வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

மரண பயத்தை காட்டிய ஹீரோ.. அவர் நிலைமை வந்துடுமோன்னு பீதியில் உறைந்து போன இயக்குனர்

டாப் ஹீரோவின் அந்த படம் கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. வருட கணக்கில் காத்திருந்த ரசிகர்களும் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நம்பிக்கை இழக்க தொடங்கி விட்டனர்.

அதேபோல் இயக்குனரும் இப்போது மரண பயத்தில் இருக்கிறாராம். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து ஒரு இயக்குனர் கழட்டி விடப்பட்டார். அதன் பிறகு அவர் தட்டு தடுமாறி அடுத்த படத்தை பிடித்ததெல்லாம் தனி கதை.

எங்கே அப்படி ஒரு நிலைமை நமக்கும் வந்து விடுமோ என இயக்குனர் புலம்பி தவிக்கிறாராம். இதற்கு முக்கிய காரணம் தயாரிப்பு தரப்பு மேல் ஹீரோவுக்கு இருக்கும் கோபம் தான்.

தன்னுடைய தேதிகளை வீணடித்து விட்டதால் தற்போது நடிகர் படப்பிடிப்புக்கு வர மாட்டேன் என முரண்டு பிடிக்கிறாராம். இதனால் எங்கே படம் டிராப் ஆகி விடுமோ என்ற பயம் இயக்குனருக்கு வந்து விட்டது.

அப்படி மட்டும் நடந்தால் தன்னுடைய வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும். அதனால் எப்படியாவது நடிகரை சமாதானப்படுத்தி படத்தை முடித்து விட வேண்டும் என்பதில் அவர் இப்போது தீவிரமாக இறங்கி இருக்கிறாராம்.

Trending News