சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

எஸ்ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ஹிட்டான 5 படங்கள்.. விஜய்யை தூக்கிவிட்ட அந்த படம்

தமிழ் சினிமாவில் இயக்குனர், தயாரிப்பாளர், நடிகர், எழுத்தாளர் என பன்முகத் திறமை கொண்டவர் எஸ் ஏ சந்திரசேகர். இவர் அவள் ஒரு பச்சைக்குழந்தை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்துள்ளார். அதில் சிறந்த 5 படங்களை இப்போது பார்க்கலாம்.

சட்டம் ஒரு இருட்டறை : எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் சட்டம் ஒரு இருட்டறை. இப்படத்தில் விஜயகாந்த், பூர்ணிமா தேவி மற்றும் வசுமதி ஆகியோர் நடித்திருந்தனர். இப்படம் திரையரங்குகளில் 100 நாட்கள் தாண்டி வெற்றிகரமாக ஓடி வணிகரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றது.

சாட்சி : எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் விஜயகாந்த், விஜி, எம்என் நம்பியார், பண்டரிபாய் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் சாட்சி. இப்படம் ரக்தம் என்ற மலையாளப் படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்திற்கு சங்கர் கணேஷ் இசை அமைத்திருந்தனர். இப்படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

நான் ஒரு சிகப்பு மனிதன் : எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த், பாக்யராஜ், அம்பிகா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நான் ஒரு சிகப்பு மனிதன். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் தளபதி விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். நான் ஒரு சிகப்பு மனிதன் படம் பாக்ஸ் ஆபீசில் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.

நீதிக்கு தண்டனை : எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ராதிகா, நிழல்கள் ரவி, சரன் ராஜ், செந்தில் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நீதிக்கு தண்டனை. இப்படத்துக்கு எம் எஸ் விஸ்வநாதன் இசையமைத்து இருந்தார். இப்படம் வெளியான போது பல சர்ச்சைகள் எழுந்தாலும் அதன் பின்பு வணிக ரீதியாக நல்ல வசூலைப் பெற்றது.

ஒன்ஸ்மோர் : எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, விஜய், சிம்ரன் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ஒன்ஸ்மோர். இப்படத்திற்கு தேவா இசையமைத்திருந்தார். விஜயின் திரை வாழ்க்கையில் ஒன்ஸ்மோர் படம் மைல்கல்லாக அமைந்தது. மேலும், ஒன்ஸ்மோர் படம் வணிக ரீதியாக நல்ல லாபத்தை பெற்று தந்தது.

Trending News