புதன்கிழமை, ஜனவரி 15, 2025

அஜித்தின் சினிமா வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்ட 6 படங்கள்.. நடிப்பில் இன்னொரு பரிமாணத்தை காட்டிய வாலி

நடிகர் அஜித் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவாக இருக்கிறார் இவர் சினிமாவில் வளர்ந்து வந்த காலத்தில் காதல் மன்னன் என்று கூட அழைக்கப்பட்டார். அப்போது அவருக்கு நல்ல படங்கள் சிறந்த கதையுடன் அமைந்தன அந்த படங்கள் தான் இன்று அவர் எத்தனை தோல்வி படங்கள் கொடுத்தாலும் சிறந்த நடிகராகவும் முன்னணியிலும் இருப்பதற்கு காரணம்.

ஆசை: இயக்குனர் வசந்த் இயக்கத்தில் 1995 ஆம் ஆண்டு அஜித் நடித்த திரைப்படம் தான் ஆசை. இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் பாடல்களும் தான். மேலும் அஜித் மற்றும் சுவலட்சுமியின் காதல் காட்சிகள் இன்று வரை ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது. இந்த படம் அஜித்துக்கு வெற்றி படமாக அமைந்தது.

Also Read: ஹீரோக்களால் காமெடி பீஸ் ஆன 5 வில்லன்கள்.. விவேக் ஓபராயை பங்கம் செய்த அஜித்

வாலி: புதுமுக இயக்குனர் எஸ் ஜே சூர்யாவை நம்பி அஜித் நடித்த திரைப்படம் தான் வாலி. அவர் முதன் முதலில் இரட்டை வேடத்தையும் மற்றும் நெகட்டிவ் கேரக்டரையும் முயற்சி செய்திருந்தார். அவர் புதிதாக முயற்சி செய்த அனைத்துமே இந்த படத்தில் அவருக்கு வெற்றியாக அமைந்தது. சொல்லப்போனால் வாலி திரைப்படம் அஜித்தின் சினிமா வாழ்க்கையை மற்றொரு பரிணாமத்திற்கு கொண்டு சென்றது.

காதல் கோட்டை: இயக்குனர் அகத்தியன் இயக்கத்தில் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய திரைப்படம் காதல் கோட்டை. இந்த படம் நடிகர் அஜித் மற்றும் நடிகை தேவயானிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. காதல் கோட்டை திரைப்படத்திற்கு பிறகு தான் அஜித்துக்கு அடுத்தடுத்து காதல் திரைப்படங்களும் அமைந்தன.

Also Read:இவங்கள தவிர இந்த 6 வில்லன் ரோலில் யாராலும் நடிக்க முடியாது.. போலீசாக இருந்து மங்காத்தா ஆடிய அஜீத்

காதல் மன்னன் : இயக்குனர் சரண் இயக்கத்தில் அஜித் நடித்து வெளியான திரைப்படம் தான் காதல் மன்னன். இந்த படத்திற்கு பிறகு தான் அஜித்திற்கு காதல் மன்னன் என்னும் பெயரும் வந்தது. மேலும் இந்த படத்தின் பாடல்கள் அனைத்துமே அன்றிலிருந்து இன்று வரை ரசிகர்களால் விரும்பப்படுகிறது.

அவள் வருவாளா: இயக்குனர் மற்றும் நடிகர் ராஜ்கபூர் இயக்கத்தில் அஜித் மற்றும் சிம்ரன் நடித்த திரைப்படம் அவள் வருவாளா. இந்த படம் அஜித்துக்கு மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. மேலும் இந்த படத்தில் அஜித், காமெடி நடிகர்கள் கவுண்டமணி மற்றும் செந்தில் உடன் இணைந்து நகைச்சுவையில் கலக்கியிருப்பார்.

ஆனந்த பூங்காற்றே: அவள் வருவாளா திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் அஜித், இயக்குனர் ராஜ்கபூருடன் ஆனந்த பூங்காற்றே என்னும் திரைப்படத்தில் மீண்டும் இணைந்தார். இந்த படத்தில் அஜித்துடன் அப்போதைய முன்னணி நட்சத்திரங்களான கார்த்திக் மற்றும் நடிகை மீனா நடித்திருந்தனர். இந்த படமும் அஜித்தின் தொடர் வெற்றி படங்களின் லிஸ்ட்டில் சேர்ந்தது.

Also Read: அஜித், நயன்தாராவை ஒதுக்க இதுதான் காரணமா..? தயாரிப்பாளர்களை பரிதவிக்க விடும் லேடி சூப்பர் ஸ்டார்

Trending News