புதன்கிழமை, ஜனவரி 22, 2025

டிஆர்பி-யில் முதல் 6 இடத்தை பிடித்த சீரியல்கள்.. சிவகாசி ராக்கெட் போல பட்டாசை தெறிக்கவிடும் விஜய் டிவி

Top 6 serials in TRP: பொதுவாக சீரியல் என்றாலே அது சன் டிவி தான் என்று சொல்லும் அளவிற்கு தாத்தா பாட்டி காலத்தில் இருந்து இப்பொழுது வரை ஒய்யாரத்தில் இருக்கிறது.

அதிலும் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் டாப் 6 இடத்தை எப்பொழுதுமே சன் டிவி தான் ஆக்கிரமித்துக் கொள்ளும். ஆனால் கடந்த இரண்டு வாரங்களாக சன் டிவியுடன் முட்டி மோதி டாப் 6 இடத்திற்குள் விஜய் டிவி புகுந்து விட்டது. அதைப் பற்றி தற்போது பார்க்கலாம்.

இனியா: இனியா மற்றும் விக்ரமை பிரிக்கும் முயற்சியில் நல்ல சிவம் பல சூழ்ச்சிகளை பண்ணி வருகிறார். இதற்கு இடையில் விக்ரம், இன்ஸ்பெக்டர் தீனதயாளனிடமிருந்து வேலையை பிடுங்கி விட்டால் அவருடைய ஆட்டம் குறைந்து விடும். இதற்கான வேலையில் விக்ரம் முழு முயற்சியுடன் செயல்பட்டு வருகிறார். இந்த நாடகம் 7.49 புள்ளிகளை பெற்று ஆறாவது இடத்தில் இருக்கிறது.

டாப் 5-குள் நுழைந்த விஜய் டிவி சீரியல்

வானத்தைப்போல: பொன்னியின் சதியால் சிக்கி தவித்துக் கொண்டு வருகிறார் துளசி. இது தெரியாமல் பொன்னியை நம்பிக் கொண்டு சின்ராசு தங்கையின் வாழ்க்கைக்காக போராடி வருகிறார். இந்த கதை மட்டமாக இருந்தாலும் எப்பொழுதுமே 7.73 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தை தக்க வைத்துக் கொள்கிறது.

சிறகடிக்க ஆசை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சீரியல்களில் எந்த ஒரு சீரியல்தான் டாப் 6 இடத்திற்குள் போயிருக்கிறது. அதற்கு காரணம் இந்த நாடகத்தில் நடிக்கும் ஒவ்வொரு காதாபாத்திரங்களும் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார்கள்.

அந்த வகையில் பிச்சை எடுத்தாவது கோடீஸ்வரனாக மாறிவிட வேண்டும் என்று மனோஜ் பிச்சை எடுக்க ஆரம்பித்து விட்டார். அப்படிப்பட்ட இந்த நாடகம் 8.19 புலிகளைப் பெற்று நான்காவது இடத்தை அடைந்திருக்கிறது.

எதிர்நீச்சல்: எப்படி இருந்த சீரியல் இப்படி ஆகிவிட்டதே என்று மக்கள் புலம்பும்படியாக கதை தடுமாறி வருகிறது. ஒண்ணா இரண்டா எத்தனை பிரச்சனைகள் தான். புதுசு புதுசாக கதையை மாற்றிக் கொண்டு தத்தளிக்கும் எதிர்நீச்சல் சீரியல் 8.67 புள்ளிகளைப் பெற்று மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

கயல்: ஒரு குடும்பம் இருக்கிறது என்றால் பிரச்சனை இருக்க தான் செய்யும். ஆனால் பிரச்சனை மட்டுமே குடும்பமாக இருப்பது இந்த கயல் சீரியலில் தான் பார்க்க முடிகிறது. இதுல குடும்பத்துக்காக அனைத்து பொறுப்பையும் தலையில் தூக்கி வைத்து சிறந்த பெண்மணி ஆக கயல் அனைத்து பாரங்களையும் சுமந்து வருகிறார். அப்படிப்பட்ட இந்த நாடகம் 8.92 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

சிங்க பெண்ணே: அழகன் யார் என்று தெரியாமல் புதுசாக நுழைந்த நந்தா தான் அழகன் என்று நம்பும் படியான காட்சிகள் அமையப்போகிறது. இதற்கு இடையில் மகேஷ் அவருடைய காதலை வெளிப்படுத்தும் விதமாக ஆனந்தியை நெருங்கப் போகிறார். அதே மாதிரி நான்தான் அழகன் என்று சொல்ல முடியாமல் அன்பு தவித்து வரப் போகிறார். அப்படிப்பட்ட இந்த நாடகம் ஆரம்பித்த நாளிலிருந்து இப்பொழுது வரை முதல் இடத்தை பிடித்து டிஆர்பி ரேட்டிங்கில் 9.46 புள்ளிகளைப் பெற்று இருக்கிறது.

Trending News