தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் 6 டாப் ஹீரோக்கள்.. விஜய்யால தொட கூட முடியாத உச்சத்தில் ரஜினி

Top 6 highest paid heroes: ஒரு காலத்தில் சினிமா என்றாலே அது பாலிவுட் தான் என்று சொல்லும் அளவிற்கு அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து ஹீரோக்கள் மிகப்பெரிய அளவில் பிரபலமானார்கள். ஆனால் அதையெல்லாம் ஓவர் டேக் பண்ணும் அளவிற்கு இப்பொழுது தென்னிந்தியா சினிமாவும் மிகப்பெரிய வளர்ச்சி அடைந்திருக்கிறது.

இதனால் சினிமாவையும் தாண்டி ஹீரோக்களும் முன்னேற்றம் காட்டும் விதமாக அவர்கள் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் சம்பளத்தை கூடிக்கொண்டே வருகிறார்கள். அந்த வகையில் தென்னிந்திய நடிகர்களில் யார் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள் என்பதை ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

ஆசியாவிலேயே அதிகமாக சம்பளம் வாங்கும் நடிகர்

ரஜினி: வயசு ஆனாலும் உன் அழகும் ஸ்டைலும் குறையவே இல்லை என்று சொல்வதற்கு ஏற்ப நிஜத்திலும் ரஜினி இளம் ஹீரோகளுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நடித்துக் கொண்டு வருகிறார். அந்த வகையில் 73 வயது என்று சொன்னால் யாரும் நம்ப முடியாத கம்பீரமான நடை, தெளிவான பேச்சு, ஸ்டைலும் ரசிகர்களை அவர் பக்கம் கவர்ந்திருக்கிறது.

அதனால் தான் கிட்டத்தட்ட 45 வருடங்களுக்கு மேலாக ஹீரோவாக ஜொலித்து வருகிறார். தற்போது லோகேஷ் இயக்கத்தில் கூலி படத்திலும், ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்திலும் நடித்து வருகிறார். அந்த வகையில் வேட்டையன் படப்பிடிப்பு முடிந்த நிலையில் அக்டோபர் 10ஆம் தேதி அனைத்து திரையரங்களிலும் ரிலீசாக போகிறது. இப்படி இந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் இவர் தென்னிந்தியாவிலேயே அதிக சம்பளமாக ஒரு படத்திற்கு 280 கோடி பெற்று வருகிறார்.

விஜய்: ஆட்ட நாயகனாகவும் வசூல் மன்னனாகவும் ஜொலித்துவரும் விஜய், அவருடைய 69 வது படத்திற்கு பிறகு சினிமாவிற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு அரசியலில் கவனம் செலுத்தப் போவதாக அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார். இதைக் கேட்டு ஒரு பக்கம் ரசிகர்கள் சந்தோஷப்பட்டாலும் இன்னொரு பக்கம் இனி இவருடைய நடிப்பை பார்க்க முடியாது என்று ஏக்கத்துடனும் இருக்கிறார்கள். இருந்தாலும் மக்களுக்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்பதால் 200 கோடி சம்பளமாக வாங்கும் சினிமாவை விட்டுவிட்டு அரசியலில் நுழையப் போகிறார்.

பிரபாஸ்: நூற்றில் ஒரு நடிகராக பல படங்களின் நடித்து வந்த பிரபாஸ், எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடித்த பிறகு ஒட்டுமொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்து விட்டார். அந்த வகையில் தற்போது ஒரு படத்தின் சம்பளமாக 150 முதல் 200 கோடி வரை வாங்கி வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளிவந்த கல்கி படம் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்துள்ளதால் இன்னும் இவருடைய சம்பளம் அதிகரிக்க போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கமலஹாசன்: சினிமாவின் நுணுக்கங்களை கரைத்துக் குடித்த ஒரு என்சைக்கிளோபீடியா என்று சொல்லும் அளவிற்கு கலைஞனாக பல சாதனைகளை கொடுத்திருக்கிறார். அந்த வகையில் இந்தியாவின் மிகவும் முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். ஆனால் இவருடைய படங்கள் பொதுவாக கமர்சியல் ரீதியாக இருக்காது. அதனாலேயே வசூல் அளவிலும் பெருசாக லாபம் கிடைக்காது. அதனால் சம்பளமாக 100 முதல் 150 கோடி வரை வாங்கி வருகிறார். இந்த சம்பளமே விக்ரம் படம் பிரம்மாண்டமாக வெற்றி பெற்றதால் தான் அதிகரித்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

அல்லு அர்ஜுன்: இப்படி ஒரு நடிகர் இருக்கிறார் என்பதை அனைவருக்கும் புரிய வைத்தது புஷ்பா படம் தான் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு அந்த படத்தில் இவருடைய நடிப்பு மகத்தான வெற்றியை கொடுத்தது. இந்த படத்தின் வெற்றிக்குப் பிறகு அல்லு அர்ஜுனா அவருடைய சம்பளமாக 100 கோடி முதல் 150 கோடி வரை வேண்டும் என்று உயர்த்தி விட்டார்.

ராம்சரண்: ஒத்த படத்தின் மூலம் ஒட்டு மொத்த ரசிகர்களையும் திரும்பிப் பார்க்க வைத்த ராம்சரண், ஆர்ஆர்ஆர் படத்தின் வெற்றிக்கு பிறகு இவருடைய சம்பளத்தை அதிகரித்துக் கொண்டார். அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் நடித்துவரும் கேம் சேஞ்சர் படத்திற்காக 100 கோடி சம்பளத்தை பெற்றிருக்கிறார். இதனை தொடர்ந்து அடுத்து நடிக்கப் போகும் படத்திற்கு 130 கோடி சம்பளம் வேண்டும் என்று டிமாண்ட் பண்ணி இருக்கிறார்.

Next Story

- Advertisement -