சமீபத்தில் வெளியான காந்தார திரைப்படம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடமும் பாராட்டை பெற்றது. பொதுவாக சஸ்பென்ஸ், த்ரில்லர் நிறைந்த படங்களை எல்லா தரப்பை சார்ந்த மக்களும் ரசித்து பார்ப்பார்கள். த்ரில்லர் படத்தில் தான் ஒரு சுவாரசியம் இருக்கும். காந்தார போன்ற சுவாரஸ்யம் நிறைந்த 7 படங்கள் இருக்கின்றன. இந்த படங்களை கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பார்க்க வேண்டும்.
ITTEFAQ: சித்தார்த் மல்ஹோத்ரா மற்றும் சோனாக்சி சின்ஹா நடிப்பில் 2017 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம் ITTEFAQ. இந்த படத்தை கௌரி கான் தயாரித்திருந்தார். ஒரு இரட்டைக் கொலையை மையப்படுத்தி அமைந்த கதை. இறுதிக்காட்சி வரை த்ரில்லிங்காக இருக்கும். இந்த படம் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
Also Read: சீட்டின் நுனியில் உட்கார வைக்கும் 7 திரில்லர் படங்கள்.. வெறித்தனமாக நடித்த சத்யராஜ்
எ டெத் இன் தி கஞ்ச்: 2016 ஆம் ஆண்டு இந்தியில் ரிலீசான திரைப்படம் எ டெத் இன் தி கஞ்ச். 1970 ல் நடக்கும் பீரியட் கதை இது. தன்னுடைய அப்பாவின் மரணத்தை குறித்து விசாரணை நடத்தும் மகன், அப்போது நடக்கும் எதிர்பாராத திருப்பங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம். இந்த படம் அந்த வருடத்திற்கான பிலிம் பேர் விருதுகளை அள்ளிக் குவித்தது.
புல் புல்: 2020 ஆம் ஆண்டு ஹிந்தியில் ரிலீசான த்ரில்லர் திரைப்படம் புல் புல். இந்த படத்தை அனுஷ்கா ஷர்மா தயாரித்திருந்தார். 20ம் நூற்றாண்டில் நடக்கும் பீரியட் கதை இது. ஒரு கிராமத்தில் ஆண்கள் மர்மமான முறையில் இறக்கின்றனர். இந்த மரணத்திற்கான காரணத்தை கண்டுபிடிக்கும் கதை இது. பல சஸ்பென்ஸ் நிறைந்த இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.
ஏகே vs ஏகே: அனில்கபூர் மற்றும் அனுராக் கஷ்யப் நடிப்பில் 2020 ஆம் ஆண்டு ரிலீசான திரைப்படம். பிளாக் காமெடியை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட த்ரில்லர் திரைப்படம். ஒரு நடிகரின் மகளை, தோல்வி பட இயக்குனர் கடத்தி சென்று விடுகிறார். மகளை கண்டுபிடிக்கும் தந்தையின் பாசப் போராட்டம் தான் இந்த படத்தின் கதை.
Also Read: அந்த காலத்திலேயே அனைவரையும் மிரள வைத்த 7 த்ரில்லர் படங்கள்.. லிங்க் இருக்கு பயப்படமான பாருங்க
தும்பாட்: 1981 லிருந்து 1947 க்குள் , மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தும்பாட் என்னும் கிராமத்தில் நடக்கும் கதை. இந்த படம் பீரியட் த்ரில்லர் படம் ஆகும். ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள் அமானுஷ்ய சக்திகள் பாதுகாக்கும் புதையலை தேடி செல்லும் போது நடக்கும் திகில் நிறைந்த படம்.
ராத் அகேலி ஹே: ராத் அகேலி ஹே 2020 ஆம் ஆண்டு ஹிந்தியில் ரிலீசான த்ரில்லர் திரைப்படம் ஆகும். ஒரு வீட்டில் திருமணம் முடிந்த அன்றே அந்த வீட்டின் பெரியவர் ஒருவர் கொல்லப்படுகிறார். அந்த கொலையை கண்டுபிடிக்கும் போது நடக்கும் த்ரில்லர் சம்பவங்கள் தான் இந்த படம். இந்த படத்தில் நவாசுதீன் சித்திக் மற்றும் ராதிகா ஆப்தே முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
ஆரண்ய காண்டம்: ஆரண்ய காண்டம் இயக்குனர் தியாகராஜன் குமாரராஜா இயக்கிய திரைப்படம் ஆகும். ஆறு பேர் வாழ்க்கையில் ஒரு நாள் நடக்கும் சம்பவம் தான் இந்த திரைப்படத்தின் கதை. போதைப் பொருள் காணாமல் போவதால் நடக்கும் கேங் வாரை மையமாக கொண்டது.
Also Read: மிஸ் பண்ண கூடாத 6 த்ரில்லர் தமிழ் படங்கள்.. முதல்ல அந்த படத்த பாருங்க