ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

காதலுக்காக மதம் மாறிய 6 நடிகைகள்.. விக்கியின் காதலுக்காக மதம் மாறிய நயன்தாரா

Actress converted religion for love: சினிமாவில் நடிப்பவர்களின் காதல் என்பது அவ்வப்போது மாறிவிடும், நிலைக்காது என்பது பொதுமக்களின் பொதுவான கருத்து. அதற்கு ஏற்றது போல் பல சினிமா பிரபலங்கள் காதல் திருமணங்கள் செய்து கொண்டாலும் குறுகிய காலத்திலேயே பிரிந்து விடுவார்கள். இப்படி ஒரு நெகட்டிவான கருத்து இருக்கும் பொழுது காதலுக்காக தங்களுடைய மதத்தையே மாற்றிய நடிகைகளும் சினிமாவில் இருக்கிறார்கள்.

நக்மா: நடிகை நக்மா பிறப்பால் இந்து மதத்தை சேர்ந்தவர். இவருடைய அம்மா முஸ்லிம், அப்பா இந்து. சினிமாவுக்கு வந்த பிறகு இவர் ஒரு நடிகரை தீவிரமாக காதலித்திருக்கிறார். அந்த நடிகர் கிறிஸ்தவ மதம் என்பதால் இவரும் கிறிஸ்துவ மதத்திற்கு மாறி இருக்கிறார். ஆனால் இவர்களது காதல் தோல்வியில்தான் முடிந்தது. இருந்தாலும் நக்மா கிறிஸ்துவ மதத்தை தான் பின்பற்றி வருகிறார்.

Also Read:நயன்தாராவை விட பல கோடி அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை.. சில நிமிடத்திற்கு மட்டும் இத்தனை கோடியா.?

குஷ்பூ: நடிகை குஷ்பூ மும்பையைச் சேர்ந்தவர். இவர் பிறப்பால் முஸ்லிம் மதத்தை சார்ந்தவர். சினிமாவுக்காக தன்னுடைய பெயரை குஷ்பூ என வைத்துக் கொண்டார். சுந்தர் சி உடனான திருமணத்திற்கு பிறகு, இந்து மதத்தை தீவிரமாக கடைபிடித்து வருகிறார் இவர்.

மோனிகா: குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் தன்னுடைய நடிப்பை தொடங்கியவர் நடிகை மோனிகா. தங்கர்பச்சான் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த அழகி திரைப்படத்தில் நந்திதா தாஸ் பள்ளி வயதில் படிப்பது போல் வரும் காட்சிகளுக்கு இவர் தான் நடித்திருப்பார். இந்த படம் இவருக்கு மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. இவர் இந்து மதத்தில் இருந்து முஸ்லிம் மதத்திற்கு மாறிவிட்டார்.

சமந்தா: நடிகை சமந்தா தெலுங்கு முன்னணி ஹீரோயின் ஆக இருந்தாலும், இவருடைய சொந்த ஊர் சென்னையை சேர்ந்த பல்லாவரம். இவர் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர். நடிகர் சித்தார்த்தை காதலித்துக் கொண்டிருக்கும் பொழுதே இவர் இந்து மதத்திற்கு மாறிவிட்டார். அதன் பின்னர் இன்றுவரை இவர் இந்து மதத்தை தான் பின்பற்றி வருகிறார்.

Also Read:மீண்டும் நயன்தாராவுடன் ஜோடி போட ஆசைப்படும் யோகி பாபு.. வெளியான சூப்பர் அப்டேட்

நயன்தாரா: நடிகை நயன்தாரா வை பூர்வீகமாக கொண்ட கிறிஸ்டியன் குடும்பத்தை சேர்ந்தவர். அவருடைய கணவர் விக்னேஷ் சிவனுக்கு சொந்த ஊர் கும்பகோணம். நயன்தாரா விக்கியை திருமணம் செய்வதற்கு முன் இந்து மதத்தை தழுவினார். இன்று வரை பல கோவில்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார் நயன்.

ஹேமமாலினி: நடிகை ஹேமமாலினி தன்னுடன் நடித்த பாலிவுட் சூப்பர் ஸ்டார் தர்மேந்திரா உடன் காதலில் இருந்து இருக்கிறார். ஆனால் தர்மேந்திராவுக்கு தன் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஹேமமாலினியை திருமணம் செய்ய விருப்பம் இல்லை. இந்து மதப்படி முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்யக்கூடாது. இதனால் இவர்கள் இருவருமே முஸ்லிம் மதத்திற்கு மாறி திருமணம் செய்து இருக்கிறார்கள். முஸ்லிம் மதத்தில் விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்து கொள்ளலாம் என்ற வழக்கம் அப்போது இருந்ததால் இப்படி செய்திருக்கிறார்கள்.

Also Read:லியோவுக்காக தீயாக வேலை செய்யும் விஜய்.. ஜவான் கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ்

 

Trending News