சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

பதட்டத்திலேயே வைத்திருக்கும் சிறந்த 6 புலனாய்வு படங்கள்.. ராட்சசனை மிஞ்சிய போர் தொழில்

Ratchasan-Por Thozhil: பொதுவாக தமிழ் சினிமாவில் பலவிதமான கதையம்சம் கொண்ட படங்கள் வெளியாகி வருகிறது. அவ்வப்போது அத்தி பூத்தார் போல் திரில்லர் படங்களும் வந்து ரசிகர்களை பயமுறுத்தி தான் செல்கிறது. அந்த வகையில் இதுவரை கோலிவுடில் வெளியான படங்களில் ரசிகர்களை பதட்டத்தில் வைத்திருந்த 6 திரில்லர் படங்களை பார்க்கலாம்.

துருவங்கள் பதினாறு : கார்த்திக் நரேன் இயக்கத்தில் ரகுமான் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் துருவங்கள் பதினாறு. இப்படம் சஸ்பென்ஸ் நிறைந்த கிரைம் திரில்லர் படமாக எடுக்கப்பட்டிருந்தது. வெவ்வேறு இடங்களில் நடக்கும் மூன்று சம்பவங்களுக்கிடையே ஆன முடிச்சை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் விசாரணை மிகவும் விறுவிறுப்பாக எடுக்கப்பட்டிருக்கும்.

Also Read : சரத்குமார், அசோக் செல்வன் நடிப்பு அபாரம்.. போர் தொழில் அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

யுத்தம் செய் : மிஷ்கின் இயக்கத்தில் சேரன், லட்சுமி ராமகிருஷ்ணன் நடிப்பில் வெளியான படம் யுத்தம் செய். எப்போதுமே சோர்வடையாத சிபிசிஐடி அதிகாரியாக இருக்கும் சேரன் தனது சகோதரி காணாமல் போன வழக்கை விசாரிக்கிறார். அப்போது இளம் பெண்கள் காணாமல் போகும் விஷயம் தெரிந்த பின்பு மிகவும் சிரமப்பட்டு சேரன் தடயங்களை சேகரிக்க முயற்சிப்பார். இப்படமும் சீட்டின் நுனிக்கு வரவைக்கும் அளவிற்கு சஸ்பென்ஸ் நிறைந்த படமாக எடுக்கப்பட்டிருந்தது.

வேட்டையாடு விளையாடு : கௌதம் மேனன் இயக்கத்தில் கமல், ஜோதிகா, கமலினி முகர்ஜி, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் வேட்டையாடு விளையாடு. சைக்கோ கொலைகாரர்களை வேட்டையாடும் டிஜிபி ராகவனாக கமல் இந்த படத்தில் நடித்திருப்பார். இந்த படத்தில் அவரது இன்வெஸ்டிகேஷன் ரசிகர்களை கவர்ந்தது.

Also Read : கொடுத்த காசுக்கு திருப்தி, இந்த 7 விஷயங்களுக்காக போர் தொழில் பார்க்கலாம்.. பழுவேட்டரையரின் வெறித்தனம்!

தீரன் : எச் வினோத் இயக்கத்தில் கார்த்தி, ரகுல் ப்ரீத்தி சிங் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருந்த படம் தீரன் அதிகாரம் ஒன்று. நேர்மையான டிஎஸ்பி அதிகாரியாக இருக்கும் கார்த்தி ஒரு கொலைக்கான விசாரணையில் இறங்கும்போது அவரைச் சுற்றி உள்ளவர்களும் கொலை செய்யப்படுகிறார்கள். கடைசியில் ஒவ்வொன்றாக இந்த கொலைக்கான காரணத்தை கார்த்தி எப்படி கண்டுபிடிக்கிறார் என்பது தீரன்.

ராட்சசன் : ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், அமலாபால் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராட்சசன். பள்ளி மாணவிகள் அடுத்தடுத்து மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டு வரும் நிலையில் அதற்கான காரணத்தை விஷ்ணு விஷால் ஆராய்கிறார். அந்த சீரியல் கில்லர் யார் என்பதை கடைசியில் கண்டுபிடித்தார் என்பது தான் ராட்சசன்.

போர் தொழில் : விக்னேஷ் ராஜா இயக்கத்தில் சரத்குமார் அசோக் செல்வன் மற்றும் பலர் நடிப்பில் உருவான படம் போர் தொழில். இப்படத்தில் சிபிசிஐடியாக இருக்கும் சரத்குமார் மற்றும் புதிதாக பணியில் சேர்ந்திருக்கும் அசோக் செல்வன் இருவரும் திருச்சியை சுற்றியுள்ள இடங்களில் மர்ம முறையில் இளம் பெண்களை கொலை செய்யும் கொலையாளியை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்குகிறார்கள். கடைசியில் அதில் வெற்றி கண்டார்கள் என்பது தான் போர் தொழில்.

Also Read : ராட்சசன் ஆக வந்த 5 பெஸ்ட் சைக்கோ கேரக்டர்கள்.. ஹீரோவை மறந்து கொடூரமாக நடித்த தனுஷ்

- Advertisement -spot_img

Trending News