ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

பலான படங்களில் நடித்த 6 முன்னணி ஹீரோக்கள்.. உலகநாயகன் நடித்த அந்த மலையாள படம்

6 Actors who were acted in A content movies: பொதுவாக வளர்ந்து வரும் ஹீரோக்கள் தங்களுடைய படங்களில் சர்ச்சைக்குரிய காட்சிகளில் நடிக்க மாட்டார்கள். இதற்கு முக்கிய காரணம் பெண் ரசிகைகளின் ஆதரவு போய்விடும் என்ற அச்சம் தான். ஆனால் சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலத்தில் இது போன்ற படங்களில் நடித்தால் அதிக கவனம் பெறுவோம் என்ற நினைப்பில் பலான படங்களில் நடித்த ஹீரோக்களும் இருக்கிறார்கள்.

ஹரிஷ் கல்யாண்: தற்போதைய தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வரும் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் நடித்த பியார் பிரேமா காதல், இதயராஜாவும் இஸ்பேடு ராணியும் போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றிருக்கின்றன. ஆனால் இவருடைய அறிமுக படமே கொஞ்சம் கோல்மாலான கதை தான். சிறிய வயதிலேயே காதல் திருமணம் செய்து கொள்ளும் ஹீரோ, கல்லூரி படிப்பிற்கு சென்ற பிறகு ஹீரோயினுக்கு மாமனார் மீது ஏற்படும் காதல் என ரொம்பவும் சர்ச்சையை கிளப்பியது சிந்து சமவெளி படம்.

ஜி வி பிரகாஷ்: இசையமைப்பில் எந்த அளவுக்கு பெயரும் புகழும் பெற்றிருந்தாரோ அதை நடிப்பின் மூலம் அப்படியே கெடுத்துக் கொண்டார் ஜிவி பிரகாஷ். இவர் நடிப்பில் வெளியான நிறைய படங்கள் A கண்டெண்ட் காட்சிகளாகத்தான் இருந்தது. அதிலும் திரிஷா இல்லனா நயன்தாரா, பேச்சுலர் போன்ற படங்கள் குடும்பத்துடன் பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது.

Also Read:தனுசுக்கு ஜோடியாகும் அஜித்தின் மகள்.. 22 வயது வித்தியாசம், கதாநாயகியாக என்ட்ரி கொடுக்கும் பியூட்டி குயின்

ஆதி: நடிகர் ஆதி தமிழ் சினிமாவில் அதிக அளவு எண்ணிக்கையிலான படங்களை கொடுக்கவில்லை என்றாலும், நடித்த அத்தனை படங்களுமே அவருக்கு அடையாளத்தை கொடுத்திருக்கின்றன. ஆனால் அவர் சினிமாவுக்கு வந்த புதிதில் எய்ட்ஸ் நோயை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மிருகம் என்ற படத்தில் நடித்திருந்தார். விழிப்புணர்வு என்ற பெயரில் அந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் குடும்பத்தோடு பார்க்க முடியாத அளவுக்கு இருந்தது.

தனுஷ்: நடிகர் தனுஷ் அசுரன், வடசென்னை, ஆடுகளம் போன்ற பல பிரம்மாண்ட படங்களின் மூலம் இன்று தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நம்பிக்கை நாயகனாக இருக்கிறார். ஆனால் இவர் அறிமுகமான படமே சர்ச்சையான ஒன்றுதான். பள்ளி பருவத்தில் வரும் காதல், அதை தொடர்ந்து நடக்கும் சம்பவங்கள் என முகம் சுளிக்கும் அளவிற்கு இந்த படத்தின் காட்சிகள் இருந்தது.

Also Read:அட்ஜஸ்ட்மென்ட்காக நடிகைகளை ஜோடியாக்கும் நடிகர்.. ஷகிலாவிடம் வண்டவாளத்தை புட்டு புட்டு வைத்த நடிகை

துருவ் விக்ரம்: நடிகர் சீயான் விக்ரம், எப்படியாவது தன் மகனை சினிமாவில் வளர்த்து விட வேண்டும் என்று ஆரம்பத்திலிருந்து பயங்கர முனைப்புடன் செயல்பட்டு வந்தார். ஆனால் அவர் துருவ் விக்ரமை அறிமுகப்படுத்திய படத்தில் தான் எல்லாமே தப்பாகிவிட்டது. அர்ஜுன் ரெட்டி படத்திற்கு ஏற்கனவே கலவையான விமர்சனங்கள் இருந்து வந்த நிலையில் அதே படத்தை ஆதித்ய வர்மா என்ற பெயரில் எடுத்து அதிக காதல் காட்சிகள், முகம் சுளிக்க வைக்கும் அளவுக்குமான காட்சிகள் என துருவ் விக்ரமின் முதல் படம் சர்ச்சையாக தான் இருந்தது.

கமலஹாசன்: உலக நாயகன் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாகவும், குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் ஆரம்ப கட்டத்தில் நடித்து வந்தார். அவர் முதன்முதலாக சோலோ ஹீரோவாக நடித்தது மலையாளத்தில் தான். அந்த படத்தின் பெயர் கன்னியாகுமரி. காதல் கதையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாக இருந்தாலும், இந்த படம் முழுக்க வரும் காதல் காட்சிகள் முகம் சுளிக்கும் அளவிற்கு இருக்கும்.

Also Read:அதிக திறமை இருந்தும் காணாமல் போன 6 நடிகர்கள்.. வந்த சுவடு தெரியாமலே மறைந்து போன நாடோடிகள் பட பிரபலம்

Trending News