சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

கருணாஸ் நடிப்பில் மறக்க முடியாத 6 படங்கள்.. நந்தா பட லொடுக்கு பாண்டி ஞாபகம் இருக்கா!

சினிமாவில் நடிகர், இசையமைப்பாளர், அரசியல்வாதி என பன்முகத் திறமைகளை கொண்டவர் தான் காமெடி நடிகர் கருணாஸ். இவர் தனது படங்களில் தொடர்ந்து காமெடி ரோலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அப்படியாக இவர் ஹீரோக்களுடன் இணைந்து அடித்த லூட்டிக்கு அளவே இல்லை என்று சொல்லலாம். காமெடி நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வரக்கூடிய கருணாஸ்  நடிப்பில் வெளியான மறக்க முடியாத 6 படங்களை இங்கு காணலாம்.

நந்தா: 2001 ஆம் ஆண்டு இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யாவின் மாறுபட்ட நடிப்பில் வெளியான திரைப்படம் நந்தா. இதில் சூர்யாவுடன் லைலா, ராஜ்கிரண், கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிலும் லொடுக்கு பாண்டி என்னும் கதாபாத்திரத்தில் கருணாஸ் பிச்சு உதறி இருப்பார். இவரின் நையாண்டி காட்சிகள் மீம்ஸ் வடிவில் இன்றளவும் சமூக வலைதளங்களில்  ட்ரெண்ட் ஆகி வருகிறது.

Also Read: நந்தா சூர்யா கெட்டப்பில் மிரள விட்ட பாபி சிம்ஹா.. எதிர்பார்ப்பை எகிற வைத்த பிருந்தா மாஸ்டரின் தக்ஸ் ட்ரெய்லர்

வில்லன்: 2002 ஆம் ஆண்டு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் வில்லன். இதில் அஜித் குமார் உடன் மீனா மற்றும் கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். படத்தில் அஜித்தை போலீஸிடம் மாட்டிவிடும் திருடன் கதாபாத்திரத்தில் இவர் அடிக்கும் லூட்டி ரசிக்க கூடிய விதத்தில் அமைந்துள்ளது.

தேவதையை கண்டேன்: 2005 ஆம் ஆண்டு இயக்குனர் பூபதி பாண்டியன் இயக்கத்தில் தனுஷ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த திரைப்படம் ஆகும். இதில் தனுஷ் உடன் ஸ்ரீதேவி, கருணாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தில்  தனுஷிற்கு தோள் கொடுக்கும் தோழனாகவும், காமெடி கதாபாத்திரத்திலும் தனது அசாத்திய திறமையை வெளிப்படுத்தி இருப்பார்.

Also Read: அஜித்தின் சூப்பர் ஹிட் படத்தை மிஸ் செய்த மீனா.. அந்த மாதிரி கிக் ஏற்றும் கேரக்டர் இவங்களுக்கு செட்டாகாது!

திண்டுக்கல் சாரதி: 2008 ஆம் ஆண்டு கருணாஸ் ஹீரோவாக நடித்து வெளிவந்த திண்டுக்கல் சாரதி ஒரு நகைச்சுவை திரைப்படம் ஆகும். இப்படத்தை இயக்குனர் சிவ சண்முகம் இயக்கியுள்ளார். மேலும் கருணாஸ் உடன் லிவிங்ஸ்டன், நாசர், சரண்யா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் இவர் எந்த ஒரு விஷயத்திற்கும் சந்தேகப்படும் கதாபாத்திரத்தில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

பானா காத்தாடி: இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் 2010 ஆம் ஆண்டு வெளியான ரொமான்டிக் திரைப்படம் ஆகும். இதில் அதர்வா உடன் சமந்தா, பிரசன்னா உள்ளிட்டோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தில் கருணாஸ், குமார் என்னும் கதாபாத்திரத்தில் டிபி கஜேந்திரன் உடன் அடிக்கும் லூட்டியானது ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. 

கட்டாகுஸ்தி: இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில் வெளிவந்த கட்டாகுஸ்தி ரொமான்டிக் கலந்த காமெடி திரைப்படம் ஆகும். இதில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லட்சுமி நடித்துள்ளார். இப்படம் கட்டாகுஸ்தி விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டதாகும். மேலும் கருணாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதிலும் காமெடி ரோலில் பின்னி பெடல் எடுத்து உள்ளார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.

Also Read: 51 வயது கருணாசுக்கு ஜோடியாக 28 வயது நடிகை.. எதிர்பார்ப்பைக் கிளப்பும் புதிய படம்

- Advertisement -spot_img

Trending News