வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

விஸ்வரூபம் எடுக்கும் வாடிவாசல் பஞ்சாயத்து.. சூர்யாவுக்கு பதில் என்ட்ரி ஆகும் ஆஸ்தான நடிகர்

Vaadivaasal-Suriya: கடந்த சில வருடங்களுக்கு முன்பே வெற்றிமாறன், சூர்யா கூட்டணியின் வாடிவாசல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதற்காக சூர்யாவும் காளை மாடுகளுடன் கடுமையாக பயிற்சியை மேற்கொண்டார். அந்த வீடியோ கூட வெளியாகி வைரலானது.

ஆனால் அதன் பிறகு இந்த படம் குறித்த எந்த ஒரு தகவலும் வரவில்லை. வெற்றிமாறனும் விடுதலை படத்தை இயக்கப் போய் தற்போது அது இரண்டு பாகமாக உருவாகி இருக்கிறது. அதன் முதல் பாகம் கடந்த வருடம் வெளியாகி வரவேற்பு பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகமும் தயாராகி இருக்கிறது.

இந்த இடைவெளியில் சூர்யா கங்குவா படத்தில் பிசியானார். இதனால் ரசிகர்கள் தான் பாவம் குழப்பத்தின் உச்சியில் இருந்தனர். தற்போது விடுதலை 2 வெளியாக போகும் நிலையில் மீண்டும் வாடிவாசல் ஆரம்பமாகும் என்ற எதிர்பார்ப்பு அனைவருக்கும் இருந்தது.

Also read: வெற்றிமாறனின் சுற்றுலா செலவு இவ்வளவு? தயாரிப்பாளர் வாரி கொடுத்து தாஜா செய்ய இப்படி ஒரு காரணமா?

ஆனால் இடையில் அமீர் பஞ்சாயத்து விஸ்வரூபம் எடுத்தது. அமீர் நடித்தால் சூர்யா நடிக்க மாட்டார் என்ற தகவலும் வெளியானது. ஆனால் வெற்றிமாறன் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் அமீர் நிச்சயம் நடிப்பார் என அதிரடி காண்பித்தார். பிறகு பல சமரசங்களுக்கு இடையில் சூர்யாவும் வாடிவாசலில் நடிக்க முடிவெடுத்தார்.

ஆனால் இப்போது சூர்யா இதில் நடிக்க மறுத்து விட்டதாக தகவல்கள் கசிந்து உள்ளது. விடுதலை 2 லேட் ஆனதால் சூர்யா, சுதா கொங்கரா படத்தில் நடிக்க முடிவு செய்தார். தற்போது அதன் சூட்டிங் சத்தம் இல்லாமல் தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது. மேலும் வெற்றி மாறன் விஜய்யின் கடைசி படத்தை இயக்குவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் ஒரு தகவல் இருக்கிறது.

இதையெல்லாம் பார்த்த சூர்யா இனிமேல் வாடி வாசலுக்காக காத்திருப்பது வேஸ்ட் என முடிவு செய்துவிட்டாராம். அதனால் தற்போது தனுஷ் இதில் இணைய இருப்பதாக கிசுகிசுக்கப்படுகிறது. அதற்கு தயாரிப்பாளரும் ஓகே சொல்லிவிட்டாராம். ஆக மொத்தம் வெற்றிமாறனின் ஆஸ்தான நடிகர் மீண்டும் ஒரு தேசிய விருதுக்கு தயாராகி இருக்கிறார்.

Also read: சூர்யா கைவிட்ட 4 படங்கள்.. சிங்கத்துக்கு கூட முட்டி மோதி ட்ராப்பான வணங்கான்

Trending News