வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

நடிப்பின் ராட்சசி என ஜோதிகா நிரூபித்த 8 படங்கள்.. வாழ்நாளில் மறக்க முடியாத சந்திரமுகி

நடிப்பு ராட்சசி ஜோதிகா தன்னுடைய திறமையை படை சாற்றும் விதமாக பல படங்களை கொடுத்துள்ளார். முன்னணி நடிகையாக இருந்த போதே நடிகர் சூர்யாவை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்த ஒதுங்கி விட்டார். தற்போது மீண்டும் கம்பேக் கொடுத்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்த வருகிறார். அவ்வாறு ஜோதிகா தன்னை நிரூபித்த 8 படங்களை இப்போது பார்க்கலாம்.

மொழி : ஜோதிகா, பிரிதிவிராஜ், பிரகாஷ்ராஜ், சொர்ணமால்யா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் மொழி. இப்படத்தில் காது கேட்காத வாய் பேச முடியாத பெண்ணாக தன்னுடைய சிறந்த நடிப்பை ஜோதிகா வெளிப்படுத்தியிருந்தார். ரசிகர்கள் மத்தியில் இப்படம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றிருந்தது.

Also Read : ஜோதிகாவுடன் கிசுகிசுக்கப்பட்ட 3 பிரபலங்கள்.. அந்த ஸ்டைலிஷ் இயக்குனரை ஜெயித்து காட்டிய சூர்யா

36 வயதினிலே : சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, ரகுமான், அபிராமி நடிப்பில் வெளியான திரைப்படம் 36 வயதினிலே. இல்லத்தரசிகளுக்கும் கனவிருக்கிறது அவர்களாலும் சாதிக்க முடியும் என மற்ற பெண்களுக்கு முன்னுதாரணமாக இப்படத்தில் ஜோதிகா நடித்திருந்தார். இப்படத்தின் மூலம் அனைவரது பாராட்டையும் ஜோதிகா பெற்றார்.

உடன்பிறப்பே : சரவணன் இயக்கத்தில் சூர்யா தயாரிப்பில் ஜோதிகா, சசிகுமார், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் உடன்பிறப்பே. அண்ணன், கணவன் இடையே ஏற்படும் சண்டையால் பாசப் போராட்டத்தில் தவிக்கும் ஒரு பெண்ணாக ஜோதிகா இப்படத்தில் நடித்திருந்தார்.

சந்திரமுகி : வாசு இயக்கத்தில் வெளியான சந்திரமுகி படத்தில் ரஜினி, பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு மற்றும் பலர் நடித்திருந்தனர். சந்திரமுகியாக ஜோதிகா மிரட்டி இருந்தார். இப்படத்தில் அவரது நடிப்பை பார்த்து பலரும் பிரமித்து போயிருந்தனர்.

Also Read : திருமலை படப்பிடிப்பில் விஜய்யை ஒதுக்கி வைத்த ஜோதிகா.. காரணம் சூர்யாவா?

பொன்மகள் வந்தாள் : ஜோதிகா, பார்த்திபன், பாக்யராஜ் மற்றும் பல நடிப்பில் வெளியான திரைப்படம் பொன்மகள் வந்தாள். பெண்களுக்கு நடக்கும் அநீதிகளை எடுத்துரைக்கும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டது. இதில் வக்கீல் வெண்பாவாக
ஜோதிகா நடித்த அசத்து இருந்தார்.

ராட்சசி : ஜோதிகா, பூர்ணிமா, பாக்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் ராட்சசி. இப்படத்தில் அநீதிகளுக்கு எதிராக போராடும் பள்ளி தலைமை ஆசிரியராக ஜோதிகா நடித்திருந்தார். இதில் இவரின் ஆளுமை திறமை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நாச்சியார் : ஜோதிகா, ஜிவி பிரகாஷ் மற்றும் பல நடிப்பில் 2018 இல் வெளியான திரைப்படம் நாச்சியார். உதவி கமிஷனர் ஆக ஜோதிகா இப்படத்தில் துணிவான முடிவுகளை எடுக்கும் நாச்சியார் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். தனக்கான அதிகாரத் திமிரை இப்படத்தில் அழகாக காட்டியிருந்தார் ஜோதிகா.

Also Read : 100 நாட்களுக்கு மேல் ஓடிய ஜோதிகாவின் திரைப்படங்கள்.

காற்றின் மொழி : ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா, விதார்த் ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் காற்றின் மொழி. இப்படத்தில் தனக்குப் பிடித்த வேலை செய்வதற்கு குடும்பம் முட்டுக்கட்டை போடுகிறது. ஆனால் அதை எப்படி சமாளித்து அந்த வேலையை ஜோதிகா எப்படி செய்கிறார் என்பதே காற்றின் மொழி.

Trending News