மிரட்டி இருப்பார். அதை தொடர்ந்து திருட்டு பயலே, நான் அவன் இல்லை போன்ற வித்தியாசமான கதைகள் கிடைத்து மிகப்பெரிய ஹிட் அடித்தார். ஆனால் இந்த படங்களிலன் இரண்டாம் பாகத்தில் நடித்ததே இவர் மார்க்கெட் போக காரணம்.