வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

2023ல் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட 6 படங்கள்.. விட்டதை பிடித்த ஷாருக்கான்

இந்திய சினிமாவிற்கு ஓடிடி தளம் என்பது கொரோனா காலத்தில் தான் அதிகமாக பரீட்சையமானது. அதன் பின்னர் கடந்த மூன்று வருடங்களாக இந்திய திரைப்படங்களின் மிகப்பெரிய பொருளாதார மூலதனமாக இருப்பது இந்த ஓடிடி தளங்கள் தான். அந்த வரிசையில் இந்த 2023 ஆம் ஆண்டு முக்கியமான ஆறு படங்கள் சினிமா ரசிகர்களால் அதிகமாக பார்க்கப்பட்டு இருக்கிறது.

வாரிசு: கடந்த ஐந்து வருட சினிமாவில் தளபதி விஜய்க்கு கொஞ்சம் டல் அடித்த படம் என்றால் அது வாரிசு தான். தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த இந்த படம் பொங்கல் அன்று ரிலீஸ் ஆகி அவருடைய ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தியேட்டரில் படம் கொஞ்சம் டல் அடித்தாலும் ஓடிடி தளத்தில் ரசிகர்களால் அதிகம் விரும்பி பார்க்கப்பட்டிருக்கிறது.

Also Read:கொடூரமாக நடிக்கும் அர்ஜுன்.. இணையத்தில் லீக் ஆன லியோ படத்தின் முக்கிய கதாபாத்திரம்

த்ரிஷியம் 2: மோகன்லால் மற்றும் மீனா நடிப்பில் மலையாளத்தில் ரிலீஸ் ஆகி நல்ல வரவேற்பை பெற்ற திரில்லர் திரைப்படம் தான் த்ரிஷியம் . முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகமும் மிகப்பெரிய ஹிட் அடித்தது. அதனை தொடர்ந்து இந்த படம் கன்னடம், தெலுங்கு, இந்தி என அத்தனை மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்தது தான் தமிழில் பாபநாசம் என்னும் பெயரில் இந்த படம் ரீமேக் செய்யப்பட்டது.

வாத்தி: ஹாலிவுட் வரை சென்று வெற்றிக்கொடி நாட்டிய தனுஷுக்கு இந்த வருடம் வெற்றி படமாக அமைந்தது தான் வாத்தி. இந்த படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் எடுக்கப்பட்டு ஒரே நாளில் தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் ரிலீஸ் செய்யப்பட்டது. படத்தின் கருத்து கொஞ்சம் பழசு தான் என்றாலும் தனுஷின் நடிப்பால் மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

Also Read:விஜய்யை வெறுத்து ஒதுக்கிய முக்கிய இயக்குனர்கள்.. நல்லவேளை என் பையன நானே ஹீரோவா காப்பாத்திட்டேன்

ராம் சேது: பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்சய் குமாரின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ராம் சேது. ராமர் பாலம் இயற்கையாக உருவானதா அல்லது ராமரால் கட்டப்பட்டதா என்பதுதான் படத்தின் மையக்கதை. கொஞ்சம் நம்ப முடியாத ஹீரோயிசம் நிறைந்த காட்சிகளுடன் படம் வெளியானது. இந்த படம் தியேட்டரில் சறுக்கும் நிலைமைக்கு வந்தாலும் ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பு பெற்றது.

பதான்: அதல பாதாளத்தில் விழுந்து கிடந்த பாலிவுட் சினிமாவை இந்த வருடம் கை தூக்கி காப்பாற்றியது என்றால் அது பாலிவுட் சூப்பர் ஹீரோ ஷாருக்கான் தான். பதான் திரைப்படம் ரிலீசுக்கு முன்பே பல எதிர்ப்புகளை சந்தித்தது. இருந்தாலும் இந்த படம் உலக அளவில் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் ஓடிடி தளத்திலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

துணிவு: நடிகர் அஜித்குமாரின் கடந்த சில வருட சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது என்றால் அது துணிவு திரைப்படம் தான். கிட்டத்தட்ட எட்டு வருடங்களுக்குப் பின் தளபதி விஜய்யுடன் மோதிய இந்த படம் அஜித்துக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. ஓடிடி தளத்திலும் இந்த படத்தை ரசிகர்கள் அதிகமாக விரும்பி பார்த்து இருக்கிறார்கள்.

Also Read:விஜய் கேட்ட கேள்வியால் வேதனையில் பிரபல நடிகர்.. இப்ப வரை ஆறுதலாக இருக்கும் அஜித்

Trending News