புதன்கிழமை, ஜனவரி 15, 2025

இந்தியாவில் அதிக கோயில்கள் இருக்கும் டாப் 6 மாநிலங்கள்.. தமிழ்நாட்டிற்கு எத்தனையாவது இடம் தெரியுமா?

Top 6 states’ temples: காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி, காசி விசாலாட்சி இந்த மூன்று அம்மன்களையும் தன் வாழ்நாளில் பார்த்து விட வேண்டும் என்பதுதான் ஒவ்வொரு இந்திய பெண்களின் ஆசையாக இருக்கும். பக்தி நிலை, முக்தி நிலை என்பதை தாண்டி கலைநயத்தை பார்க்கவும் இந்தியாவில் இருக்கும் அத்தனை கோயில்களையும் சுற்றிப் பார்க்க நிறைய பேர் ஆசைப்படுவது உண்டு.

அப்படிப்பட்டவர்களுக்கு இந்த செய்தி பெரிய வரப்பிரசாதமாக இருக்கும். இந்தியாவில் அதிக கோயில்கள் இருக்கும் மாநிலங்களின் டாப் 6 லிஸ்ட்டை தான் இந்த செய்தியில் நாம் பார்க்க போகிறோம்.

அதிக கோயில்கள் இருக்கும் டாப் 6 மாநிலங்கள்

தமிழ்நாடு: அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களின் லிஸ்டில் முதலிடத்தில் இருப்பது தமிழ் நாடு தான். காவல் தெய்வம், கன்னி தெய்வம், அம்மன் கோயில்கள், பெருமாள் கோயில்கள், சிவன், முருகன், விநாயகர், விஷ்ணு, சனி பகவான், ஆஞ்சநேயர், சாய்பாபா, கிருஷ்ணர் என தமிழ்நாட்டில் இல்லாத கோயில்களே கிடையாது. சமீபத்திய கணக்கெடுக்கின்படி தமிழ்நாட்டில் மொத்தம் 79,154 கோயில்கள் இருக்கின்றன.

மகாராஷ்டிரா : இந்தியாவில் உள்ள அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களின் லிஸ்டில் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்தில் உள்ளது. இந்த மாநிலத்தில் மொத்தம் 77,283 கோயில்கள் இருக்கின்றன.ஹோட்டல் கோவில், கோண்டேஷ்வர் கோவில், கோபேஷ்வர் கோவில், பிரவர சங்கம் சித்தேஸ்வரர் கோவில் போன்றவை நாம் அங்கு பார்க்க வேண்டிய முக்கியமான கோயில்கள் ஆகும்.

கர்நாடகா: அதிக இந்து கோயில்கள் கொண்ட மாநிலங்களின் லிஸ்டில் கர்நாடகா மூன்றாம் இடத்தில் இருக்கிறது. இந்த மாநிலத்தில் மொத்தம் 61,232 கோயில்கள் இருக்கின்றன.உடுப்பி ஸ்ரீ கிருஷ்ணர் கோவில், கேசவா கோவில், வித்யாசங்கரா கோவில், போன்றவை அங்குள்ள பிரபலமான கோயில்கள் ஆகும்.

மேற்கு வங்காளம்: இந்த லிஸ்டில் நான்காவது இடத்தில் மேற்கு வங்காளம் இருக்கிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 53,658 கோயில்கள் இருக்கின்றன.மதன் மோகன் கோயில் , ஜல்பேஷ் கோயில் , தாராபித் கோயில் , கிரீடேஸ்வரி கோயில் , பிஷ்ணுபூர் டெர்ரகோட்டா கோயில்கள் , மாயாபூர் சந்திரோதய மந்திர் போன்றவை அங்குள்ள முக்கியமான கோயில்கள் ஆகும்.

குஜராத்: அதிக கோயில்கள் கொண்ட மாநிலங்களின் லிஸ்டில் குஜராத் மாநிலம் ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. இங்கு மொத்தம் 49,995 கோயில்கள் இருக்கின்றன. இங்கு சிவன், கிருஷ்ணர் மற்றும் ராமருக்கு கோவில்கள் அதிகமாக கட்டப்பட்டிருக்கிறது.

ஆந்திர பிரதேசம்: இந்த லிஸ்டில் ஆந்திர பிரதேசம் ஆறாவது இடத்தில் இருக்கிறது. இங்கு மொத்தம் 47,152 கோவில்கள் இருக்கின்றன. தென்னிந்தியாவில் இருப்பவர்கள் சொர்க்கவாசல் ஆக நினைக்கும் திருப்பதி கோவில் இங்கே பிரபலமானது. மாதத்திற்கு மூன்று முதல் நாலரை கோடி வரை இந்த கோயிலில் உண்டியல் பணம் மட்டும் சேர்கிறது.

Trending News