சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கண் கூச வைக்கும் கவர்ச்சி தரிசனத்திற்கு தயாரான நடிகை.. இனிமே இப்படி தானாம்

ஆரம்பத்தில் இலை மறை காயாக கிளாமர் காட்டி வந்த நடிகை இப்போது எல்லாத்துக்கும் தயாராகி விட்டார். இதற்கு முக்கிய காரணம் புது நடிகைகளின் வரவும் அதனால் வாய்ப்பு இல்லாமல் போனதும் தான்.

அதன் காரணமாகவே இந்த பிரைட் நடிகை ஒரு பாடலுக்கு ஆடுவது, வெப்சீரிஸில் லிமிட் தாண்டுவது என கல்லாகட்டி வந்தார். அதிலும் உச்ச நடிகரின் படத்தில் இவர் போட்ட ஆட்டம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது. இதனால் நடிகையின் மார்க்கெட்டும் உயர ஆரம்பித்தது.

அதை கெட்டியாக பிடித்துக் கொண்ட நடிகை தற்போது நடித்து வரும் படத்திலும் கண் கூச வைக்கும் அளவுக்கு கவர்ச்சி தரிசனம் கொடுத்துள்ளாராம். அந்த படம் மட்டும் வரட்டும் என்னுடைய ரேஞ்சே எகிறிவிடும் என நெருக்கமானவர்களிடம் பெருமைப்பட்டும் வருகிறாராம்.

தற்போது படத்தில் இருந்து ஓரிரு போட்டோக்கள் வெளியாகி உள்ள நிலையில் நடிகையை பார்த்து தான் பலரும் மூச்சடைத்து போய் இருக்கின்றனர். அந்த அளவுக்கு கிளாமரில் அவர் தாராளம் காட்டி இருக்கிறார்.

ஆனால் இப்படி கவர்ச்சியில் குதித்த நடிகைகள் காணாமல் போன கதையும் இருக்கிறது. அது தெரியாமல் நடிகை தேவையில்லாத மனக்கணக்கு போட்டு வருகிறார். இதெல்லாம் எங்க போய் முடிய போதோ என திரையுலகில் அம்மணியை பற்றி பேசி வருகின்றனர்.

Trending News