திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சமீபத்திய தியேட்டர் ரிலீஸில் பட்டையை கிளப்பிய 6 படங்கள்.. வசூலில் வாயடைக்க செய்த ஜெயிலர்

Jailer Movie: சமீபத்திய தியேட்டர் ரிலீஸில் வெற்றிகரமாக வெளியாகி மாஸ் காட்டிய 6 படங்களை பற்றி பார்க்கலாம். இந்த படங்கள் ரசிகர்களின் மனதையும் வென்று, வசூலையும் அள்ளி குவித்தன. இருப்பினும் மற்ற 5 படங்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற படமும் இந்த வரிசையில் இருக்கிறது.

பொன்னியின் செல்வன்: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் பலரையும் ஒன்று திரட்டி மணிரத்தினம் இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான படம் பொன்னியின் செல்வன். ரசிகர்கள் அனைவரிடமும் மாபெரும் வரவேற்பினை பெற்றது. இதன் முதல் நாள் வசூல் மட்டுமே உலக அளவில் 80 கோடியை தாண்டியது.இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு வெளியான பொன்னியின் செல்வன் பாகம் 2, சுமார் 345 கோடியை தாண்டியது.

Also Read:ஜெயிலர் ஓரமா போங்க என செப்டம்பர் முதல் வாரம் வெளிவரும் 6 படங்கள்.. முட்டி மோதி ஜெயிக்கப் போவது இவர்தான்

விக்ரம்: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2022 ஆம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த விக்ரம் திரைப்படம் இதில் அடங்கும். இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இத்திரைப்படத்தின் வசூல் பொன்னியின் செல்வனை விடவே அதிகமானது,சுமார் 414-500 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனை குவித்தது.

விடுதலை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான விடுதலை திரைப்படமும் இதில் ஒன்றாகும். இத்திரைப்படத்தில் சூரி மற்றும் விஜய் சேதுபதி முதன்மை கதாபாத்திரமாக நடித்துள்ளார்கள். இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் பாக்ஸ் ஆபீஸ் கலெக்ஷன் சுமார் 23 கோடி வசூல் ஈட்டி உள்ளது.

Also Read:அஜித், விஜய்யிடம் தோற்றுப் போய் நிற்கும் ரஜினி.. இதுல அடுத்த படம் வேற என்ன நிலைமை ஆகப்போகுதோ?

டிடி ரிட்டர்ன்ஸ்: நடிகர் சந்தானம் நடிப்பில்,பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. இது சிறந்த ஹாரர் காமெடி திரைப்படமாம் என ரசிகர்கள் பாராட்டுகின்றனர் .இத்திரைப்படம் நடிகர் சந்தானத்திற்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்து இருக்கிறது.

போர் தொழில் : கடந்த ஜூன் மாதம் விக்னேஷ் ராஜா இயக்கத்தில், சரத்குமார் மற்றும் அசோக்செல்வன் நடிப்பில் திரையரங்குகளில் வெளியான போர் தொழில் திரைப்படமும் பேமிலி ஆடியன்ஸ் இடையே நல்ல வரவேற்பினை பெற்றது. குறைந்த பட்ஜெட்டில் உருவான இத்திரைப்படம் சுமார் 50 கோடி வசூலை குவித்தது .

ஜெயிலர் : என்னதான் இந்த ஆண்டு ரிலீஸ் ஆன படங்கள் பல பட்டையை கிளப்பிக் கொண்டு இருந்தாலும், அனைத்துக்குமே பதிலடி கொடுக்கும் வகையில் சமீபத்தில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உள்ளது. தலைவர் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும் இதற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறார்கள். இத்திரைப்படம் வெளியாகி 18 நாட்களிலேயே வசூல் 600 கோடியை தாண்டியது.

Also Read:ரஜினி படத்திற்கு நாள் குறித்த லோகேஷ் கனகராஜ்.. அப்டேட்டுகளில் அதிரடி கிளப்பும் சூப்பர் ஸ்டார்

Trending News