வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்த வார டிஆர்பியை பொளந்து கட்டிய டாப் 6 சீரியல்கள்.. மீண்டும் விட்ட இடத்தை பிடித்த சில்வண்டு

Serial TRP Rating: ஒவ்வொரு வாரமும் சின்னத்திரை ரசிகர்களுக்கு எந்த சீரியல் பிடித்திருக்கிறது என்பதை அந்த வார டிஆர்பி ரேட்டிங் மூலம் தெரிந்துவிடும். அந்த வகையில் இந்த வாரத்திற்கான டிஆர்பி ரேட்டிங் லிஸ்ட் தற்போது வெளியாகி இணையத்தில் கலக்கிக் கொண்டிருக்கிறது. இதில் கடந்த வாரம் விட்ட இடத்தை மறுபடியும் சன் டிவியின் சில்வண்டு பிடித்து மாஸ் காட்டியுள்ளது.

இந்த வார டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் 6-வது இடத்தில் சன் டிவியின் இனியா சீரியல் உள்ளது. இதில் கத்தியால் குத்தப்பட்ட இனியா உயிருக்கு போராடுகிறார், அவரை எப்படியாவது விக்ரம் காப்பாற்ற துடிதுடிக்கும் காட்சி  இந்த வாரம் முழுவதும் சீரியலை கூடுதல் பரபரப்பாகியது. அதைப்போல் 5-வது இடத்தில் கலெக்டராக மாஸ் காட்டிக் கொண்டிருக்கும் சன் டிவியின் சுந்தரிக்கு கிடைத்திருக்கிறது.

4-வது இடத்தில் சன் டிவியின் எதிர்நீச்சல் உள்ளது. கடந்த வாரம் எதிர்நீச்சல், டிஆர்பி-யில் முதல் இடத்தை பிடித்தது. ஆனா இந்த வாரத்தில் கொஞ்சம் சுவாரசியம் குறைவு என்பதால், மறுபடியும் நான்காவது இடத்திற்கு விரட்டியடிக்கப்பட்டது. இதில் ஒரு வழியாக தர்ஷினியை தேடிப்பிடித்து குணசேகரின் முகத்திரையை ஜீவானந்தம் மற்றும் ஈஸ்வரி இருவரும் கிழித்து விட்டனர்.

Also Read: ஜீவானந்தத்தை குழி தோண்டி புதைக்க பிளான் பண்ணிய குணசேகரன்.. ஞான சூனியமாக மாறிய ரேணுகாவின் கணவர்

டிஆர்பி-யில் முதல் 6 இடத்தையும் பிடித்த ஒரே சேனல்

மேலும் 3-வது இடத்தில் அண்ணன் தங்கையின் பாச போராட்டத்தை காண்பித்துள்ள சன் டிவியின் வானத்தைப்போல சீரியல் உள்ளது. இதில் தங்கை பொன்னியின் விஷயத்தில் மறைந்திருக்கும் மர்மங்கள் என்னவென்று அண்ணன் சின்ராசு-க்கு  மறைக்கும் விதமாக பொன்னி செய்யும் ஒவ்வொரு விஷயமும் லாஜிக்கே இல்லாமல் போவது தான் கொஞ்சம் இடிக்கிறது.

மேலும் 2-வது இடத்தில் சன் டிவியின் கயல் சீரியல் உள்ளது. இதில் சில வாரங்களாக கோமா ஸ்டேஜில் இருந்த கயல் தன்னுடைய வீட்டிற்கு வந்து, பெரியப்பாவின் சூழ்ச்சியில் இருந்து தங்கையின் குடும்பத்தை காப்பாற்றி விட்டார். இனிமேலாவது கயல், எழிலின் திருமணத்தை நடத்தினால் நல்லா இருக்கும் என்று சீரியல் ரசிகர்கள் விரும்புகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக முதல் இடத்தில் சன் டிவியின் சிங்கப்பெண்ணே சீரியல் உள்ளது. கடந்த வாரம் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட சிங்கப்பெண்ணே மறுபடியும் தன்னுடைய முதல் இடத்தை இந்த வாரம் தக்க வைத்துள்ளது. இதில் சில்வண்டு போல் இருக்கும் கதாநாயகி ஆனந்தியை பைத்தியக்காரத்தனமாக  சுற்றி வருகிறார் அன்பு. அதே சமயத்தில் மித்ரன் செய்கிற காரியத்தால் மகேசுக்கும் ஆனந்திக்கும் என்ன நிகழப்போகிறது என்ன தெரியாமல் இந்த சீரியலை வேற ட்ராக்கில் கொண்டு போக பார்க்கின்றனர்.

இவ்வாறு இந்த மாதிரி டிஆர்பி-யில் டாப் 6 இடத்தை சன் டிவியின் ஆறு சீரியல்கள் தான் ஆக்கிரமித்துள்ளது. இதுவரை டிஆர்பி-யில் சன் டிவியுடன் விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, பாக்கியலட்சுமி போன்ற சீரியல்கள் கடும் போட்டி போடும். அதேபோல் தான் ஜீ தமிழின் கார்த்திகை தீபம் சீரியலும் எப்படியாவது டிஆர்பி-யில் முன்னுக்கு வர பார்க்கும். ஆனால் இந்த வாரம்  விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் சீரியல்களை ஓரங்கட்டி விட்டு சன் டிவியின் சீரியல்தான் முதல் ஆறு இடத்தையுமே பிடித்துள்ளது. 

Also Read: ரோகினிடம் சிக்கிய முத்து, குடும்பத்திற்கு தெரிய வரும் உண்மை.. ரவிக்கு மாமியார் கொடுக்கும் டார்ச்சர்

Trending News