வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

திருநங்கையாக நடித்துக் மலைக்க வைத்த டாப் 6 ஹீரோக்கள்.. அப்படியே வாழ்ந்து காட்டிய சூப்பர் டீலக்ஸ் ஷில்பா

தரமான படங்களில் நடித்தால் போதும் என எவ்வித தயக்கமின்றி திருநங்கை கெட்டப்பில் நடித்த டாப் 6 நடிகர்கள் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டார்கள். அதிலும் சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா கேரக்டரில் விஜய் சேதுபதி வாழ்ந்து காட்டியிருப்பார்.

பிரகாஷ் ராஜ்: 2000 ஆம் ஆண்டில் வசந்த் இயக்கத்தில் அதிரடி காதல் திரைப்படம் ஆக வெளியான அப்பு என்கின்ற படத்தில் பிரசாந்த், தேவயானி ஜோடி சேர்ந்து நடித்திருப்பார்கள். இவர்களுக்கு வில்லியாக பிரகாஷ்ராஜ் திருநங்கை கெட்டப்பில் நடித்து அசத்தியிருப்பார். அதிலும் இவருடைய லுக், முக பாவனை அனைத்தும் அச்சு அசல் திருநங்கையை பிரதிபலித்தது. அதிலும் இவருடைய கொடூரமான வில்லத்தனமும் வெளிப்பட்டது தான் ஹைலைட்.

சரத்குமார்: 2011 ஆம் ஆண்டு ராகவா லாரன்ஸ், கோவை சரளா, தேவதர்ஷினி, லட்சுமி ராய் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான காஞ்சனா படத்தில் சரத்குமார் திருநங்கை கேரக்டரில் நடித்திருப்பார். இதில் சரத்குமார் கொடூரமான பேயாக மாறி படத்தை பார்ப்போரை மிரள விட்டிருப்பார்.

Also Read: இந்தமுறை ராகவா லாரன்ஸ் பேயை வைத்து இயக்கவில்லை.! பின்பு எதை எடுக்கிறார் தெரியுமா?

ராகவா லாரன்ஸ்: 2011 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் ஹிட் படமான காஞ்சனா படத்தில் கதாநாயகனாக நடித்த ராகவா லாரன்ஸ், படத்தில் பேய் தன்னில் புகுந்தவுடன் திருநங்கையாக மாறி தன்னுடைய கொடூரமான நடிப்பை வெளிக்காட்டி இருப்பார். இந்தப் படத்தின் மூலம் ராகவா லாரன்ஸுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது

ஜெயம் ரவி: ரொமான்டிக் ஹீரோவாக தமிழ் சினிமாவில் வலம் வந்த ஜெயம் ரவி 2013 ஆம் ஆண்டு அமீர் எழுதி இயக்கிய ஆதிபகவான் படத்தில் திருநங்கை கெட்டப்பில் நடித்திருப்பார். இதுவரை நடித்த மற்ற நடிகர்கள் திருநங்கையாக மாறிய போது அவர்களது சிகை மற்றும் உருவத்தோற்றத்தை மாற்றி இருப்பார்கள். ஆனால் ஜெயம் ரவி கதாநாயகனாக இருக்கும்போது என்ன லுக்கில் இருப்பாரோ அதேபோலவே திருநங்கை கெட்டப்பிலும் தன்னுடைய நடிப்பில் மட்டுமே பெண்மையை வெளிப்படுத்தியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.

விஜய் சேதுபதி: என்ன கதாப்பத்திரம் கொடுத்தாலும் நடிக்க தயார் என தமிழ் சினிமாவில் ஆல் ரவுண்டராக கலக்கி கொண்டிருக்கும் விஜய் சேதுபதி, 2019 ஆம் ஆண்டு வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் ஷில்பா கேரக்டரில் திருநங்கையாகவே வாழ்ந்து காட்டிருப்பார். இதில் திருமணமான விஜய் சேதுபதி, மனைவி குழந்தைகள் இருக்கும்போதே திடீரென்று அவர் திருநங்கையாக மாறியதால் ஊரை வீட்டே ஓடி விடுவார். அதன் பிறகு முழுக்க திருநங்கையாக மாறிய விஜய் சேதுபதி, மறுபடியும் தன்னுடைய மனைவி மற்றும் மகனை பார்ப்பதற்காக ஊருக்கு வருவது தான் இந்த படத்தின் கதை.

Also Read: எல்லை மீறிய லிப் லாக் காட்சியில் ராசி கன்னா.. என்னது விஜய் சேதுபதியும் இதுக்கு உடந்தையா

விக்ரம்: தமிழ் சினிமாவில் படிப்படியாக முன்னேறிய விக்ரம், தான்நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் வித்தியாசம் காட்டிக் கொண்டிருக்கிறார். அதிலும் இரட்டை வேடத்தில் நடித்த இருமுகன் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் தோன்றியிருப்பார். இதில் வில்லனாக தோன்றிய விக்ரம் திருநங்கை கெட்டப்பில் மிரட்டலான நடிப்பை வெளிக்காட்டி பார்ப்போரை மலைக்கச் செய்திருப்பார். மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த நயன்தாராவிற்கே டஃப் கொடுக்கும் வகையில், திருநங்கையாக நடித்த விக்ரமின் லுக் அமைந்திருக்கும்.

இவ்வாறு இந்த 6 டாப் நடிகர்களும் தன்னுடைய படங்களில் திருநங்கை கதாபாத்திரமாக இருந்தாலும் முக சலிப்பும் சஞ்சலமுமின்றி தங்களுடைய அல்டிமேட் நடிப்பை வெளிக்காட்டி இருப்பார்கள். இதனால் ரசிகர்களின் மத்தியிலும் இவர்கள் திருநங்கையாக நடித்த படங்கள் சூப்பர் ஹிட் ஆனது.

Also Read: கடன் தொல்லையிலும் நண்பனுக்காக ரிஸ்க் எடுத்த சிவகார்த்திகேயன்.. நயன்தாரா பட இயக்குனருடன் கூட்டணி

Trending News