திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

நைட் பார்ட்டி, டூர் என அட்டூழியம் செய்யும் ஆன்ட்டிகள்.. எல்லை மீறிய மனைவியால் நடிகர் எடுத்த முடிவு

Gossip: இப்போது அந்த பிரபல நடிகரின் குடும்ப பஞ்சாயத்து தான் பரபரப்பை கிளப்பி வருகிறது. ஏற்கனவே இசை ஜோடி தங்களுக்குள் சரிப்பட்டு வரவில்லை என நாகரிகமாக பிரிந்து விட்டனர் அதுவே கண் காது மூக்கு வைத்து பேசப்பட்டது.

அந்த பரபரப்பு அடங்குவதற்குள் இந்த நடிகர் மனைவியை பிரியப் போகிறார் என்ற தகவல் அதிர்ச்சியை கிளப்பி இருக்கிறது. இதற்கு பல காரணங்கள் சொன்னாலும் நடிகரின் மனைவிதான் முக்கிய காரணமாக இருக்கிறார்.

திரையுலகை சேர்ந்த பல முன்னாள் ஹீரோயின்களுடன் இவருக்கு நல்ல நட்பு இருக்கிறது. அது மட்டும் இன்றி பிரபலங்களின் மனைவிகள் என எல்லோரும் வார இறுதியானாலே பார்ட்டி, பப் என கொண்டாட ஆரம்பித்து விடுவார்களாம்.

அதில் நடிகரின் மனைவிக்கும் ஆர்வம் அதிகம். அப்படி தன் நண்பர்கள் கூட்டத்துடன் நைட் பார்ட்டி அது இது என இவர் கொஞ்சம் எல்லை மீறி இருக்கிறார். ஆனால் நடிகரோ சிறுவயதிலிருந்து கஷ்டப்பட்டு முன்னேறிய குடும்பத்தைச் சேர்ந்தவர்.

எல்லை மீறிய மனைவி

அதேபோல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார். அப்படிப்பட்டவர் மனைவியின் நடத்தையால் கொஞ்சம் கடுப்பாகி இருக்கிறார். ஆனால் இத்தனை வருடங்கள் காதல் அவர்களை பிரியாமல் சேர்த்து வைத்திருக்கிறது.

ஆனால் சமீபத்தில் நடிகரின் மனைவி வழக்கம் போல பார்ட்டியில் இருந்தபோது மற்றொரு நடிகருடன் நட்பு ஏற்பட்டு இருக்கிறது. அதை தொடர்ந்து இருவரும் அதை மெயின்டெயின் செய்து வந்திருக்கின்றனர்.

இதுதான் தற்போது பிரிவு வரை கொண்டு வந்து விட்டதாம். அதேபோல் நடிகர் மனைவியின் தோழிகளாக இருக்கும் ஆண்ட்டிகளும் எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவது போல் இருந்திருக்கின்றனர்.

இப்படி சிறு மோதல் பெரிய விரிசலாகி இந்த ஜோடி விவாகரத்து முடிவை எடுத்து இருக்கின்றனர். நடிகர் தரப்பிலிருந்து சமாதானப்படுத்தும் முயற்சிகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதற்கு பலன் இருக்குமா என்று தான் தெரியவில்லை.

Trending News