திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

தனுஷின் அசுரதனமான நடிப்பில் ஹிட்டடித்த 6 படங்கள்.. கண்ணீரை வரச் செய்த சிவசாமி

ஆரம்பத்தில் ஒரு கதாநாயகனுக்கு உண்டான தோற்றம் இல்லாததா பலரும் தனுஷ் சினிமாவில் நீடிக்க முடியாது என விமர்சித்து வந்தனர். ஆனால் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் ஆரம்பித்த தனுஷின் திரைப்பயணம் தற்போது பாலிவுட், ஹாலிவுட் என அனைத்து மொழி படங்களிலும் தனது நடிப்பை நிரூபித்து காட்டியுள்ளார். தற்போது தனுஷ் நடிப்பில் அசத்திய 6 படங்களை தற்போது பார்க்கலாம்.

காதல் கொண்டேன் : செல்வராகவன் இயக்கத்தில் தனுஷின் இரண்டாவது படமாக வெளியானது காதல் கொண்டேன். ஒரு மனநிலை பாதிக்கப்பட்ட பையன் ஒரு பெண்ணிடம் காதலில் விழுகிறார். அந்த பெண் வேறு ஒருவரை காதலிக்கிறார். இவ்வாறு வித்தியாசமான கதைக்களத்துடன் உருவான படத்தில் தனுஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

புதுப்பேட்டை : செல்வராகவன், தனுஷ் கூட்டணியில் வெளியான மற்றொரு படம் புதுப்பேட்டை. இப்படம் கேங்ஸ்டர் கதையாக எடுக்கப்பட்டது. இப்படத்தில் தனுஷ் கொக்கி குமார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சின்ன குற்றங்களைச் செய்து வந்த அவர் சக்திவாய்ந்த கேங்ஸ்டராக எப்படி மாறுகிறார் என்பதே படத்தின் கதை.

ஆடுகளம் : தனுஷ், வெற்றிமாறன் கூட்டணியில் மாபெரும் வெற்றி பெற்ற படம் ஆடுகளம். சேவல் சண்டை என்ற கலாச்சாரத்தை மையமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டு இருந்தது. தனது சேவலுக்காக எதையும் செய்யத் துணியும் கருப்பு என்ற கதாபாத்திரத்தில் தனுஷ் நடித்து இருந்தார். இப்படம் ஆறு தேசிய விருதுகளை வென்று இருந்தது.

அசுரன் : வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சுவாரியர், பசுபதி நடிப்பில் வெளியான திரைப்படம் அசுரன். இப்படத்தில் தனுஷின் சிவசாமி கதாபாத்திரத்திற்காக தேசிய விருது கிடைத்தது. இப்படத்தில் தனுஷுக்கு வயதான கதாபாத்திரம் என்றாலும் அதையேற்று கனகச்சிதமாக நடித்திருந்தார். மேலும் இப்படத்தில் அவரது நடிப்பு பலரையும் கண்ணீரில் ஆழ்த்தி இருந்தார்.

வடசென்னை : வெற்றிமாறன் தனுஷ் கூட்டணியில் வெளியான வடசென்னை படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. சென்னையின் முக்கியமான இடங்களில் ஒன்றான வட சென்னையில் இரண்டு பிரிவினர் இடையே நடக்கும் யுத்தம் இப்படத்தின் கதை. படம் முழுக்க தனுஷ் இல்லை என்றாலும் தனக்கான கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்திருந்தார்.

கர்ணன் : மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் கர்ணன். ஒடுக்கப்பட்ட மக்களின் ஒடுக்கு முறையை பற்றி வெளிச்சம்போட்டு காட்டப்பட்ட படம் இது. இப்படத்தில் தங்களின் உரிமைக்காக போராடும் சாதாரண இளைஞனாக தனுஷ் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Trending News